தாவர கழிவில் பிளாஸ்டிக் பை: உதவிய நவீன தொழில்நுட்பம்.!

இன்றை இந்தியாவில் எங்கு பார்த்தாலும் பிளாஸ்டிக் கேரி பேக் கழிவுகள் மலை போல் குவிந்து கிடக்கிறது. இதனால் மழைநீர் பூமிக்குள் இறங்குவது தடைபடுகிறது.

|

இன்றை இந்தியாவில் எங்கு பார்த்தாலும் பிளாஸ்டிக் கேரி பேக் கழிவுகள் மலை போல் குவிந்து கிடக்கிறது. இதனால் மழைநீர் பூமிக்குள் இறங்குவது தடைபடுகிறது. பிளாஸ்டிக் குப்பை கழிவுகள் காற்றில் பறந்து சென்று ஆறு, குளம், குட்டை உள்ளிட்ட நீர் வழித்தடங்களிலும் அடைப்பு ஏற்படுத்துகிறது.

மேலும் விலங்குகள் நடமாடும் இடங்களிலும் மக்கள் வீசி சென்று விடுகின்றனர். அப்போது ஆங்காங்கே மேய்ச்சலில் ஈடுபடும் வன விலங்குகளும், வீட்டு விலங்களும் அவைகளை தின்று பரிதாபமாக உயிரிழிக்கறது.

  பிளாஸ்டிக் கழிவால் அச்சுறுத்தல்:

பிளாஸ்டிக் கழிவால் அச்சுறுத்தல்:

பிளாஸ்டிக் கழிவுகள் குறித்து உலக நாடுகளும் அஞ்சி வந்தனர். பூமியில் மழை நீரையும் இறங்க விடாமல் தடுத்ததோடு உப்பு நீரையும் பூமிக்குள் ஊடுவ செய்துள்ளது. மேலும், சாலைகளிலும், கழிவு நீர் ஓடைகளிலும் பிளாஸ்டிக் கழிவுகளால் அடைத்தால் மழை, கழிவு நீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் பல்வேறு நாடுகளும் பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து திட்டமிட்டன.

 கோவையை சேர்ந்த பட்டதாரி:

கோவையை சேர்ந்த பட்டதாரி:

இந்நிலையில் அமெரிக்காவில் கோவையை சேர்ந்த சிபி படித்த போது, காய்கறி கழிவுகளில் இருந்து பிளாஸ்டிக் தயாரிக்கும் தொழில் நுட்பத்தை கண்டு பிடித்தார். மேலும் அங்கே வேலையும் கிடைத்த போது, இந்தியாவில் தொழில் துவங்கும் முனைப்பில் வந்தார். இவரது கண்டு பிடிப்பு கண்டு உலக நாடுகளும் வாழ்த்து தெரிவித்தன.

 தொழில் நுட்பம்:

தொழில் நுட்பம்:

பிளாஸ்டிக் கேரி பேக்குகளுக்கு மாற்றாக நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி தாவர கழிவுகளில் இருந்து பிளாஸ்டிக் பையை தயாரிக்கும் தொழில் நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வாறு நவீன தொழில் நுட்பத்தில் கண்டு பிடிக்கப்படும் பை சுடு தண்ணீரை கொண்டு கரைத்தால் அழிந்து விடும். இதனால் சுற்றுசூழலுக்கு எந்த பாதிப்பும் கிடையாது.

  கடைகளில் விற்பனை:

கடைகளில் விற்பனை:

தமிழகத்தில் அடுத்தாண்டு முதல் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்த தடையும் விதிக்கப்பட்டுள்ளதால், தற்போது நவீன தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட காய்கறி கழிவு பைகள் விற்பனைக்கு வரத்து துவங்கி விட்டன. இந்த நவீன தொழில் நுட்ப கண்டு பிடிப்பு மூலம் சுற்றுச்சூழலுக்கும் வன விலங்களுக்கும் மனிதர்களுக்கும் பெரும் பயன் உள்ளதாக அமைந்துள்ளது.

Best Mobiles in India

English summary
Tackling the scourge of plastic with bags made of cassava starch: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X