செல்லூர் ராஜூவையே மிஞ்சிய பொறியாளர் தெர்மாகோலில் வீடு கட்டி அசத்தல்.!

மீடியாக்களிலும் அவர் கிளித்து தொங்கவிடப்பட்டார். ஆனால் அதுவரை அதுவரை இந்த அமைச்சர் பெயர் தெரியாத வெளிநாடுகளிலும் கூட விஞ்ஞான அமைச்சர் என்று பிரபலமாகி விட்டார். ஆனால் தெர்மாகோலை வைத்து சாதிக்க முடி

|

கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெர்மாகோல்களை கொண்டு மதுரையில் உள்ள வைகணை அணையில் நீர் ஆவியாவதை தடுக்கும் முயற்சியில் இறங்கினார்.

ஆனால் இந்த திட்டம் தோல்வியில் முடிந்தது. இதன் பிறகு செல்லூர் ராஜூ அனைத்து சமூக வலைதளங்களிலும் கேலி சித்திரமாக மாறினார்.

செல்லூர் ராஜூவையே மிஞ்சிய பொறியாளர் தெர்மாகோலில் வீடு கட்டி அசத்தல்.!

மீடியாக்களிலும் அவர் கிளித்து தொங்கவிடப்பட்டார். ஆனால் அதுவரை அதுவரை இந்த அமைச்சர் பெயர் தெரியாத வெளிநாடுகளிலும் கூட விஞ்ஞான அமைச்சர் என்று பிரபலமாகி விட்டார்.

ஆனால் தெர்மாகோலை வைத்து சாதிக்க முடியும் என்று தமிழகத்தை சேர்ந்த பொறியாளர் ஒருவர் சாதித்து காட்டியுளார். அதில் மழை, புயல், சுறாவளி என அசைத்தையும் தாங்கும் வகையில் தொர்மாகோல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வீடும் கட்டி வருகின்றார்.

விஞ்ஞான அமைச்சர் செல்லூர் ராஜூ:

விஞ்ஞான அமைச்சர் செல்லூர் ராஜூ:

கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெர்மா கோல்களை கொண்டு மதுரையில் உள்ள வைணை அணையில் நீர் ஆவியாவதை தடுக்கும் முயற்சியில் இறங்கினார். இதற்காக தெர்மா கோல்களை செல்லோ டேப்பால் ஓட்டி அணையில் அணையில் அவரே மிதக்க விட்டார்.

300 தெர்மாகோல்கள்:

300 தெர்மாகோல்கள்:

10ச.கி.மீ அளவுள்ள வைகை அணைக்கு 300 தெர்மாகோல்களை செல்லோ டேப்பால் ஒட்டி பரிசல்களில் கொண்டு அணையில் விடப்பட்டது. அது வீசும் காற்றுக்கு தாக்கு பிடிக்காமல் தெர்மா கோல்கள் அனைத்தும் கரை ஒதுங்கின. இதைத்தொடர்ந்து டிவி, பேஸ்புக், வாட்ஸ் ஆப்களில் அமைச்சர் செல்லூர் ராஜூவை கிண்டல் செய்து செய்திகளும், கார்ட்டூன்களும் பறந்தன.

கடுப்பான விஞ்ஞான அமைச்சர்:

கடுப்பான விஞ்ஞான அமைச்சர்:

சமூக வலை தளங்களிலும் கூட்டுறவுத்துறை அமைச்சர் என்பதற்கு பதிலாக விஞ்ஞான அமைச்சர் என்றும் மீம்ஸ்களிலும் கிண்டல் அடிக்க தொடங்கினர். பல்வேறு இடங்களுக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ சென்றாலும் அவரை பத்திரிக்கையாளர்கள் மேலும் இதுபோல் திட்டம் ஏதாவது உள்ளதா என நக்கலா கேள்வி கேட்டக தொடங்கியதால், கடுப்பாகி இருந்தார். இவரை நாசா விஞ்ஞானி என்றும் கூட மீம்ஸ்கள் பறந்தன. மறைந்த முன்னாள் விஞ்ஞானி டெஸ்லாவிடம் இவர் மாணவராக இருந்ததை போல கார்ட்டூன்களும் இருந்தன.

தெர்மாகோல் வீடு:

தெர்மாகோல் வீடு:

இந்நிலையில், பெரம்பலூர் மாவட்டம், செட்டிக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ராமர் என்பவர், தற்போது, செங்கல்,கல் ஏதுவுமின்றி தெர்மாக்கோலை கொண்டு வீடு கட்டி வருகிறார். 1,150 சதுர அடி பரப்பளவில், 10 லட்சம் ரூபாய் செலவில் தெர்மாகோல் மூலம் வீடு கட்டுகிறார்.

50 சதவீதம் கட்டுமான பணிகள் நிறைவு:

50 சதவீதம் கட்டுமான பணிகள் நிறைவு:

கட்டுமான பணிகள் 50 சதவீதத்துக்கும் மேல் பணிகள் நிறைவடைந்து விட்டன. முதலில் இதற்கு தனது குடும்பத்தினர் தயங்கிய போதும் பின்னர், ஒப்புக்கொண்டதாக ராமர் கூறினார்.

அதிரவிட்ட பொறியாளர்:

அதிரவிட்ட பொறியாளர்:

தெர்மாகோல் தொழில்நுட்பம் மூலம் வெளிநாடுகளில் அதிகமாக வீடுகள் கட்டி வருகின்றனர் என்கிறார் பொறியாளர் ஆனந்தகீதன். இதனால் 50 சதவீத பொருள் விரையம் குறையும் என்பதோடு மேற்கொண்டு, செங்கல், கருங்கல், எதுவும் தேவையில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

வீட்டின் எடை மிகக்குறைவு:

வீட்டின் எடை மிகக்குறைவு:

வீட்டின் எடை மிகக்குறைவு என்றாலும் வீடுகளில் ஏற்படும் விரிசல், சூறாவளி, கடும் மழை போன்ற அனைத்தையும் தாங்கும் சக்தி உண்டு என்றார் பொறியாளர் ஆனந்தகீதன். தற்போது ஏற்பட்டுள்ள மணல் மற்றும் செங்கல் தட்டுப்பாட்டிற்கு இந்த தொழில்நுட்பம் மிகவும் ஏற்றது என்றும் அவர் தெரிவித்தார்.

 தெர்மாகோல் வீடு தொழில்நுட்பம்:

தெர்மாகோல் வீடு தொழில்நுட்பம்:

இந்த தொழில்நுட்பம் மூலம் நாம் எளிதாக வீட்டையும் பணம் செலவில்லாமல் கட்ட முடியும். மேலும், புயல், சூறாவளி, வெப்பம், மழை, நிலநடுக்கம் என எல்லா வற்றையும் இந்த வீடு தாங்கும் வகையில் இருக்கின்றது. தற்போது ஏராளமானோர் இந்த வீடுகளை கட்ட ஆர்வத்தோடு வீடு கட்ட முன் வந்துள்ளனர்.

Best Mobiles in India

English summary
thermocol house construction builders using technology in Perambalur : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X