ஃபேஸ்புக் படங்களில் ரகசிய செய்திகளை அனுப்பலாம்!

Written By:

ஃபேஸ்புக் படங்களில் ரகசிய செய்திகளை அனுப்பலாம்!

ஆம் ஃபேஸ்புக் பயனாளர்களுக்காக புதிய வசதியொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி ஃபேஸ்புக் கணக்கு வைத்துள்ளவர்கள் இனிமேல் தாங்கள் பகிரும் படங்களில் ரகசிய செய்தியை மறைத்து குறிப்பிட்டவருக்கு மட்டும் தெரியும்வகையில் அனுப்பமுடியும்.

இதை ஓவன் காம்பெல் மூரே என்ற ஆக்ஸ்போர்ட்டு மாணவர் உருவாக்கியுள்ளார். இவர் முன்னர் கூகுள் நிறுவனத்தில் இன்டர்ன் முறையில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய நீட்சிக்கு மூரே, 'சீக்ரெட்புக்' என பெயரிட்டுள்ளார். தற்சமையம் இது கூகுள் குரோம் பிளக்கின் ஆகமட்டுமே கிடைக்கிறது. இதை உங்களுடைய குரோம் உலவியில் நிறுவிவிட்டால் நீங்கள் ஃபேஸ்புக் பக்கங்களில் அப்லோட் செய்யும் ஒவ்வொரு JPEG படத்திலும் ரகசிய செய்தியை மறைத்து வைக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

டேப்லெட் கணினிகள் கட்டுப்படுத்தும் லண்டனில் உள்ள அதிநவீன ஹோட்டல்..!

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot