இந்தோனேசியா கரென்சி நோட்டில் விநாயகர் உருவம்! காரணம் என்ன தெரியுமா?

|

இந்தோனேசியாவின் கரென்சியை ரூபியா (rupiah) என்று அழைப்பார்கள். இந்தோனேசியாவில் உள்ள 20,000 ரூபியா நோட்டில் விநாயகர் உருவம் பொறிக்கப்பட்டுள்ள செய்தி தற்பொழுது சமூக வலைத்தளம் முழுதும் வைரல் ஆகிவருகிறது.

விநாயகரின் உருவம் இந்தோனேசியா எப்படிச் சென்றது?

விநாயகரின் உருவம் இந்தோனேசியா எப்படிச் சென்றது?

இந்து மதக் கடவுளான விநாயகரின் உருவம் இந்தோனேசியா எப்படிச் சென்றது என்ற கேள்வி உங்களுக்கு எழுந்திருக்கும். இந்தோனேசியர்களுக்கும் விநாயகருக்கும் என்ன சம்பந்தம் என்று யோசிக்கத் துவங்கி இருப்பீர்கள். காரணம் என்ன என்பதை நாங்கள் சொல்கிறோம் தெரிஞ்சுக்கோங்க.

எத்தனை சதவீத மக்கள் தற்பொழுது இந்துக்கள் என்று தெரியுமா?

எத்தனை சதவீத மக்கள் தற்பொழுது இந்துக்கள் என்று தெரியுமா?

இந்தோனேசியாவில் உள்ள மொத்த மக்கள் தொகையில் அதிகப்படியானோர் முஸ்லீம் மதத்தைப் பின்பற்றுபவர்கள். குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் மொத்த மக்கள் தொகையில் சுமார் 87.5 சதவீதம் பேர் முஸ்லீம் மதத்தைச் சேர்ந்தவர்கள். அதேபோல் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் வெறும் 3 சதவீதம் மட்டுமே இந்தோனேசியாவில் உள்ளனர்.

கூகுள் எச்சரிக்கை: உடனே இந்த செயலியை Uninstall செய்யுங்க இல்லனா ஆபத்து!கூகுள் எச்சரிக்கை: உடனே இந்த செயலியை Uninstall செய்யுங்க இல்லனா ஆபத்து!

பண்டைய கால வரலாறு

பண்டைய கால வரலாறு

பண்டைய காலத்தில் இந்து மதத்தினர் தான் இந்தோனேசியா முழுதும் பரவி இருந்துள்ளனர் என்று வரலாறு குறிப்பிடுகிறது. அதிக அளவிலான மக்கள் இந்து மதத்தைப் பின்பற்றியதுடன் இன்றும் பல இடங்களில், பல இந்து மத சிற்பங்கள் மற்றும் ஓவியங்கள் இந்தோனேசியா முழுதும் நிலைத்திருக்கிறது என்பதே உண்மை.

செவ்வாய் கிரக ஏலியன்கள் கையில் இருக்கும் அணுஆயுதம்:நாசாவின் தகவல்?செவ்வாய் கிரக ஏலியன்கள் கையில் இருக்கும் அணுஆயுதம்:நாசாவின் தகவல்?

நிலைத்திருக்கும் மரபு

நிலைத்திருக்கும் மரபு

குறிப்பாகக் கூறினால் மகாபாரதத்தில் கிருஷ்ணர் ஓட்டிச் செல்லும் ரதத்தின் சிலை, பல கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்தின் முத்திரைகளில் விநாயகர் உருவம் மற்றும் ரூபியா நோட்டுகளில் விநாயகர் உருவம் என்று, இன்றும் பண்டைய மரபு நிலைத்திருக்கிறது.

அமேசான்: ஸ்மார்ட்போன்களுக்கு நம்பமுடியாத தள்ளுபடி அறிவிப்பு.!அமேசான்: ஸ்மார்ட்போன்களுக்கு நம்பமுடியாத தள்ளுபடி அறிவிப்பு.!

மக்கள் கூறிய காரணம்

மக்கள் கூறிய காரணம்

இக்காரணத்தினால் தான் இந்தோனேசிய கரென்சி நோட்டுகளில் விநாயகர் உருவம் இருப்பதாகக் கூறப்படுகிறது. உண்மை ஒரு புறம் இருக்க மக்கள் கூறிய கருத்தையும் கேட்டுக்கொள்ளுங்கள், செல்வத்தின் கடவுளாகப் பார்க்கப்படுபவர் விநாயகர் என்பதனால் பணத்தின் மதிப்பு கூடும் என்ற நம்பிக்கையில் அரசாங்கம் இந்த செயலை செய்துள்ளதாக இந்தோனேசியா மக்கள் தெரிவித்துள்ளனர்.

Best Mobiles in India

English summary
The True Reason Behind Why Lord Ganesha Placed On Indonesian Currency : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X