உள்துறை அமைச்சரைப் புரட்டிப்போட்ட பேரனின் டிக் டாக் வீடியோ!

|

ஹைதராபாத்: தெலுங்கானா உள்துறை அமைச்சரின் பேரன், அரசாங்க காவல்துறை வாகனத்தின் பேனட்டில் தனது நண்பருடன் அமர்ந்து டிக் டாக் வீடியோ ஒன்றைப் பதிவு செய்திருக்கிறார். தற்பொழுது இந்த வீடியோ வைரலாகி பெரிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

அரசாங்க உடைமைகள் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது

அரசாங்க உடைமைகள் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது

தெலுங்கானா உள்துறை அமைச்சர் முஹம்மத் அலியின் பேரன் ஃபர்கான் அஹ்மத், அரசாங்க வாகனத்தின் மீதேறி உட்கார்ந்து டிக் டாக் வீடியோ பதிவு செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசாங்க உடைமைகள் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது.

உள்துறை அமைச்சரின் அலட்சியம்

உள்துறை அமைச்சரின் அலட்சியம்

இந்த வீடியோ சமூக ஊடகங்களில் தற்பொழுது வைரல் ஆகிவருகிறது. அரசாங்க வாகனத்திற்கென்று இருக்கும் மரியாதை பறிபோய் உள்ளதென்றும், காவல்துறையினர் இதைக் கண்டிக்க தவறியதையும், உள்துறை அமைச்சரின் அலட்சியத்தைப் பற்றியும் நெட்டிசன்ஸ்கள் வெகுவாக விமர்சித்து வருகின்றனர்.

<span style=ஸ்மார்ட் டிவி ஹேக்:ஆபாசதளத்தில் தம்பதியின் பாலியல் வீடியோ: மக்களே உஷார்.!" title="ஸ்மார்ட் டிவி ஹேக்:ஆபாசதளத்தில் தம்பதியின் பாலியல் வீடியோ: மக்களே உஷார்.!" loading="lazy" width="100" height="56" />ஸ்மார்ட் டிவி ஹேக்:ஆபாசதளத்தில் தம்பதியின் பாலியல் வீடியோ: மக்களே உஷார்.!

 பதிவு எண் தெளிவாகக் கூறிய விபரம்

பதிவு எண் தெளிவாகக் கூறிய விபரம்

அனைத்து போலீஸ் வாகனங்களும், போலீஸ் டைரக்டர் ஜெனரல் என்ற பெயரில் வாகன எண்கள் பதிவு செய்யப்பட்டும். அந்த வீடியோவில் உள்ள வாகனம் உள்துறை அமைச்சருக்கு ஒதுக்கப்பட்டுள்ள வாகனம் என்று அதன் பதிவு எண் தெளிவாகக் கூறுவதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

அமைச்சரின் பதில்

அமைச்சரின் பதில்

இரண்டு நாட்களுக்கு முன்பு ஹைதராபாத்தின் யகத்புராவில் நடந்த ஒரு விழாவிற்கு அவரும், அவர் குடும்பத்தினரும் சென்றதாக அமைச்சர் கூறியுள்ளார். அவரின் பேரன் வாகனத்தின் மீது அமர்ந்திருக்கிறார், உள்ளூர்க்காரர் யாரோ இந்த வீடியோவை பதிவு செய்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

<span style=தமிழக மாணவர்களின் தரமான கண்டுபிடிப்பு: பெட்ரோல் பிரச்சனைக்கு அருமையான தீர்வு.! " title="தமிழக மாணவர்களின் தரமான கண்டுபிடிப்பு: பெட்ரோல் பிரச்சனைக்கு அருமையான தீர்வு.! " loading="lazy" width="100" height="56" />தமிழக மாணவர்களின் தரமான கண்டுபிடிப்பு: பெட்ரோல் பிரச்சனைக்கு அருமையான தீர்வு.!

சம்பவத்திற்கும் பேரனுக்கும் சம்மந்தம் இல்லை

சம்பவத்திற்கும் பேரனுக்கும் சம்மந்தம் இல்லை

இந்த சம்பவத்திற்கும் அவரின் பேரனுக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை என்றும், வீடியோவில் உள்ள இன்னொரு நபரின் மேல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். இந்த சம்பவம் பற்றிய கேள்விகளுக்குத் தெலுங்கானா காவல் பணிப்பாளர் நாயகம் மகேந்தர் ரெட்டி மௌனம் சாதித்துள்ளார்.

Best Mobiles in India

English summary
Telangana Home Ministers grandson landed himself in a controversy after tiktok video gone viral : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X