புலியிடம் தனியாக சிக்கிய இளைஞர்: சிறு காயமின்றி சாமர்த்தியமாக உயிர் தப்பி அசத்தல்- இதோ வீடியோ

|

மும்பை அருகே உள்ள பாந்தரா மாவட்டத்தில் உள்ள ஒரு வயல்வெளிக்குள் கடந்த சனிக்கிழமை புலி ஒன்று புகுந்துள்ளது. அந்த சமயத்தில் அந்த நிலத்தில் நின்றுக் கொண்டிருந்த ஒருவரை, நிலத்துக்குள் நுழைந்த புலி சுற்றி வளைத்தது.

சமயம் பார்த்து காத்துக் கொண்டிருந்த புலி

சமயம் பார்த்து காத்துக் கொண்டிருந்த புலி

புலியிடம் சிக்கிய இளைஞரை தாக்குவதற்கு சமயம் பார்த்து அந்த புலி காத்துக் கொண்டிருந்தது. பொதுவாக ஒருவர் புலியிடம் பார்த்தாலே பதற்றத்தில் ஓட வேண்டும் என்று தான் தோன்றும், அல்லது பதற்றத்தில் செய்வது அறியாது எதிர்த்து ஏதாவது செய்ய தோன்றும். ஆனால் அந்த இளைஞரோ என்ன செய்வது என்று அறியாத நிலையில் சாமர்த்தியமாக தரையோடு தரையாக அசையாமல் படுத்துவிட்டார்.

அக்கம் பக்கம் பொதுமக்கள் கூச்சல்

அக்கம் பக்கம் பொதுமக்கள் கூச்சல்

அந்த நபர் அசைவற்று தரையோடு தரையாக படுத்திருந்ததை பார்த்த புலி, அதே இடத்தில் அந்த இளைஞரின் அருகிலேயே அமர்ந்து கொண்டிருந்தது. அதை பார்த்த அக்கம் பக்கம் பொதுமக்கள் தொடர்ந்து கூச்சலிடத் தொடங்கினர். அதேபோல் ஒருசிலர் அந்த பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறி அமர்ந்து சத்தம் போட்டனர்.

சத்தம் அதிகரிப்பதை அறிந்த புலி

சத்தம் அதிகரிப்பதை அறிந்த புலி

தொடர்ந்து மக்கள் கூச்சலிட்டுக் கொண்டே இருந்தனர். பொதுமக்களின் சத்தத்தை கேட்ட புலி இளைஞர் அருகிலேயே சிறிது நேரம் அமர்ந்திருந்தது. சத்தம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிப்பதை கொஞ்சம் கொஞ்சமாக தனக்கு அருகில் கேட்பதையும் புலி அறிந்தது.

Selfie Accident: தண்டவாளத்தில் செல்பி எடுத்த இரண்டு இளம்பெண்களில் ஒருவர் மரணம்-மற்றொருவர் நிலை என்ன?Selfie Accident: தண்டவாளத்தில் செல்பி எடுத்த இரண்டு இளம்பெண்களில் ஒருவர் மரணம்-மற்றொருவர் நிலை என்ன?

கேஷுவலாக நடந்து வந்த இளைஞர்

இதையடுத்து அந்த இளைஞர் தரையோடு தரையாக படுத்துக் கொண்டே இருந்த நிலையில், பொதுமக்கள் கூச்சல் அதிகரித்ததை தொடர்ந்து அந்த புலி தலை தெறிக்க அந்த சாலையை கடந்து ஓடியது. புலி ஓடிய அடுத்த விநாடியே, புலியிடம் சிக்கிய இளைஞர் சிறிய காயங்களுடன் எழுந்து நடக்கத் தொடங்கினார்.

சமூகவலைதளங்களில் வைரலாகும் வீடியோ

சமூகவலைதளங்களில் வைரலாகும் வீடியோ

இந்த காட்சியானது அந்த பகுதி வாசிகள் தங்களது மொபைல் போனில் வீடியோவாக பதிவு செய்தனர்.இதுதொடர்பாக பர்வீன் கஷ்வான் என்ற வனத்துறையினர், புலியிடம் சிக்கிய இளைஞர் குறித்த வீடியோவை பகிர்ந்துள்ளார். தற்போது இந்த வீடியோ சமூகவலைதளங்களில் பெரிதளவு வைரலாகி வருகிறது.

Best Mobiles in India

English summary
The young man who was trapped alone by the tiger is virtually alive

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X