'ட்விட்டர்' சமூகவலைத்தளம் ஹேக் செய்யப்பட்டது..தகவல்கள் திருட்டு!

Written By:

ஃபேஸ்புக்குக்கு போட்டியாக செயல்பட்டுக்கொண்டிருக்கும் ட்விட்டர் இணையதளம் நேற்று சில விசமிகளால் ஹேக் செய்யப்பட்டது. அதில் 2.5 லட்சம் பயனாளர்களின் தகவல்கள் திருடப்பட்டதாம்.

'ட்விட்டர்' சமூகவலைத்தளம் ஹேக் செய்யப்பட்டது..தகவல்கள் திருட்டு!

மேலைநாடுகள் பெரிதும் பயன்படுத்தும் இந்த தளத்தின் தகவல்கள் திருட்டுபோயிருப்பது அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. நீங்களும் ட்விட்டர் கணக்கை தொடங்கியிருந்தால், உடனே உங்களுடைய கடவுச்சொல்லை மாற்றி விடுங்கள்.

உங்களுடைய ட்விட்டர் பக்கத்திற்குள் நுழைந்தாலே, அது ஹேக் செய்யப்பட்டதா இல்லையா என்ற தகவல்கள் தெரியவரும்.

சமூக வலைத்தளங்களில் உங்களுடைய முக்கியமான தகவல்கள் மற்றும் படங்களை பகிரவேண்டாம். இன்று ட்விட்டருக்கு நடந்த இந்த சம்பவம் நாளை மற்ற சமூக வலைத்தளங்களுக்கும் நடக்கலாம். எனவே கவனமாக இருங்கள் என்பதே எங்களுடைய கருத்து!

More pictures

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot