நீங்க மட்டுமில்ல நாங்களும் தான் யூஸ் பண்ணுவோம்-வேறலெவல் சிம்பன்ஸி.! வைரல் வீடியோ.!
குறிப்பாக சிம்பன்ஸி இண்ட்ராகிராம் பகக்கத்தை ஸ்கோரல் செய்தும், வீடியோ மற்றும் புகைப்படங்களை தேர்ந்தெடுத்து பார்க்கிறது.
ஸ்மார்ட்போன் பொறுத்தவரை இப்போது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிகளவில் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக ஸ்மார்ட்போன்களில் உள்ள பல்வேறு புதிய வசதி நமது தினசரி வேலைகளை
குறைத்து விடுகின்றன என்று தான் கூறவேண்டும்.

இந்நிலையில் ஒரு குரங்கான சிம்பன்ஸி அசாத்தியமாக ஸ்மார்ட்போனை பயன்படுத்துகிறது. இன்ஸ்டாகிராமில் இருக்கும் படங்கள் மற்றும் வீடியோக்களை தானே தேர்ந்தெடுத்து விருப்பமானதைப் பார்க்கிறது. இந்த வீடியோ 5 நாட்களுக்கு முன்பு இண்ஸ்டாகிராம் பக்கத்தில் மைக் ஹோல்ஸ்டன் என்பவர் பதிவிட்டுள்ளார். 1.5 மில்லியன் பார்வையாளர்கள் இதை பார்வையிட்டுள்ளனர். ட்விட்டரில் சுமார் 6 மில்லியன் மக்கள் பார்வையிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக சிம்பன்ஸி இண்ட்ராகிராம் பகக்கத்தை ஸ்கோரல் செய்தும், வீடியோ மற்றும் புகைப்படங்களை தேர்ந்தெடுத்து பார்க்கிறது. இதோ வைரலான ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் சிம்பன்ஸி வீடியோ

கொரிலாக்களையும் விட்டு வைக்காத செல்பி மோகம்: டிரெண்டிங் ஆன படங்கள்.!
செல்பி எடுப்பது மனிதர்களையும் பிடித்துக் கொண்ட வியாதி அல்ல. இப்ப விலங்களிடம் பரவியுள்ளது. இதில் நாம் செல்போனை எடுத்து செல்பி எடுக்க சென்றால், கூட தற்போது விலங்குகளும் செல்பிக்கு வந்து போஸ் கொடுப்பது வழக்கமாகி விட்டது.
இந்த பட்டியலில்ல தற்போது கொரிலாக்களும் இடம் பிடித்து விட்டன. இதில் சுவாரஸ்சியமான வியங்களும் நடந்துள்ளது என்பது குறிப்பிட தக்கது.
செல்பி மோகம்:
இளைஞர்கள் முதல் பொரியோர் வரை உலகம் முழுக்க செல்பி மோகம் ஒரு பக்கம் டிரெண்டிங் ஆகியுள்ளது. வித்தியாசமான செல்பியும் எடுக்க ஆசைப்பட்டு உயிரை விட்ட இளைஞர்களின் சம்பவம் அரங்கேறியுள்ளது. இன்றைய தலைமுறையை செல்போன் மற்றும் செல்பியும் அடிமைப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

வளர்ப்பு பிராணிகளும்:
இந்த பட்டியலில் வளர்ப்பு பிராணிகளும் இடம் பிடித்துள்ளது. நாம் செல் எடுக்கும் போது, அவைகளுடன் எடுத்து வருகின்றோம். இதனால் வளர்ப்பு பிராணிகளும் செல்பிக்கு அடிமையாகி விட்டன. நாம் செல்போனை எடுத்தாலே உடனே ஓடி வந்து புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கின்றன.
கொரிலா செல்பி போஸ்:
காங்கோவில் வனத்துறை ஊழியர் ஒருவர் எடுக்கும் செல்ஃபி போட்டோக்களுக்கு இரு கொரில்லாக்களும் போஸ் கொடுப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

செல்பிக்கு அடிமையான கதை:
விருங்கா தேசியப் பூங்காவில் ((Virunga National Park)) கொரில்லா வகைக் குரங்குகள் பாதுகாக்கப்பட்டு வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அங்கு பணியாற்றும் பேட்ரிக் சாடிக் என்பவர் அவ்வப்போது கொரில்லாக்களுடன் சேர்ந்து செல்ஃபி எடுத்து வந்துள்ளார்.

குஷியான போஸ்கள்:
நாளடைவில் அவர் செல்போனை தூக்கினாலே அங்கிருக்கும் நடாகாஷி மற்றும் மடாபிஷி ((Ndakasi and Matabishi)) என்ற இரு கொரில்லாக்கள் வேகமாக வந்து போட்டோக்களுக்கு போஸ் கொடுக்கின்றன. கொரில்லாக்களின் இந்தச் செயல் பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளன.


Click it and Unblock the Notifications