யூடியூப் பார்த்து வீட்டிலேயே பிரசவம்: திருப்பூர் பெண் பரிதாப மரணம்.!

  யூடியூப் பொறுத்தவரை நமக்கு பொழுதுபோக்கு மற்றும் பல்வேறு தகவல்களை கொடுக்கும் ஒரு செயலியாக தான் பயன்பட்டு வருகிறது, குறிப்பாக அதில் வரும் அனைத்து தகவலும் உண்மையாக இருக்கும் என்று ஒருபோதும் நம்பக்கூடாது. மேலும் யூடியூப் -ஐ பயன்படுத்தி தற்சமயம் சில நபர்கள் தேவையில்லாத காரியங்களில் ஈடுபடுகின்றனர் என்றுதான் சொல்ல வேண்டும்.

  யூடியூப் பார்த்து வீட்டிலேயே பிரசவம்: திருப்பூர் பெண் பரிதாப மரணம்.!

  திருப்பூர் பகுதிக்கு உட்பட்ட காங்கயம் சாலை ரத்னகிரஸ்வரர் நகரை சேர்ந்தவர் கார்த்திரகேயன்(34), இவர் திருப்பூரில் இருக்கும் பின்னலாடை பையிங் அலுவலகத்தில் வேலை செய்து வருகிறார்.இவருடைய மனைவி கிருத்திகா (28) தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  கார்த்திரகேயன், கிருத்திகா

  கார்த்திரகேயன், கிருத்திகா தம்பதியருக்கு 7 ஆண்டுகளுக்கு தான் திருமணம் நடந்தது, இவர்களுக்கு 3வயதில் டிமானி என்ற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கிருத்திகா மீண்டும் கர்ப்பம் தரித்தார்.கிருத்திகா முதல் குழந்தையை மருத்துவமணையில்
  சுகப்பிரசவமாக பெற்றெடுத்தார். மேலும் இரண்டாவது குழந்தைக்கு இயற்கை முறையில் சிகிச்சை எடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

  பிரசவ வலி

  இந்நிலையில் கடந்த 22-ம் தேதி அன்று மதியம் கிருத்திகாவுக்கு பிரசவ வலி ஏற்படவே கார்திகேயன் அவருடன் வேலை செய்யும் நன்பர் பிரவீன் மற்றும் அவரது மனைவியை அழைத்துள்ளார். அவர்கன் உடனடியாக அங்கு சென்ற நிலையில் கிருத்திகாவுக்கு 2-வது பெண் குழந்தை பிறந்தது.

  மருத்துவர்கள்

  ஆனால் சில நிமிடங்களில் கிருத்திகாவுக்கு திடீரென ரத்தப்போக்கு அதிகரித்தது, மேலும் கிருத்திகா மயக்க நிலைக்கு செல்லவே 108 ஆம்புலன்ஸூக்கு தகவல் கொடுத்தனர். பின்பு திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு
  கொண்டு சென்றனர், அங்கு கிருத்திகாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

  மருத்துவர் சான்றிதழ்

  அதன்பின்னர் கிருத்திகாவின் சடலத்தை எடுத்துக்கொண்டு திருப்பூர் எரியூட்டும் மையத்துக்கு எடுத்து சென்றபோது அங்கு
  மருத்துவர் சான்றிதழ் கேட்டுள்ளனர். இதை தொடர்ந்து ஊரக போலீஸாரிடம் கிருத்திகாவின் பெற்றோர் புகார் அளித்தனர்.உடனே போலீஸார் சந்தேக மரணம் என்று வழங்கு பதிந்தனர்.

  ஊரக போலீஸார்

  மேலும் திருப்பூர் ஊரக போலீஸார் இந்த சம்பவத்தைப் பற்றி தெரிவித்தது என்னவென்றால், கிருத்திகாவின் கனவர் கார்திகேயன் மற்றும் அவருடன் வேலை செய்யும் பிரவீன் மற்றும் லவாண்யா தம்பதியர் கிருத்திகவை இயற்கை முறையில் கருத்தரிக்க ஊக்கம் கொடுத்து வந்துள்ளனர். இதனால் கிருத்திகா சுகாதார நிலையம் கூட சென்று சிகிச்சை எடுக்காமல் இருந்துள்ளார்.

  ரத்தப்போக்கு

  குறிப்பா லவாண்யா தம்பதியர் முன்னிலையில் கிருத்திகாவுக்கு பிரசவம் நடந்துள்ளது என்று தெரியவந்துள்ளது, பின்பு பெண் குழுந்தை பிறந்ததும், அதன்பின்பு நஞ்சுவை முறையாக வெளியேற்றாததால் ரத்தப்போக்கு அதிகமாகி உயிரழப்பு ஏற்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்தது. மேலும் பிரவீன், லாவண்யா தம்பதியர் மற்றும் இறந்த பெண்ணின்
  கணவரான கார்த்திகேயன் மீது மருத்துவமணை சிகிச்சையை தடுத்தது சார்பாக வழக்கு தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

  கிருத்திகாவின் தந்தை

  கிருத்திகாவின் தந்தை தெரிவித்து என்னவென்றால் முதல் பிரசவம் போன்று மருத்துவணையில் பார்க்கலாம் என்று பலமுறை கூறியுள்ளார். ஆனால் தந்தையின் சொல்லை அவர் கேட்காமல் வீட்டிலேயே சுகப்பிரசவம் செய்துகொள்ள கிருத்திகா முடிவெடுத்தார். அதற்கு தகுந்தபடி யுடியூப் பார்த்து பிரசவ வழிமுறைகளை கற்றுக்கொண்டனர் என்று கூறப்படுகிறது.
  பிரசவத்தை யாரும் விளையாட்டாக நினைக்க கூடாது.

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  English summary
  TN Woman Dies After Using YouTube Videos to Attempt Home Birth : Read more about this in Tamil GizBot
  X

  இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more