தமிழர்களை கீழ்தரமாக காட்டும் தாக்காரே திரைப்படம் டுவிட்டரில் வைரல்.!
அதில் தமிழர்களை தவறானவர்களாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது. மேலும், டீ விற்ற தமிழர் ஒருவர் மீது சிவ சேனா கட்சியினர் தாக்குதல் நடத்துவதும் காட்சியாக உருவாக்கப்பட்டுள்ளது.
பால் தாக்காரே வாழ்கை வரலாறு தற்போது திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ளது. இது தாக்காரே என்ற பெயரில் வெளியாகவுள்ளது.

அதில் தமிழர்களை தவறானவர்களாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது. மேலும், டீ விற்ற தமிழர் ஒருவர் மீது சிவ சேனா கட்சியினர் தாக்குதல் நடத்துவதும் காட்சியாக உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த திரைப்படத்தின் காட்சிகளும் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாக்காரே திரைப்படம்:
சிவசேனை எம்பி சஞ்சய் ராவுட் மற்றும் வையகாம் 18 நிறுவனம் சார்பில் இந்த திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. தேர்தல் வர சில மாதங்களே இருக்கும் நிலையில், தமிழர்களை தவறானவர்களாக காட்சிகளில் காட்டுகின்றது.
மும்பையை ஆக்கிரமித்த தமிழர்கள்:
மும்பையை ஆக்கிரமித்த வெளிநபர்களாக தமிழர்கள் காண்பிக்கப்படுகிறார்கள். உள்ளூர் மகாராஷ்டிரா மக்களிடம் இருந்து தமிழர்கள் வேலை பறித்து கொள்பவர்கள் போல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
மும்பையில் தமிழர்கள் வசிப்பது பெரிதுபடுத்தி காண்பிக்கப்பட்டுள்ளது. மராத்தி பேசுவர்கள் எளியமையாகவும் சாதுவாகவும் காண்பிடிக்கப்பட்டுள்ளனர். இதன் இந்தியர்களால் மராத்தி பேசுபவர்கள் நசுக்கப்படுவர்களாக காட்டப்பட்டுள்ளது.
தமிழர்களின் மீது தாக்குதலுக்கு ஆயத்தம்:
முதலில் தாக்கரே 'மார்மிக்' என்ற பத்திரிகையை தொடங்குகிறார். பின்னர், மராத்திய மண்ணின் மக்களின் உரிமையை காப்பதற்காக 'சிவசேனை' என்ற அரசியல் அமைப்பு ஒன்றை அமைக்கிறார்.
தாக்கரேவின் ஆக்ரோஷமான பேச்சை கேட்கும் உள்ளூர் இளைஞர்கள், தென் இந்தியர்களின் குடியிருப்புகளை தாக்குகிறார்கள்.
இதில் சோகமான பகுதி என்னவென்றால், தனது சைக்கிளில் இட்லி விற்கும் தென் இந்திய நபர் ஒருவரை, தாக்ரேவின் ஆதரவாளர்கள் கடுமையாக மிரட்டுகின்றனர். அந்த இட்லி விற்கும் நபர், தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடுகிறார். அவர் விற்க வைத்திருந்த சாம்பார் முழுவதும் தரையில் கொட்டிவிடுகிறது.
மராத்தியர்களால் விரட்டியடிக்கப்படும் காட்சி:
அந்த காட்சியை பார்க்கும் போது எனக்கு தோன்றியது இதுதான். இந்த நபர் யார் வேலையை பறித்தார்? அவர் அவரது தொழிலை அல்லவா செய்துகொண்டிருந்தார்? அவர் உழைத்துதானே சம்பாதித்துக் கொண்டிருந்தார்? அவருக்கு ஏன் இந்த தண்டனை? அந்த பாவப்பட்ட இட்லி விற்கும் நபர் உயிருக்கு பயந்து ஓடும்போது, அந்தக் காட்சியை பார்க்கும் மராத்திய மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என்று தயாரிப்பாளர்கள் நினைத்தார்களா? இதுதான் தாக்ரே மற்றும் அவரது ஆதரவாளர்களின் வெற்றியா? அல்லது இதுதான் தோல்வியா?
வன்முறையை நீயாப்படுத்தல்:
இந்தப்படம் முழுக்க வன்முறை நிறம்பியிருக்கிறது. மேலும், அந்த வன்முறைகளை நியாயப்படுத்த பல வெட்கமில்லாத விளக்கங்களும் அளிக்கப்பட்டுள்ளது. நீங்கள் தென் இந்தியர்களை வில்லன்களாக காண்பிக்காவிட்டால், அவர்களை தாக்குவதை எப்படி நியாயப்படுத்துவீர்கள்?
அண்ணாவின் காட்சி:
லுங்கி அணிபவர்கள் என தென் இந்தியர்களை விவரிக்கிறார் தாக்கரே. இந்த வசனத்திற்கு கர்நாடக மாநிலத்தின் 'ஷெட்டி'களும், தமிழ்நாட்டின் 'மதராசி'களும் ஒன்றுதான். இந்த படத்தை பொறுத்தவரை, 'அண்ணா' என்று அழைக்கப்பட்டு, கறுப்புத் தோல், அடர்த்தியான தாடி வைத்து, லுங்கி அணிந்து, காஃபி குடித்து, இட்லி உண்ணும் ஒருவர் 'மதராசி' எனப்படுகிறார். இந்த குழப்பம் திரைப்படம் முழுவதும் இருக்கிறது.
முஸ்லீகளையும் பிரித்து காட்டுதல்:
தென் இந்தியர்கள் அவர்களுக்கே உண்டான பாணியில் ஆங்கிலம் பேசுபவர்கள், பல்வேறு அலுவலகங்களில் முதலாளிகளாக காண்பிக்கப்படுகின்றனர். மும்பையில் ஒரு ஆங்கில நாளிதழுக்கு தாக்ரே, கார்டூனிஸ்டாக இருக்கும்போது, அங்கிருக்கும் தென் இந்திய முதலாளி, முதுகெலும்பு இல்லாத சந்தர்ப்பவாதியாக காட்டப்பட்டுள்ளார்.
திரைப்படம் நகர நகர, வில்லன்கள் மாறுகிறார்கள். தென் இந்தியர்களின் இடத்தில் முஸ்லிம்கள். மராத்தி மானு என்பது இந்துத்வாவாக மாறுகிறது. தாக்ரேவின் அரசியல் 'அவர்கள் Vs நாங்கள்' என்று தொடர்கிறது.

பால்தக்காரேவை வரவேற்ற ரஜினி:
தமிழர்களுக்கு எதிராக இப்போது சிவசேனை ஏதும் பேசுவதில்லை என்றாலும், 1960களின் நினைவை இத்திரைப்படம் தந்து செல்கிறது. 2010ஆம் ஆண்டு பால் தாக்கரே, நடிகர் ரஜினிகாந்தை வரவேற்று தமிழகத்தில் அவரது பணிக்காக பாராட்டினார். எனினும், மும்பையில் தமிழர்களுக்கு எதிராக வன்முறை பிரச்சாரம் நடத்தியே சிவசேனை என்ற கட்சி வளர்ந்தது என்பதை யாராலும் மறக்க முடியாது.


Click it and Unblock the Notifications