சமூகவலைதளங்களில் வைரலாகும் #தவிக்கும்தமிழகம்

|

சென்னை முழுவதும் கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டு நிலவி வரும் நிலையில்இ பல இடங்களில் ஹோட்டல்கள் மற்றும் ஐடி நிறுவனங்கள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளன. தங்கத்தின் விலையை காட்டிலும்இ தண்ணீரின் விலை அதிகரித்துள்ளது என்பது மிகவும் வேதனைக்குரிய விசியாகும்.

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

இந்தநிலையில் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற பின் முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியது என்றவென்றால் பிரதமர் மற்றும் மத்திய மந்திரிகளை சந்தித்து தமிழகத்திற்கு தேவையான திட்டங்களை நிறைவேற்றித் தர கோரிக்கை மனுக்களை வழங்கினேன். நடந்தாய் வாழி காவிரி திட்டத்தை செயல்படுத்த வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

கோரிக்கை

கோரிக்கை

பின்பு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகையை வழங்க கோரிக்கை வைக்கப்பட்டது. தமிழக திட்டங்களுக்கு உரிய அனுமதியை தர வேண்டும் என பிரதமரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

தொழில்நுட்ப உதவி

தொழில்நுட்ப உதவி

சென்னையில் புதிய விமான நிலையம் அமைக்க பொருளாதார, தொழில்நுட்ப உதவி வழங்க கோரிக்கை வைக்கப்பட்டது. கன்னியாகுமரியில் இந்திய கடற்படை தளம் அமைக்க மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் குடிநீர் பஞ்சத்தை போக்க செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்களுக்கு நிதியுதவி வழங்க கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

கோதாவரி - காவிரி

மேகதாது அணைக்கு கர்நாடக அரசுக்கு வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தினேன். கோதாவரி - காவிரி இணைப்பு திட்டத்தை விரைந்து நிறைவேற்ற பிரதமர் மோடியிடம் வலியுறுத்தியுள்ளேன். முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தினை 152 அடி உயர்த்த அனுமதி பெற்றுத்தர கேட்டுக்கொள்ளப்பட்டது. மேலும் தமிழகத்தின் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக பிரதமர்இ மத்திய மந்திரிகள் கூறியுள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார்

#தவிக்கும்தமிழகம்

இந்தநிலையில், #தவிக்கும்தமிழகம் என்ற ஹேஷ்டேக் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. குறிப்பாக மக்கள் சமூகவலைதளங்களில் பல்வேறு கருத்துகள் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

Best Mobiles in India

English summary
tn-govt-should-take-action-immediately-thavikkum-tamizhagam-hashtag-trending-in-social-media : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X