Home
Social media

இனி விளம்பர பிரச்சாரங்களை டிவிட்டரில் யார் வேண்டுமானாலும் பார்க்கலாம்!

பயனர்களின் தனியுரிமைக்கு சிக்கல் ஏற்படுத்தும் வகையிலான பல்வேறு பிரச்சனைகளை சமூக இணையதளங்கள் அதிகளவில் சந்தித்து வருகின்றன.

By Jijo Gilbert

இப்போது டிவிட்டரில் பயனர் பெயர்களின் அடிப்படையில் தேடி, முழு விளம்பர பிரச்சாரங்களை (விளம்பர டிவிட்கள்) பார்க்கும் வசதியை பயனர்களுக்கு டிவிட்டர் அளித்துள்ளது.


பயனர்களின் தனியுரிமைக்கு சிக்கல் ஏற்படுத்தும் வகையிலான பல்வேறு பிரச்சனைகளை சமூக இணையதளங்கள் அதிகளவில் சந்தித்து வருகின்றன. மற்றொரு பிரச்சனை என்னவென்றால், பொய்யான செய்திகள் மற்றும் தவறான வழிநடத்துதலை அளிக்கும் ஸ்டோரிகள் ஆகியவை சமூக இணையதளங்களில் அதிகரித்து வருகின்றன.

டிவிட்டர்

டிவிட்டர்

சமீபகாலமாக பொய்யான செய்திகள் சமூக இணையதளங்களில் பரவி வருவது ஒரு சாதாரண விஷயமாக மாறி, சமுதாயத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றன. பேஸ்புக், டிவிட்டர் மற்றும் பிற என்று ஒட்டுமொத்த சமூக இணையதளங்களும் இந்தப் பிரச்சனையைச் சந்தித்து வருகின்றன.

முக்கிய காரணம்

முக்கிய காரணம்

இதற்கான முக்கிய காரணம் என்னவென்றால், சமூக இணையதளங்களில் உலா வரும் விளம்பரங்கள் தான். இந்நிலையில் தற்போது டிவிட்டரில் ஒரு புதிய (ஏடிசி) ஆட்ஸ் டிரான்ஸ்பிரன்ஸி சென்டர் என்பதை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ஒரு கணக்கில் இருந்து அதன் தளத்தில் இயங்கி வரும் எல்லா விளம்பரங்களையும் பயனர்கள் பார்க்க முடியும்.

டிரான்ஸ்பிரன்ஸி

டிரான்ஸ்பிரன்ஸி

இந்த டிரான்ஸ்பிரன்ஸி கருவியை, கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் முதல் முதலாக அறிவித்தது. இதன்படி, இந்த சமூக இணையதளத்தில் தற்போது அந்த அம்சத்தை எல்லா பயனர்களும் பயன்படுத்தும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒரு கணக்கு மூலம் கடந்த 7 நாட்கள் வரை வெளியிடப்பட்ட எல்லா விளம்பர பிரச்சாரங்களையும் (விளம்பர டிவிட்கள்), பயனர் பெயர்களின் அடிப்படையில் தற்போது தேடி பார்க்க முடியும்.

அமெரிக்க அரசியல்

அமெரிக்க அரசியல்

ஒரு கணக்கின் விளம்பர டிவிட்களின் பட்டியலை மட்டும் பார்க்க முடியும் என்று கட்டுப்பாடு விதிக்கப்படவில்லை என்பது இதில் கவனிக்க வேண்டிய ஒன்றாகும். அமெரிக்க அரசியல் விளம்பரத்தாரர்களின் செயல்பாடுகள், இந்நிறுவனத்தின் மூலம் முன்னிலைப்படுத்தப்படும். இது தவிர, பில்லிங் தகவல்கள், விளம்பரத்திற்கான செலவு, ஒவ்வொரு டிவிட்டிலும் உள்ள கவர்ச்சிகரமான தகவல் மற்றும் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை போன்ற கூடுதல் தகவல்களும் காட்டப்படுகிறது.

சிக்கலான விளம்பர கொள்கை

சிக்கலான விளம்பர கொள்கை

இது குறித்து ஒரு பிளாக் இடுகையில் டிவிட்டர் தரப்பில் மேலும் குறிப்பிடுகையில், "இந்த அட்ஸ் டிரான்ஸ்பிரன்ஸி சென்டரை சார்ந்து, எதிர்காலத்தில் ஒரு குறிப்பிட்ட சிக்கலான விளம்பர கொள்கையை நாங்கள் அறிமுகம் செய்ய உள்ளோம். இதை சரியான வகையில் செயல்படுத்த நாங்கள் விடாமுயற்சியோடு செயல்படுகிறோம். இது குறித்த மேலும் பல மேம்பாடுகள் வர உள்ளன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக் தளம்

பேஸ்புக் தளம்

சமீபத்தில் பேஸ்புக் தளம் கூட, இதே போன்ற ஒரு செயல்பாட்டை அறிமுகம் செய்துள்ளது. அதன்மூலம் விளம்பரத்தாரர்கள் முழு பலனையும் அடைவதை மேம்படுத்தவும் தனது தளத்தில் எந்தொரு மோசமான காரியங்கள் வருவதை தடுக்கவும் நடவடிக்கை எடுத்தது. பேஸ்புக்கில் உள்ள பயனர்களுக்கு கூட, பேஸ்புக் மற்றும் அதன் ஒத்த தளங்களான இன்ஸ்டாகிராம், மெசேஞ்சர் மற்றும் பிற தளங்களில் உள்ள ஒரு வணிக அல்லது பக்கத்தில் உள்ள விளம்பரங்களை பயனர்களுக்கு காட்டுகிறது. இதுபோல தங்களின் தளங்களை அதிக பாதுகாப்பு மிகுந்ததாக பயனர்களுக்கு அளிக்க, சமூக இணையதளங்கள் மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கைகள் பாராட்டத்தக்கது ஆகும். மேலும் இதன்மூலம் விளம்பரங்கள் தொடர்புடைய இருத்தரப்பினர் நீண்டகால பயனை பெற முடியும்.

Best Mobiles in India

English summary
Twitter Ad Transparency Centre will allow anyone to view your Ad-campaigns: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X