அதிக நேரம் ட்விட்டரில் இருந்தால் உடல்நலத்திற்கு கேடு?

Posted By:

அதிக நேரம் ட்விட்டரில் இருந்தால் உடல்நலத்திற்கு கேடு?

அதிக நேரம் ட்விட்டரில் இருப்பது, உடல்நலத்தை பாதிக்கும் என்று ஒரு திடு்க்கிடும் தகவலை முன் வைத்து இருக்கிறார் ட்விட்டர் இயக்குனர்களில் ஒருவரான பிஸ் ஸ்டோன்.

இந்த கருத்தை கனடாவில் உள்ள மான்ட்ரியல் என்ற இடத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் வெளியிட்டுள்ளார் பிஸ் ஸ்டோன். சோஷியல் மீடியா மட்டும் அல்லாது வலைதளங்களில் தகவல்களை தேடுபவர்கள் தகவல்கள் கிடைத்த பின்பு அதை விட்டு வெளி வருவது தான் நல்லது. இல்லாவிடில், வலைதளங்களிலேயே எந்த நேரம் இருப்பது உடல் ஆரோக்கியத்தினை பாதிப்பதாக பிஸ் ஸ்டோன் கூறி இருக்கிறார்.

அதிக நேரம் ட்விட்டரிலேயே இருக்கும் பல பேர் உணவு உட்கொள்ளும் நேரத்தையும் சேர்த்து டிவிட்டருக்காக செலவிடுகின்றனர். 140 கேரக்டர்களில் எதையும் சுருக்கமாக சொல்லும் இவர்களுக்கு கோர்வையான வாசகங்களை கொடுப்பது சிரமமாகிறது.

சோஷியல் மீடியாவை பற்றி அவ்வப்போது சில திடுக்கிடும் தகவலகளும் வெளியாகி கொண்டு தான் இருக்கின்றன. டிவிட்டரிலும் சரி, வலைத்தளங்களிலும் சரி அதிக நேரத்தினை செலவு செய்வது ஆரோக்கியத்தை பாதிப்பதாக பலத்த குரல்கள் எழும்பியுள்ளன.

இதனால் டிவிட்டரில் இப்பொழுது பயன்படுத்தி வரும் 140 கேரக்டர்களை இதற்கு மேல் அதிகப்படுத்தும் திட்டம் இப்போதைக்கு இல்லை என்ற கருத்தும் இந்த மாநாட்டில் டிவிட்டர் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்துபவர்கள் நிச்சயம் தங்களது உடல்நலத்தையும் பேணிக் காப்பது அவசியம்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot