போன் நம்பர் கொண்டு பேஸ்புக் அக்கவுண்ட் திறந்தவர்களா நீங்கள்.? உஷார்.!

இது கருப்புச் சந்தையில் கணக்குகளை விற்பனை செய்வதற்கு வழிவகுக்கும் அல்லது ஹேக்கின் நபரின் பேஸ்புக் நண்பர்களை பணத்திற்காக அச்சுறுத்தவும் செய்யும்.

|

சமீபத்திய காலமாக சைபர் தாக்குதல்கள் பரவலாக நிகழ்த்தப்பட்டு வருகிறது. இது டிஜிட்டல் உலகத்தை மிகவும் பாதிக்கப்படக்கூடிய இடத்தில் வைக்கின்றது. சைபர் தாக்குதல்களின் அச்சுறுத்தல்கள் மிகப்பெரியது என்பதற்கான விளக்கங்கள் தேவையில்லாத நிலைப்பாட்டில் இப்போது பேஸ்புக் பயனர்கள் கவலைப்பட வேண்டிய ஒரு அறிக்கை வெளியாகியுள்ளது.

மீடியம் என்ற வலைத்தளத்தில், புரோகிராமர் ஆன ஜேம்ஸ் மார்ட்டின்டேல் வெளியிட்டுள்ள அறிக்கையானது, ஹேக்கர்கள் மிக எளிதாக பழைய தொலைபேசி எண்களின் மூலமாக யாருடைய பேஸ்புக் கணக்கையும் அணுக முடியும் என்று கூறியுள்ளார். அதாவது ஒருவர் புது எண்ணை எடுத்துக்கொண்டு அவரின் பழைய எண்ணை டீலின்க் செய்யாமல் அப்படியே விட்டுவிடும் பட்சத்தில் இது நிகழும் என்று ஜேம்ஸ் மார்ட்டின்டேல் கூறுகிறார்.

குறிப்பிட்ட எண்ணிற்கு

குறிப்பிட்ட எண்ணிற்கு

ஒரு அந்நியர் புதிய தொலைபேசி எண்ணை டைப் செய்து பின்னர் 'கடவுச்சொல்லை மறந்துவிட்டேன்' என்ற விருப்பத்தை தேர்வு செய்வதின் மூலம் குறிப்பிட்ட எண்ணிற்கு அனுப்பப்படும் தனிப்பட்ட மீட்பு குறியீட்டை வைத்து அக்கவுண்ட்டை அணுக முடிகிறது.

உள்ளிடும்படி கேட்கும்

உள்ளிடும்படி கேட்கும்

பேஸ்புக் அக்க்கவுண்ட் மீட்பு அமைப்பானது, பயனர்கள் தங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டால், தங்கள் தொலைபேசி எண்ணை உள்ளிடும்படி கேட்கும். எனவே, ஒரு ஹேக்கர் உங்கள் பழைய எண்ணை வாங்கினால், உங்கள் பேஸ்புக் கணக்கை அணுக இந்த தந்திரத்தை பயன்படுத்தலாம். இதனை தவிர்க்க ஒரே வழி உங்கள் பழைய எண்ணை டீலின்க் செய்வது மட்டும்தான்.

கருப்புச் சந்தை

கருப்புச் சந்தை

இந்த ஹேக்கிங் எவ்வாறு ஆபத்தானது என்பதையும் ஜேம்ஸ் மார்ட்டின்டேல் விளக்குறார். இது கருப்புச் சந்தையில் கணக்குகளை விற்பனை செய்வதற்கு வழிவகுக்கும் அல்லது ஹேக்கின் நபரின் பேஸ்புக் நண்பர்களை பணத்திற்காக அச்சுறுத்தவும் செய்யும்.

பேஸ்புக் லாக் இன் பிழை

பேஸ்புக் லாக் இன் பிழை

கடந்த ஆண்டு பெங்களூரில் உள்ள ஹேக்கர் ஆனந்த் பிரகாஷ் கணினியில் பேஸ்புக் லாக் இன்-ல் உள்ள பிழையை கண்டுபிடித்ததால் 15,000 டாலர் பரிசு பெற்றார் என்பதும், அந்த பக் மூலம் ஹேக்கர்கள் பயனர்களின் செய்திகளை, புகைப்படங்கள் மற்றும் பணம் செலுத்தும் பிரிவில் சேமிக்கப்பட்ட டெபிட் / கிரெடிட் கார்ட் விவரங்களை அணுகலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
This is the trick anyone can use to log into your Facebook account. Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X