மாணவிகள் உடை மாற்றுவதை பார்த்த ஆசிரியருக்கு அடி உதை.!

நமக்கு கல்வி போதிப்பவரே குரு (ஆசிரியர்). இவரை நாம் போற்றி வணங்குகிறோம். குருவானவர் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நமக்கு கல்வி போதிக்கிறார்.

|

இந்தியா என்றாலே அனைத்து நாட்டினருக்கும் பிடிக்கும். நம் நாட்டில் இந்து, கிறிஸ்துவம், இஸ்லாமியம், சீக்கியம், பௌத்தம் என்று பல்வேறு மதங்கள் பரவலாக இருக்கின்றன. பழங்காலம் முதல் பாரத கலாச்சாரத்தில் குரு கல்வி முறை இருந்து வருகிறது.

நமக்கு கல்வி போதிப்பவரே குரு (ஆசிரியர்). இவரை நாம் போற்றி வணங்குகிறோம். குருவானவர் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நமக்கு கல்வி போதிக்கிறார்.

மாணவிகள் உடை மாற்றுவதை பார்த்த ஆசிரியருக்கு அடி உதை.!

அவர் நமக்கு கல்வி போதிப்பால், நாமும், நம் குடும்பமும் செழிப்பது மட்டும் இல்லாமல் நம் தலைமுறையும் செழிக்க உதவுகிறது. மேலும் ஒட்டு மொத்த சமுதாயமும் ஓங்கிறது என்றால் அது நமக்கு கல்வி போதிக்கும் ஆசிரியரால் தான் நடக்கிறது என்றால் மட்டும் மிகையாகாது.

மாதா, பிதா, குரு, தெய்வம்:

மாதா, பிதா, குரு, தெய்வம்:

நாம் மாதா பெற்ற தாயை முதலில் வணங்குகிறோம். பிறகு பிதா எனப்படும் தந்தைதைய வணங்குகிறோம். மூன்றாவதாக நமக்கு கல்வி என்னும் ஞான அறிவை புகட்டும் ஆசிரிரை குருவாக வணங்கிறோம். இந்த குருவிற்கு பிறகு தான் தெய்வத்தை வணங்குகிறோம் இது நம் பாரத்தின் பண்பாடு. இதை யாராலும் மாற்றவும் முடியாது. மறுக்கவும் முடியாது.

கற்கை நன்றே:

கற்கை நன்றே:

கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே என்று பாண்டிய மன்னர்களின் ஒருவரான அதிவீரராமா பாண்டியன் நறுத்தொகை நூலில் கூறுகிறார். இந்த பாடலின் விளக்கம் என்னவென்றால் ஒருவர் பிச்சை எடுத்தாவது, கற்க வேண்டும். அவ்வாறு கல்வி கற்றால் தான் அவருக்கு பின்னாளில் உதவும் என்று கூறுகிறார். இதுதான் உண்மை இந்த உண்மையின் பயனால் தான் தற்போது கல்வி கற்பது என்பது வளர்ந்த கொண்டிருக்கிறது. மேலும், இந்திய அரசாங்கமும் கல்வி கற்போரை உயர்த்த பல்வேறு முயற்சிகளை கொண்டு வருகிறது.

எழுத்து அறிவித்தவன் இறைவன்:

எழுத்து அறிவித்தவன் இறைவன்:

எழுத்து அறிவித்தவன் இறைவன் என்று நறுத்தொலை நூல் கூறுகிறது. நமக்கு எழுத்து மற்றும் கல்வியை போதிப்பவர் குரு எனப்படும் ஆசிரியர் தான். இவரை நாம் இறைவனாக போற்றுகிறோம். இதனாலே என்னவோ இந்திய முறைப்படி நாம் நமக்கு கல்வி கற்றுகொடுத்தோரை நன்றி உணர்வோடு வணங்கி வருகிறோம்.

