டிரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக துருக்கி மக்கள் வித்தியசமான நடவடிக்கை.!

துருக்கியில் இருக்கும் சிலர் குறிப்பாக ஐபோன்களை சேதப்படுத்தி டிவிட்டர் பக்கத்தில் வீடியோக்களை பதிவேற்றியுள்ளனர்என்பது குறிப்பிடத்தக்கது.

|

அமெரிக்காவை சேர்ந்த பாதிரியார் ஆண்ட்ரூ பரன்சன், இவர் துருக்கியில் வசித்துக் கொண்டு அங்கு ஒரு ஆலயத்தை நடத்தி வந்தார். இந்நிலையில் அவர் அங்கு இருக்கும் குர்து இன போராளிகள் குழுவுடன் தொடர்புவைத்து இருக்கிறார். பின்பு உளவு
வேலைகளில் ஈடுபடுகிறார் என்று கூறி துருக்கி அரசு கைது செய்து 2 ஆண்டுகளாக சிறைக்காவலில் வைத்துள்ளது.

டிரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக துருக்கி மக்கள் வித்தியசமான நடவடிக்கை.!

எனவே அவரை விடுதலை செய்து அமெரிக்காவுக்கு நாடு கடத்த வேண்டும் என்ற டிரம்ப நிர்வாகத்தின் வேண்டுகோளை துருக்கிற ஏற்க மறுத்துவிட்டது.

2மடங்கு வரி

குறிப்பாக டிரம்ப நிர்வாகத்தின் வேண்டுகோளை மறுத்த துருக்கிற நாட்டிற்கு இறுக்குமதி செய்யப்படுகிற உருக்கு, அலுமினியம்,ஆகியவற்றின் மீது 2மடங்கு வரி விதித்து டிரம்ப் நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்தது.

நாணய மதிப்பு

நாணய மதிப்பு

மேலும் இதன் காரணமாக துருக்கியின் நாணய மதிப்பு வெகுவாக சரிந்து உள்ளது, ஆனாலும் துருக்கி தளர்ந்துபோகாமல் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்கிற பொருட்கள் மீது கூடுதல் வரி விதிப்பை அறிவித்து உள்ளது. இதனால் துருக்கியின் நாணய மதிப்பு ஆட்டம் கண்டுள்ளது.

டிரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக

இந்நிலையில் துருக்கி மக்கள் டிரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக வித்தியசமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர், அது
என்னவென்றால், அமெரிக்காவில் தயாரிக்கப்படும் பொருட்களை சேதப்படுத்தி அதை சமூக வலைதளங்களில் வீடியோக்களை வெளியிட்ட வண்ணம் உள்ளனர்.

ஐபோன்:

துருக்கியில் இருக்கும் சிலர் குறிப்பாக ஐபோன்களை சேதப்படுத்தி டிவிட்டர் பக்கத்தில் வீடியோக்களை பதிவேற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பல்வேறு பொருட்களை தொடர்ந்து சேதப்படுத்தி வருகின்றனர் துருக்கி மக்கள்.

Best Mobiles in India

English summary
Turks are smashing, shooting, burning their iPhones to protest against US President Donald Trump: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X