பாஸ்தாவால் உருவாக்கப்பட்ட கணினி: இளைஞர் அட்டகாசம்.!

|

பில்கேட்ஸ் புதிய இயங்குதளத்தை உருவாக்கியது போல, ஸ்டீவ் ஜாப்ஸ் ஒரு புதுவித கணினியை கண்டுபிடித்தது போல, அடுத்த கணினி உலகின் புதுமையான கண்டுபிடிப்பு எங்கிருந்து வரும் என்பது நமக்கு நிச்சயமாக தெரியாது.

பாஸ்தாவால் உருவாக்கப்பட்ட  கணினி: இளைஞர் அட்டகாசம்.!

ஆனால் இந்த குறிப்பிட்ட கணிணியில் இருந்து இல்லை என நாம் கூறமுடியும். ஏனெனில் இது பூஞ்சைகளால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

மைகா லாப்லண்டே

மைகா லாப்லண்டே

மைகா லாப்லண்டே என்ற யூடியூபர் லாப்லாநெட் ஆர்ட்ஸ் என்ற சேனலை யூடியூபில் நடத்திவருகிறார். இக்கட்டுரையை எழுதும் நேரத்தில் சுமார் 334 சந்தாதாரர்களுடன் இருக்கும் இந்த சேனல், பெரும்பாலும் தொழில்நுட்ப தயாரிப்புகளுக்கான விமர்சனங்கள் மற்றும் கிராஃபிக் டிசைன் பயிற்சிகளுக்கான வீடியோக்களை வெளியிடுகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு இந்த சேனலில் முற்றிலும் அற்புதமான வீடியோ ஒன்றை பதிவேற்றப்பட்டது.

மாவடை கீற்றுகள் மற்றும் ரிகாடோனி பாஸ்தா

மாவடை கீற்றுகள் மற்றும் ரிகாடோனி பாஸ்தா

பாஸ்தா மூலம் எப்படி ஒரு கணிணியை கட்டமைக்கலாம் என்ற வீடியோவை அவர் பதிவேற்றியுள்ளார்.


ஆம்! நான் ஒன்றும் உளறவில்லை. உண்மையில் அவர் அதைத்தான் செய்தார். ஆனால் இங்கே உங்களுக்கு எச்சரிக்கைகளும் உள்ளன!!!. அவர் ன உண்மையான மின்னணு சாதங்களை கொண்டு இதை செய்யவில்லை. அதற்குபதிலாக அவருடைய உடைந்த ஏசுஸ் டேப்லெட்-ன் பாகங்களை எடுத்து மற்றொரு கணிணியின் வெளிப்பகுதியில் பொருத்தினார். இங்கு முக்கிய அம்சம் என்னவெனில், புதிய கணினியானது மாவடை கீற்றுகள் மற்றும் ரிகாடோனி பாஸ்தா ஆகியவற்றுடன் சிறிதளவு சூடான பசை, எலெக்ட்ரிக் டேப் மற்றும் பெயிண்ட் போன்றவையும் சேர்த்து உருவாக்கப்பட்டுள்ளது.

வீடியோ தலைப்பில்

வீடியோ தலைப்பில்

இப்படிப்பட்ட காரியங்களில் என்னுடன் கேலி செய்யாதீர்கள். ஏனெனில் நானும் அதைச் செய்யலாம்," என தனது வீடியோ தலைப்பில் குறிப்பிட்டுள்ளார் மைகா.

சிறிது தாமதம் ஏற்பட்டது

சிறிது தாமதம் ஏற்பட்டது

முடிவாக பாஸ்தாவால் செய்யப்பட்ட ஒரு வேலை செய்யும் கணினியை அவர் உருவாக்கினார்.அவரது யூடியூப் சேனலில் கட்டமைக்கப்பட்ட முதல் கணினி இதுவாக இருப்பினும், இது ஒரு பெரும் வெற்றியாகும். ஹூலுவில் வீடியோ ஒளிபரப்பும் போது, ஸ்டீமில் கேம்ஸ் விளையாடும் போது, மற்றும் கேம் பாய் ஸிமுலேட்டர் பயன்படுத்தும் போது போன்ற சில சூழ்நிலைகளில் கணினி கட்டமைப்பில் சிறிது தாமதம் ஏற்பட்டது. அவற்றையெல்லாம் தவிர்த்து கணினி நன்றாக செயல்பட்டதால், அது ஒருவேளை பாஸ்தாவால் உருவாக்கப்பட்ட வெளிப்பகுதியின் காரணமாக ஏற்பட்ட குளிர்ச்சியின் விளைவால் நிகழ்ந்த பிரச்சினையாக இருந்திருக்கலாம்.

யூடியூப் சேனலின் முக்கிய தொடக்கமாக இருக்கலாம்

இது கணினி உற்பத்தி நிறுவனங்களால் விரைவில் எந்த நேரத்திலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு வடிவமைப்பு அல்ல. ஆனால் இது மைகாவின் யூடியூப் சேனலின் முக்கிய தொடக்கமாக இருக்கலாம். " உணவு பொருட்களின் மூலம் தொழில்நுட்ப பொருட்களை தயாரிக்கும் கலை". இப்போது அவர் சர்க்கரையில் இருந்து தயாரிக்கப்பட்ட நிண்டெண்டோ ஸ்விட்சை உருவாக்க முடியும் ...


Most Read Articles
Best Mobiles in India

English summary
This Guy Built A Working Computer Out Of Pasta, And Of Course It Totally Works: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X