அமைச்சர் செல்லூர் ராஜூ சாபம் சும்மா விடுமா? அமெரிக்கா விஞ்ஞானிகளுக்கு புஸ்.!

பிளாஸ்டிக் பந்துகள் லாஸ்ஏஞ்சல்ஸ் குளம் முழுவதும் நிரப்பட்டதால், கடந்த 2015 ஆகஸ்ட் முதல் 2017 மார்ச் வரை 1.7 மில்லியன் கன மீட்டர் நீர் ஆவியாதலில் இருந்து தடுக்கப்பட்டது.

|

தற்போது நவீன யுகத்தில் நாம் சுழன்று கொண்டிகின்றோம். இதனால் நம் தேவையும் அதிகரித்துள்ளது. இயற்கைக்கு எதிராக மாறுபட்ட பொருட்களை தினசரி நுகர்ந்து வருகிறோம். இதனால் உலகம் முழுவதும் உள்ள தொழிற்சாலைகள், வாகனங்கள், வீட்டு உபகரண பொருட்கள் (ஏசி, குளிர்சாதன பெட்டி, டிவி, பல்பு) உள்ளிட்டவைகளில் இருந்து வாயுக்கள் வெளிப்படுகிறது.

<strong>ஃபேஸ்அன்லாக், டூயல் கேம் வசதியுடன் மிரட்டலான ஹானர் 9என் அறிமுகம்.!</strong>ஃபேஸ்அன்லாக், டூயல் கேம் வசதியுடன் மிரட்டலான ஹானர் 9என் அறிமுகம்.!

செல்லூர் ராஜூவின் சாபம்

அவைகளில் வெளியேறும் வாயுவான குளோரா புளோர கார்பன், வேதிபுகை போன்றவைகளால் உலகம் வெப்பமயம் ஆகி வருகின்றது. இதனால் ஓசோனில் ஓட்டை மற்றும் நீர்நிலைகள் வற்றுதல், புறஊதா கதிர்களினால் உயிரினங்களும் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

விரைவாக ஆவியாகிறது:

விரைவாக ஆவியாகிறது:

உலகம் வெப்பமயம் (குளோபல் வாமிங்) வேகமாக ஆகி வருவதால், பருவ நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தக்க சூழலில் பெய்யும் மழையும் பெய்ய மறுக்கிறது. இதனால் வெட்பம் அதிகரித்து நீர்நிலைகளில் தண்ணீர் விரைவாக ஆவியாகிறது. நீர் ஆவியாவதை தடுக்க மாற்றும் வழியில் அமெரிக்க விஞ்ஞானிகளும் களம் இறங்கினர்.

லாஸ் ஏஞ்சல்ஸ் குளம்:

லாஸ் ஏஞ்சல்ஸ் குளம்:

கடந்த 2015ம் ஆண்டில் 96 மில்லியன் மிதக்கும் பிளாஸ்டிக் பந்துகளை அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கினர். இதைத்தொடர்ந்து அமெரிக்காவில் உள்ள லாஸ்ஏஞ்சல்ஸ் பகுதியில் உள்ள பெரிய குளத்தில் கொட்டி பரிசோதனை நடத்தினர்.

ஆவியாதல் தடுக்கப்பட்டது:

ஆவியாதல் தடுக்கப்பட்டது:

பிளாஸ்டிக் பந்துகள் லாஸ்ஏஞ்சல்ஸ் குளம் முழுவதும் நிரப்பட்டதால், கடந்த 2015 ஆகஸ்ட் முதல் 2017 மார்ச் வரை 1.7 மில்லியன் கன மீட்டர் நீர் ஆவியாதலில் இருந்து தடுக்கப்பட்டது. திட்டம் வெற்றி பெற்றதாக அமெரிக்க விஞ்ஞானிகள் அறிவித்தனர். ஒரு சில நாடுகளில் இத்திட்ட மாதிரி செயல்படுத்த முனைப்பு காட்டப்பட்டது.

விஞ்ஞான அமைச்சர் செல்லூர் ராஜூ:

விஞ்ஞான அமைச்சர் செல்லூர் ராஜூ:

அமெரிக்காவின் திட்டத்திற்கு அதிகம் செலவு ஆகும் என்பதால், கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெர்மா கோல்களை கொண்டு மதுரையில் உள்ள வைணை அணையில் நீர் ஆவியாவதை தடுக்கும் முயற்சியில் இறங்கினார். இதற்காக தெர்மா கோல்களை செல்லோ டேப்பால் ஓட்டி அணையில் அணையில் அவரே மிதக்க விட்டார்.

300 தெர்மாகோல்கள்:

300 தெர்மாகோல்கள்:

10ச.கி.மீ அளவுள்ள வைகை அணைக்கு 300 தெர்மாகோல்களை செல்லோ டேப்பால் ஒட்டி பரிசல்களில் கொண்டு அணையில் விடப்பட்டது. அது வீசும் காற்றுக்கு தாக்கு பிடிக்காமல் தெர்மா கோல்கள் அனைத்தும் கரை ஒதுங்கின. இதைத்தொடர்ந்து டிவி, பேஸ்புக், வாட்ஸ் ஆப்களில் அமைச்சர் செல்லூர் ராஜூவை கிண்டல் செய்து செய்திகளும், கார்ட்டூன்களும் பறந்தன.

கடுப்பான விஞ்ஞான அமைச்சர்:

கடுப்பான விஞ்ஞான அமைச்சர்:

சமூக வலை தளங்களிலும் கூட்டுறவுத்துறை அமைச்சர் என்பதற்கு பதிலாக விஞ்ஞான அமைச்சர் என்றும் மீம்ஸ்களிலும் கிண்டல் அடிக்க தொடங்கினர். பல்வேறு இடங்களுக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ சென்றாலும் அவரை பத்திரிக்கையாளர்கள் மேலும் இதுபோல் திட்டம் ஏதாவது உள்ளதா என நக்கலா கேள்வி கேட்டக தொடங்கியதால், கடுப்பாகி இருந்தார்.

அமெரிக்காவுக்கு சாபம்:

அமெரிக்காவுக்கு சாபம்:

அமெரிக்கா விஞ்ஞானிகளை பார்த்து தான் இத்திட்டம் செயல்படுத்தினேன். ஆகையால் எனது திட்டம் போல அமெரிக்காவின் திட்டமும் நாசமாக போக வேண்டும் என்று சாபம் விடும் மனநிலைக்கு தள்ளப்பட்டார் அமைச்சர் செல்லூர் ராஜூ.

பலித்தது சாபம்:

பலித்தது சாபம்:

அமெரிக்க லாஸ் ஏஞ்சல்ஸ் குளத்தில் மிதக்கவிடப்பட்ட பிளாஸ்டிக் பந்துகள் தண்ணீரை முழுமையாக ஆளுமைக்கு உட்படுத்திக் கொண்டன. இதனால் தண்ணீரில் ரசாயனம் கலந்து தண்ணீர் மாசடைந்தது. குளத்தில் வசித்த பெரிய நீர் யானையும், மற்ற உயிரினங்களும் வாழ முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதுகுறித்து அண்மையில் ஆய்வு செய்த
அமெரிக்க விஞ்ஞானிகள் இத்திட்டமும் தோல்வியடைந்தாக அறிவித்தனர். இச்சசெய்தியறிந்த அமைச்சர் செல்லூர் ராஜூம் மகிழ்ச்சியுள்ளார்.

Best Mobiles in India

English summary
These Shade Balls Were Supposed to Save Water But There's a Big Problem: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X