சுந்தர் பிச்சை அமெரிக்காவிற்கு தான்.! டிரம்ப் போட்ட புதிய பரபரப்பு டிவீட்.!
கூகுள் தலைமை நிர்வாக அதிகாரியான சுந்தர் பிச்சை மறைமுகமாகச் சீனா ராணுவத்திற்கு உதவி வருவதாக அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குற்றம் சாற்றினர்.
கூகுள் தலைமை நிர்வாக அதிகாரியான சுந்தர் பிச்சை மறைமுகமாகச் சீனா ராணுவத்திற்கு உதவி வருவதாக அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குற்றம் சாற்றினர். அதனைத் தொடர்ந்து தற்பொழுது டிரம்ப் வெளியிட்டுள்ள புதிய டிவீட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் புகார்
அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப், கூகுள் நிறுவனம் மற்றும் கூகிள் வணிக நடவடிக்கைகள் சீனாவிற்கும், சீனாவின் இராணுவத்திற்கும் மறைமுகமாக உதவும் விதத்தில் உள்ளதென்று புகார் தெரிவித்தார். இந்த பதிவு உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

சுந்தர் பிச்சையை டேக் செய்து புதிய டிவீட்
நேற்று அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற கூட்டத்திற்குப் பிறகு, டிரம்ப் தனது டிவிட்டர் பக்கத்தில் சுந்தர் பிச்சையை டேக் செய்து புதிய டிவீட் ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

சுந்தர் பிச்சை அமெரிக்க பாதுகாப்பிற்கு மட்டுமே
அவர் வெளியிட்டுள்ள டிவீட்டின் படி, சுந்தர் பிச்சை மற்றும் கூகுள் நிறுவனம் அமெரிக்க இராணுவம் மற்றும் அமெரிக்க பாதுகாப்பிற்கு மட்டுமே முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ளது என்றும், சீனா மற்றும் சீனா இராணுவத்திற்கும் எந்த விதமான மறைமுக உதவியையும் சுந்தர் பிச்சை செய்யவில்லை என்றும் உறுதிப்படத் தெரித்துள்ளார்.

வைரல் ஆகிவரும் டிவீட்
டிரம்ப் வெளியிட்டுள்ள இந்த புதிய டிவீட் தற்பொழுது சமூக வலைத்தளம் மற்றும் டிவிட்டரில் வைரல் ஆகிவருகிறது. டிரம்ப் மற்றும் சுந்தர் பிச்சைக்கு இடையிலான உரையாடல் முற்றிலும் எதிர்கால அமெரிக்கத் தொழிலாளர்களின் முதலீடு, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களின் வளர்ச்சி மற்றும் அமெரிக்க அரசாங்கத்துடன் இணைந்து பணிபுரியும் உறுதிப்பாடு போன்றவற்றை அடங்கியது என்று கூகுள் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications