டிவிட்டர் சிஇஒ ஜேக் டோர்சியின் கணக்கை ஹேக் செய்த மர்மநபர்கள்.!
உலகம் முழுவதும் அதிகளவில் பயன்படுத்தும் ஒரு சமூக வலைதளமாக இந்த டிவிட்டர் உள்ளது, குறிப்பாக இந்த டிவிட்டர் தளத்தில் பல்வேறு புதிய அம்சங்கள் மற்றும் பாதுகாப்பு வசதியையும் சேர்த்த வண்ணம் உள்ளது அந்நிறுவனம்.

நாசி ஜெர்மனிக்கு ஆதரவான கருத்துக்கள்
இந்நிலையில் டிவிட்டர் செயல் அதிகாரியான ஜேக் டோர்சியின் டிவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தற்சமயம் டிவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது, மேலும் ஜேக் டோர்சியின் டிவிட்டர் பக்கத்தில் இருந்து திடீரென
இனவெறி கருத்துக்களும், நாசி ஜெர்மனிக்கு ஆதரவான கருத்துக்களும் பதிவிடப்பட்டன.

கடும் அதிர்சியை இந்த பதிவு ஏற்படுத்தியது
இதனால் ஜேக்டோர்சியை பின் தொடரும் லட்சக்கணக்கான வலைத்தள வாசிகளுக்கு கடும் அதிர்சியை இந்த பதிவு ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

பதிவுகள் நீக்கப்பட்டு விட்டன
ஆனால் சிறுதி நேரத்தில் இந்த பதிவுகள் நீக்கப்பட்டு விட்டன, இருந்தபோதிலும் இது குறித்து விளக்க அளித்த டிவிட்டர் நிறுவனம், ஜேக் டோர்சியின் கணக்கு ஹேக் செய்யப்பட்டுவிட்டதாக விளக்க அளித்தது.

கடுமையாக விமர்ச்சித்து வருகின்றனர்
குறிப்பாக தனது சிஇஒ கணக்கையே பாதுகாப்பாக வைத்திருக்க முடியாத டிவிட்டர் நிறுவனத்தால் எங்கள் கணக்குகளை எவ்வாறு பாதுகாப்பாக வைத்திருக்க முடியும் என்பன போன்ற கேள்விகளை ஏழுப்பிய டிவிட்டர் பயனர்கள் கடுமையாக விமர்ச்சித்து வருகின்றனர்.

மொபைல் எண்
பின்பு டிவிட்டர் நிறுவனம் கூறிய விளக்கத்தில்,தங்களது சொந்த பாதுகாப்பு அமைப்பில் எந்தவித சமரசமும்
செய்யப்படவில்லை எனவும்,டிவிட்டர் கணக்குடன் இணைக்கப்பட்டு இருந்த மொபைல் எண் மூலமாக கணக்கு ஹேக் செய்யப்பட்டுவிட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications