Home
Social media

பொள்ளாச்சியில் 200 பெண்களை மிரட்டி ஆபாச டியோ எடுத்த இளைஞர் அதிரடி கைது.!

பொள்ளாச்சியில் சுமார் 200 பெண்களை மிரட்டி ஆபாச படம் எடுத்த வழக்கில் தலைமறைவாக இருந்த இளைஞர் திருநாவுக்கரசை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே 6 பேர் கைது செய்யப்பட்ட

பொள்ளாச்சியில் சுமார் 200 பெண்களை மிரட்டி ஆபாச படம் எடுத்த வழக்கில் தலைமறைவாக இருந்த இளைஞர் திருநாவுக்கரசை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

பொள்ளாச்சியில் 200 பெண்களை மிரட்டி ஆபாச  வீடியோ:இளைஞர் அதிரடி கைது.!

இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே 6 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். மேலும், அரசியல் கட்சியினர் உட்பட பல்வேறு தரப்பினர் இந்த வழக்கில் சமந்தப்பட்டர்களை கைது செய்ய கோரி போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில், முக்கியமாக இருந்தவரையும் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

பேஸ்புக் மூலம் காதல் வலை:

பேஸ்புக் மூலம் காதல் வலை:

பெள்ளாச்சியில் 100க்கும் மேற்பட்ட பெண்களை பேஸ்புக் மூலம் காதல் வலையில் வீழ்த்தி, அவர்களை சொகுசு காரில் அழைத்து சென்று, அவர்களை மிரட்டி ஆபாசபடம் எடுத்து வந்தனர்.

இதில் சுமார் 200 பெண்கள் இதில் சிக்கியுள்ளதாக கூறப்படுகின்றது.

கல்லூரி மாணவியுடன் காதல்:

கல்லூரி மாணவியுடன் காதல்:

ஜோதி நகரை சேர்ந்த சபரி (எ) ரிஸ்வந்த் தனியார் கல்லூரியில் சிவில் இன்ஜினியரிங் படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த ஒரு கல்லூரி பெண்ணுடன் காதல் பேஸ்புக் மூலம் காதல் வலையை விரித்துள்ளார். இதில், அந்த பெண்ணும் சிக்கியுள்ளார். மேலும், பேஸ்புக் சேட்டிங், மொபைல் எண்ணை பரிமாறும் வகையில் வந்துள்ளது.
இந்நிலையில், செல்போனில் பேசிய அவர்கள் தன்னை சந்திக்க வறுமாறு அவர் அழைத்துள்ளார்.

காரில் மாணவி கடத்தல்:

காரில் மாணவி கடத்தல்:

இந்த வழக்கில் அந்த மாணவியை, வசந்தகுமார் (24), சதீஸ்குமார் (28), திருநாவுக்கரசு ஆகியோருடன் காரில் ஊஞ்சவேலாம்பட்டி வந்த சபரி, மாணவியை தாராபுரம் சாலையில் காரில் அழைத்துச் சென்றுள்ளார். நண்பர்களுடன் சேர்ந்து மாணவியை மிரட்டி வற்புறுத்தி ஆபாசமாகப் புகைப்படங்கள் எடுத்துள்ளனர்.

 பணம் கேட்டு மிரட்டல்:

பணம் கேட்டு மிரட்டல்:

அந்த பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்ததால் அவர் சத்தமிட்டுள்ளார். இதனால் நகை பிடிங்கு கொண்டு அவர்கள் பெரியாகவுண்டன்புதூர் பகுதியில் நடுரோட்டில் அந்த பெண்ணை இறக்கிவிட்டு தப்பினர். அந்த மாணவி வீடு திரும்பியுள்ளார். அப்போது போன் செய்து தங்களிடம் ஆபாச படம் இருக்கின்றது என்று மேலும் பணம் கேட்டு மிட்டியுள்ளார். காதல் விரக்தியடைந்த மாணவி, வீட்டியில் கூறியுளார். பிறகு போலீசில் அவர்கள் புகார் அளித்துள்ளர்.

 6 பேர் கைது:

6 பேர் கைது:

இந்த வழக்கில் சமந்தப்பட்டவர்களை போலீசார் உடனடியாக ரிஸ்வந்த், வசந்தகுமார் (24), சதீஸ்குமார் (28), ஆளும் கட்சியை சேர்ந்த பிரமுகர் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருத்தப்பட்ட திருநாவுக்கரசு மட்டும் தலைமறைவாக இருந்தார்.

200 பெண்களின் வீடியோ:

200 பெண்களின் வீடியோ:

போலீசார் கைது செய்யப்பட்டவர்களின் செல்போன்களை பறிமுதல் செய்து ஆய்வு செய்தனர். அப்போது, திருமணம் ஆன பெண்கள், கல்லூரி மாணவிகள், இளம் பெண்கள் உட்பட 200 பெண்களின் ஆபாச வீடியோவும் இருந்தது. அவர்களுடன் பாலியல் உறவு கொண்ட காட்சிகளும் இருந்தது. இதையடுத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டர். இதைக்கு கண்டு போலீசார் அதிர்ந்து போயினர்.

 அரசியல் கட்சிகள் போராட்டம்:

அரசியல் கட்சிகள் போராட்டம்:

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சார்பில் பொள்ளாச்சியில் பெரும் போராட்டம் வெடித்து, இந்த வழக்கில் சமந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய் வேண்டும் என்று போராட்டம் நடத்தினர். மேலும் பொது மக்களின் போராட்டம் அதிகமானதால், வழக்கை துரிதமாக நடவடிக்கை டிஎஸ்பி ஜெயராமன் போலீசாருக்கு உத்தரவிட்டார்.

 வாட்ஸ் ஆப்பில் போலீசாருக்கு மிரட்டல்:

வாட்ஸ் ஆப்பில் போலீசாருக்கு மிரட்டல்:

திருநாவுக்கரசு அவ்வப்போது, போலீசாருக்கு வாட்ஸ் ஆப்பில், தனக்கு 100 பெண்கள் சாதமாக இருக்கிறார்கள். மீதமுள்ள ஒரு பெண் மட்டும் தான் எனக்கு எதிராக இருக்கின்றார். நான் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்கின்றேன்.

தொடர்ந்து திங்கட்கிழமை வீடியோ ஒன்றை வெளியிட்ட திருநாவுக்கரசு, தாம் தவறு செய்திருந்தால் சம்மந்தப்பட்ட பெண்ணே தண்டிக்கட்டும் என்றும் தாம் பொள்ளாச்சி வரவுள்ளதாகவும் கூறியிருந்தார். வழக்கை திசை திருப்பும் வகையில் திருநாவுக்கரசு ஆடியோ, வீடியோக்களை வெளியிட்டு வருவதாக போலீசார் கூறியிருந்தனர். மிரட்டல் விடும் பாணியில் இருந்ததால் போலீசாரும் அதிர்ந்து போனார்கள்.

அதிரடியாக கைது:

அதிரடியாக கைது:

இந்நிலையில் போலீசார் பொள்ளாச்சி மாக்கினாம்பட்டியில் பதுங்கியிருந்த திருநாவுக்கரை போலீசார் கைது செய்தனர். டிஎஸ்பி ஜெயராமன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடக்கின்றது.

Best Mobiles in India

English summary
The Arrested Person Was Arrested In Pollachi By Facebook And Threatened To Take Sex With Women Through Facebook : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X