பிரதமரின் பெயரில் போலி ட்வீட்கள்!

Posted By: Staff
பிரதமரின் பெயரில் போலி ட்வீட்கள்!

பிரதமர் மன்மோகன் சிங் ட்விட்டர் கணக்கு போலவே, உருவாக்கப்பட்ட ஆறு போலி ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு பிரதமர் மன்மோகன் சிங், சமூக வலைத்தளமான ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் புதிய கணக்குகளை ஆரம்பித்தார். பிரதமரின் அலுவலக ட்விட்டர் கணக்கை போல 6 ட்விட்டர் கணக்குகள் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தி ஒரு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெரும் தலைவர்களது பெயரில் இது போன்ற போலி கணக்குகள் சமூக வலைத்தளங்களில் உருவாக்கப்பட்டால் நிறைய விபரீதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

ஏனெனில் போலி கணக்குகளில் உருவாக்கப்படும் ட்விட்டர் பக்கங்களில் பகிர்ந்து கொள்ளப்படும் செய்திகள், மக்களிடையே பரபரப்பை உண்டாக்கவும் வாய்ப்பு உள்ளது. இதனால் தலைவர்கள் தான் இந்த கருத்தை வெளியிட்டுள்ளதாக நினைத்து, மக்களுக்கிடையில் கருத்து வேறுமாடும் ஏற்படலாம்.

இதனால் பிரதமரின் பெயரில் உருவாக்கப்பட்ட போலி கணக்கு சைபர் செக்கியூரிட்டி செல் மூலம் முடக்கப்பட்டது. முதலில் பிரதமரின் பெயரில் உருவான இந்த 6 போலி கணக்குளை உடனடியாக முடக்குமாறு கேட்டு கொள்ளப்பட்டது.

ஆனால் ட்விட்டர் மூலம் இந்த போலி கணக்குள் முடக்கப்பட எந்த நடவிக்கையும் மேற் கொள்ளப்படாததால், இந்த பிரச்சனைக்கு சைபர் செக்கியூரிட்டி செல் மூலம் தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

பெரிய தலைவர்கள், பிரபலங்கள் என்று அனைவரும் அதிகமாக சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் முழு ஆர்வத்தோடு செயல்பட்டு கொண்டிருக்கின்றனர். உதாரணத்திற்கு தி.மு.க தலைவரான கலைஞர் கருணாநிதி சமீபத்தில் கூட ட்விட்டரில் நுழைந்தார்.

இப்படி தலைவர்கள் சமூக வலைத்தளங்களை உருவாக்கி வருவதன் மூலம், நிறைய நன்மைகள் இருப்பினும், இதை தவறாக பயன்படுத்தி கொள்ளவும் அதிக வாய்ப்பு உள்ளது. இதனால் பிரதமரின் ட்விட்டர் கணக்கு தொழில் நுட்ப வசதிகளை பயன்படுத்தி, சட்டத்தின் கீழ் காப்பகப்படுத்தப்பட உள்ளது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot