ட்விட்டரின் புதிய 'லைக்' பட்டன், எப்படி இருக்கும் தெரியுமா..?!

Written By:

பிரபல சமூகவலைதளமான ட்விட்டரில் இருக்கும் ஃபேவரட் பட்டனுக்கு, அதாவது ஸ்டார் பட்டனுக்கு இன்றுவரை அதிகப்படியான வரவேற்பு கிடைக்கவில்லை என்பது தான் உண்மை, அதை ட்விட்டர் நிறுவனம் மிகவும் தாமதமாக புரிந்து கொண்டதாய் தெரிகிறது.

மேலும் அதில் சில முக்கியமான மாற்றங்களை செய்ய இருக்கிறது ட்விட்டர் நிறுவனம். அது சார்ந்த தகவல்களை கீழ்வரும் ஸ்லைடார்களில் காணலாம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
ஃபேவரட் பட்டன் :

ஃபேவரட் பட்டன் :

மற்றொரு பிரபல சமூகவலைதளமான ஃபேஸ்புக்கின் லைக் பட்டனை போலவே தான் ட்விட்டரில் இருக்கும் ஃபேவரட் பட்டனும்.

விருப்பம் :

விருப்பம் :

குறிப்பிட்ட போஸ்ட்டின் மீது தங்களுக்கு இருக்கும் விருப்பத்தை தெரிவிக்கவும், அதை தங்களின் ட்விட்டரில் சேமித்து வைத்துக் கொள்ளவும் தான் ஃபேவரட் பட்டன்.

பிரபலம் :

பிரபலம் :

இருப்பினும் ஃபேஸ்புக் லைக் அளவிற்கு மக்களிடம் பிரபலம் அடையாததால் நிறுவனம் தனது பட்டனின் உருவத்தையும் பெயரையும் மாற்ற இருக்கிறது ட்விட்டர்
நிறுவனம்.

இதயம் :

இதயம் :

அதாவது ஸ்டார் உருவத்தில் இருந்து இதயம் போன்ற உருவமாகவும், உடன் ஃபேவரட் என்ற பெயரில் இருந்து லைக் என்ற பெயருக்கும் மாற்றப்பட இருக்கிறது.

மாற்றம் :

மாற்றம் :

மக்கள் ஆயிரம் விடயங்களை லைக் செய்வார்கள் ஆனால் எல்லாமே அவர்களுக்கு ஃபேவரட் ஆக இருக்க முடியாது அதை மனதில் கொண்டுதான் இந்த மாற்றம் நிகழ்த்தப்பட இருக்கிறது என்று கூறியுள்ளது.

ஹார்ட் பட்டன் :

ஹார்ட் பட்டன் :

மேலும் சோதனையின் போது ஹார்ட் பட்டனை மக்கள் மிகவும் விரும்பி உள்ளதாகவும் கூறியுள்ளது.

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் பல தொழில்நுட்ப செய்திகளுக்கு, தொடருங்கள் - தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
ஃபேவரட் பட்டனில் இருந்து லைக் பட்டனுக்கு மாறுகிறது ட்விட்டர். மேலும் படிக்க - தமிழ் கிஸ்பாட்.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot