இந்தியா முழுவதும் தரவுகளை சேகரித்து அரசை நடவடிக்கை எடுக்கவைக்கும் பெண்மணி! வேறலெவல்.!

நினைவுதெரிந்த நாளில் இருந்து பொதுமக்கள் அரசின் மீது தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டுகளை கூறிவருகின்றனர். இன்னும் நிறைய உள்ளன.

|

நமது அரசாங்கத்தின் செயல்திறன் என்று வரும்போது, நாம் அனைவரும் எல்லாவற்றிலும் சரியாக இருப்பதுபோல, அரசாங்கத்தின் அனைத்து குறைபாடுகள் மற்றும் அமைப்பில் உள்ள சிக்கல்களை பற்றி பட்டியல் வாசிப்போம்.

தரவுகளை சேகரித்து அரசை நடவடிக்கை எடுக்கவைக்கும் பெண்மணி: வேறலெவல்.!

நினைவுதெரிந்த நாளில் இருந்து பொதுமக்கள் அரசின் மீது தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டுகளை கூறிவருகின்றனர். இன்னும் நிறைய உள்ளன. ஆனால் அரசாங்க அமைப்பை குற்றம் சாட்டுவதற்கு பதிலாக ரிவித்விகா பட்டாச்சார்யா, முக்கியமான மற்றும் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒன்றான தரவுகள் மூலம் அரசாங்கத்திற்கு அதிகாரமளிக்க முயற்சிசெய்கிறார்.

 சுவனிதி இனிசியேடிவ்

சுவனிதி இனிசியேடிவ்

இந்தியாவின் அரசாங்க அதிகாரிகளுக்கு மேம்பட்ட தீர்வுகளை வழங்கும் சமூக நிறுவனமான சுவனிதி இனிசியேடிவ்-ன் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார் ரிவித்விதா.இவர் சில மாதங்களுக்கு முன்னர், ஜானோ இந்தியா தளத்தை (http://jaanoindia.swaniti.org) தொடங்கினார். இதன்மூலம் அனைத்து மாவட்ட நீதிபதிகள், குடிமக்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் தங்கள் தொகுதி பற்றிய அனைத்து தகவல்களையும் ஒரே இடத்தில் பெறமுடியும்.

 ரிவித்விகா

ரிவித்விகா

"ஒரே இடத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட மற்றும் தொகுப்பித்த தகவலை வழங்கும் தளத்தை உருவாக்குவதற்கு தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடிந்தால், மாவட்ட மற்றும் தொகுதி நிலையில் உள்ள அரசாங்க அதிகாரிகளின் முடிவெடுக்கும் செயல்முறைகளை மேம்படுத்த முடியும் என்பதை நாங்கள் உணர்ந்தோம்" என்கிறார் ரிவித்விகா.

ஜானோ இந்தியா

ஜானோ இந்தியா

இதுதான் ஜானோ இந்தியா தளத்தின் கருத்துக்களுக்கு வழிவகுத்தது. இது தொடர்பாக ரிவித்விகா கூறுகையில் "பல்வேறு அரசாங்க ஆதாரங்களில் இருந்து 850 க்கும் மேற்பட்ட குறியீடுகறை ஒன்றாகக் கொண்டு வருவதற்கு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. மேலும் எங்கள் தொழில்நுட்ப குழு இதை உருவாக்க தனது இரண்டு ஆண்டு கடின உழைப்பை வழங்கியது" என்கிறார்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஏன் சமூக நல திட்டத்தில் சேர்க்கப்படவில்லை என்பதில் துவங்கி ஏன் முதியோர்களுக்கு உதவித்தொகை கிடைப்பதில்லை என புரிந்துகொள்வது வரை, ரிவித்விகாவின் ஸ்டார்ட்அப் நிறுவனம், பொது மக்கள் சேவைகளுக்கு இடையே உள்ள இடைவெளிகளுக்கான முக்கிய காரணங்கள் கண்டுபிடித்து, இந்த இடைவெளியை சமாளிக்க தரவு மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றை பயன்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.

ஸ்வனிதி-யை நிறுவுவதற்கு முன்னர் ரிவித்விகா, தொழிலாளர் சந்தை பிரிச்சனைகளுக்கான அதிகாரியாக உலகவங்கியில் பணியாற்றியுள்ளார். யுஎன்எப்பிஏ மற்றும் எப்ஓஐசிசிஐ ஆகியவற்றிலும் பணியாற்றியுள்ள இவர், ஹார்வர்ட் கென்னடி ஸ்கூலில் முதுகலை பட்டமும், வேக் பாரஸ்ட் பல்கலைகழகத்தில் இளங்கலை பொருளாதாரம் மற்றும் அரசியல் அறிவியல் பட்டமும் பெற்றுள்ளார்.

"மாவட்ட அளவிலான டேஷ்போர்டுகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருப்பதாகவும், அதன் மூலம் மாவட்டத்தில் நடைபெற்றுவரும் திட்டங்களின் நிலையை அறிந்துகொள்ள பணியாற்றி வருகிறோம்," என கூறும் ரிவித்விகா, வேலையின்மைக்கு எதிரான உத்திரகாண்டில் அவர்கள் செய்த பணியை சுட்டிக்காட்டினார்.

உத்தரகண்ட்

உத்தரகண்ட்

"உத்தரகண்ட் மாநிலத்தில் வேலை வாய்ப்புகளை தேடி மக்கள் வெளியேறுவது ஒரு பெரிய பிரச்சினையாக இருந்தது. நாங்கள் பகுதியில் இருந்து தரவு சேகரிக்கத்து, தற்போதைய உள்கட்டமைப்பு இடைவெளிகளை பகுப்பாய்வு செய்து, இருக்கும் நிதியுடன் ஒப்பிட்டு பார்த்ததில், வேலைவாய்ப்பை உருவாக்குவதற்காக சில நிதி பயன்படுத்தாமல் இருப்பதை கண்டறிந்தோம். உள்ளூர் நிர்வாகத்துடன் பணியாற்றி அந்த நிதியை ஒதுக்கச்செய்து அத்திட்டத்தை நிறைவேற்றினோம் . ஒடிசா, உத்தரகண்ட், ஆந்திரப் பிரதேசம், மணிப்பூர், திரிபுரா மற்றும் பல மாநிலங்களில் (பதினேழு மாநிலங்கள்) இதுபோன்ற நிலைமையை உருவாக்குவதற்காக நாங்கள் பணியாற்றியுள்ளோம். இது வரைக்கும் பயன்படுத்தாமல் இருத்த 100 கோடி ரூபாய் நிதியை பயன்படுத்த வைத்துள்ளோம் "என்று பெருமையுடன் கூறுகிறார் ரிவித்விகா.

Best Mobiles in India

English summary
This Woman Is Collecting Data Across India's Districts, And Help Government Take Better Actions: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X