Twitter முடக்கம்: பதிவுகளை வெளியிட முடியவில்லை என புகார்., நிறுவனம் கூறிய விளக்கம்?
டுவிட்டர் செயலி என்பது பிரதானமான சமூகவலைதள பக்கமாக இருந்து வருகிறது. சமீபத்தில் டுவிட்டர் ஆண்ட்ராய்டு செயலியில் தீங்கு விளைவிக்கும் குறியீடுகள் செலுத்தப்பட்டிருப்பதாக அந்த நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த குறீயீடானது உலகம் முழுக்க டுவிட்டரை ஆண்ட்ராய்டில் பயன்படுத்துபவர்களின் விவரங்களை கசிய செய்து இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

தீங்கு விளைவிக்கும் குறியீடு
டுவிட்டரில் ஏற்பட்டுள்ள தீங்கு விளைவிக்கும் குறியீடு குறித்தும் பாதுகாப்பு பிழை குறித்தும் அந்த நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு அவரவர்கள் மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவித்தது.

ஹேக்கர்கள் உள்நுழைய வாய்ப்பு
இந்த தவறான குறியீட்டின் மூலம் ஒருவரது அக்கவுண்ட் விவரங்கள் ஆகிய தனிநபர் குறித்து ஹேக்கர்கள் அக்கவுண்டுகளை ஹேக் செய்ய வழிவகை செய்யும் என டுவிட்டர் நிறுவனம் தெரிவித்தது.

அதுகுறித்து விளக்கமளிக்கவில்லை
டுவிட்டர் ஏற்பட்டுள்ள பிழை எப்படி ஏற்பட்டது என்பது குறித்தும், இதன் விளைவாக எத்தனை வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்தும் அந்த நிறுவம் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.

மெயில் மூலம் விழிப்புணர்வு
அதேபோல் பிழை சரிசெய்யும் விதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக டுவிட்டர் தெரிவித்தது. அதன்படியே, ஒவ்வொருவர் மின்னஞ்சலுக்கும்(மெயில் ஐடி) தனிதனியாக மெயில் அனுப்பி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. அதேபோல் மற்றொரு நடைமுறையும் தெரிவித்தது.

இதை கட்டாயம் செய்யவும்
ஹேக்கர்கள் ஊடுருவதாக வகையில், தங்களின் டுவிட்டர் ஆண்ட்ராய்டு செயலியை அப்டேட் செய்ய வேண்டும் என அந்நிறுவனம் வலியுறுத்தியது. இந்த பிழை டுவிட்டர் ஐ.ஒ.எஸ். செயலியில் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.

20 நிமிடங்கள் முடக்கம்
டுவிட்டரை கோடிகணக்கானோர் பயன்படுத்தி வரும் நிலையில் நேற்று 20 நிமிடங்களுக்கு அதில் சமூகவலைதள பயன்பாட்டாளர்களால் சீராக பதிவுகளை வெளியிட முடியவில்லை என புகார் எழுந்தது.

காரணம் குறித்து விவரிக்கவில்லை
இதையடுத்து தொழில்நுட்ப பிரச்னையை சரி செய்யும் பணிகள் நடப்பதாக டுவிட்டர் விளக்கம் அளித்தது. இதை தொடர்ந்து, சில நிமிடங்களுக்கு பிறகு அது சீரானது. எனினும் என்ன காரணத்துக்காக தொழில்நுட்ப பிரச்னை நேரிட்டது என்பது குறித்து டுவிட்டர் இதுவரை தெரிவிக்கவில்லை.


Click it and Unblock the Notifications