ஆசிரியர்களுடன் அதிக நேரம்:

ஆசிரியர்களுடன் அதிக நேரம்:

மாணவர்கள் வீட்டை விட பள்ளியில் தான் அதிக நேரம் இருக்கின்றனர். மேலும் நமக்கு ஆசிரியர்களே மற்றொரு பெற்றோராக இருக்கின்றனர். அவர்கள் நமக்கு நன்மை எது, தீமை எது என்றும் விளக்குகின்றனர். அறியாமைகளையும் ஆசிரியர் நீக்கிவிடுவார். நமக்கு தெளிவான சிந்தனையும் நல்ல காரியங்களை செய்யும் படி வித்திடுகிறார். அதனால் அவர்களை உயிரிலும் மேலாக எண்ணி வருகிறோம்.

கலாச்சாரத்தில் சீரழிவு:

கலாச்சாரத்தில் சீரழிவு:

நம் பாரத காலாச்சாரத்தில் சீரழிவு ஏற்பட்டதால், பல்வேறு கொடுமைகளும் அரங்கேறி வருகிறது. இதனால் குழந்தைகள் முதல் பெரியோர் வரை தனக்கு இந்த சமுதாயத்தில் உள்ள பங்கு என்ன என்று தெரியாமல் விழிகள் இருந்தும் மூடி பாழும் குழியில் விழுந்து கலாச்சாரத்தில் சீரழிவு ஏற்படுத்தி வருகின்றனர். முறையற்று ஆசிரியர்கள்- மாணவர்கள் பாலியல் ரீதியாக இணைவதால், தன்மை மட்டும் அழிக்காமல் மற்ற மாணவர்களையும், ஆசிரியர்களையும் அழித்து கல்வியையும் அழித்து விடுதாக அமைந்து விடுகிறது.

ஆசிரியர்களின் பாலியல் சீண்டல்கள்:

ஆசிரியர்களின் பாலியல் சீண்டல்கள்:

ஆசிரியர்கள் தங்களிடம் படிக்கும் மாணவர்களை பாலியல் சீண்டல்கள் செய்த சம்பவம் தினசரி செய்திதாள்களிலும், இணைய தளங்களிலும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இதனால் கல்வியை போதிக்கும் ஆசிரியர்கள் பெற்ற பிள்ளை போல் உள்ள மாணவர்களிடம் மிரட்டி, வீடியோ எடுத்து, பாலியல் வல்லுறவு செய்வதால் அவர்கள் கல்வியை இழக்க நேரிடுகிறது. இதனால் ஆசிரியர்கள் மீது இருந்த பாசமும், அன்பும், மதிப்பும் சமுதாயத்தில் பறிபோகிறது. அண்மைகாலமாக இதுபோன்ற சம்பவங்கள் இந்தியா முழுவதும் நடப்பதால் பெற்றோர்களையும், மாணவர்களையும் பெரும் சிரமத்திற்கு ஆளாக்கி வருகிறது.

உடை மாற்றுவதை எட்டி பார்த்த ஆசிரியர்:

உடை மாற்றுவதை எட்டி பார்த்த ஆசிரியர்:

உத்தரப்பிரதேசம் மாநிலம் ஹசாயன் என்ற கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில், 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையுள்ள மாணவிகளுக்கு புதிய சீருடையை வழங்கப்பட்டது. மாணவிகள் உடைகளை மாற்றும் போது, அதனை ஜென்னல் வழியாக மறைந்திருந்த ஆசிரியர் ஒருவர் பார்த்துள்ளார். இதையறிந்த மாணவிகளின் பெற்றோர்கள் கூட்டமாக பள்ளிக்கு வந்து தாக்கியுள்ளனர். தொடர்ந்து ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் இருவர் மீதும் சாதாரண பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார் இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமூக இணையதளத்தில்:

சமூக இணையதளத்தில்:

தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளியிலும், கணிணி ஆசிரியர் மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்தார். அதை வீடியோ எடுத்து மேலும் சில மாணவிகளுக்கு காட்டியும் பாலியல் வல்லுறவு கொண்டார். இந்த விவகாரம் சமூக இணையத்தளத்தில் வெளியாகி பெரும் பிரச்னை ஏற்பட்டது. தற்போது உத்தரப்பிரதேச ஆசிரியரை தாக்கும் வீடியோவும் சமூக வலைதளத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Best Mobiles in India

English summary
Teacher In UP s Hathras Suspended For Peeping While Girls Changed Uniform : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X