Home
Social media

திருப்பதி பெருமாளின் 3 தங்க கிரீடம் அபேஸ்-திருடர் அர்ச்சகரா அதிகாரியா.!

ஆந்திராவில் உள்ள திருப்பதி தேவஸ்தானத்திற்கு ஒன்றிய மிகப் பெரிய கோவில்களில் ஒன்றான ஸ்ரீ கோவிந்தராஜாஸ்வாமி கோவிலில் இருந்து சனிக்கிழமையன்று விலை உயர்ந்த மூன்று தங்க கிரீடங்கள் திருடப்பட்டுள்ளது.

திருப்பதி: ஆந்திராவில் உள்ள திருப்பதி தேவஸ்தானத்திற்கு ஒன்றிய மிகப் பெரிய கோவில்களில் ஒன்றான ஸ்ரீ கோவிந்தராஜாஸ்வாமி கோவிலில் இருந்து சனிக்கிழமையன்று விலை உயர்ந்த மூன்று தங்க கிரீடங்கள் திருடப்பட்டுள்ள சம்பவம் அனைவர்க்கும் அதிர்ச்சி அளித்துள்ளது.

கோவிலின் ஊழியர்கள் அனைவரிடமும் விசாரணை

கோவிலின் ஊழியர்கள் அனைவரிடமும் விசாரணை

கோவில் கண்காணிப்பாளர் ஸ்ரீ கயானா பிரகாஷ் தொடுத்துள்ள புகாரின் படி, சுவாமி கிரீடங்கள் மாலை பிரசாதம் வழங்கும் நேரத்தில் திருடப்பட்டிருக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கோவில் வளாகத்திற்குள் இருந்த சுவாமி கிரீடங்கள் திருடப்பட்டுள்ளதால் கோவில் நிர்வாகி மற்றும் கோவிலின் ஊழியர்கள் அனைவரிடமும் காவல்துறை விசாரணையைத் துவங்கியுள்ளது.

 மாலை 5 மணிக்கு திருட்டு

மாலை 5 மணிக்கு திருட்டு

பிரசாதம் வழங்க மாலை 5 மணி முதல் 5:45 மணி வரை கோயில் மூடப்பட்டுள்ளது, பின்பு கோயில் பூஜைக்காகத் திறந்தபோது ஹரிகிருஷ்ண தேக்ஷித்துலால் பூசாரி பொறுப்பேற்றபோது, கிரீடங்கள் காணாமல் போனதை அவர் கவனித்துள்ளார். பின்னர் அவர் உடனடியாக திருப்பதி தேவஸ்தானம் மற்றும் கோவில் நிர்வாகியிடம் புகார் அளித்துள்ளார்.

 ஒரே நேரத்தில் காணாமல் போன கிரீடங்கள்

ஒரே நேரத்தில் காணாமல் போன கிரீடங்கள்

மலையப்பா, ஸ்ரீதேவி மற்றும் பூதேவி ஆகிய துணை கோவிலின் சுவாமி கிரீடங்கள் மொத்தமாக 1,351 கிராம் எடை உடையது. மலையப்பா சுவாமி கிரீடம் 528 கிராம் எடையும், ஸ்ரீதேவி சுவாமி கிரீடம் 408 கிராம் எடையும் மற்றும் பூதேவி சுவாமி கிரீடம் 415 கிராம் எடையும் கொண்டுள்ளதென்பது குறிப்பிடத்தக்கது. இந்த மூன்று சுவாமி கிரீடங்களும் ஒரே நேரத்தில் காணாமல் போய் உள்ளது அனைவர்க்கும் அதிர்ச்சி அளித்துள்ளது.

சிசிடிவி கேமரா வீடியோ

சிசிடிவி கேமரா வீடியோ

காவல்துறையிடம் வழங்கப்படப் புகாரின் பெயரில் தற்பொழுது முதற்கட்ட சோதனையாக கோவிலின் அனைத்து சிசிடிவி கேமராகளின் வீடியோ பதிவுகளும் சோதனை செய்யப்பட்டு வருகின்றது. திருப்பதி தேவஸ்தானத்திற்கு ஒன்றிய கோவிலில் ஒரே நாளில் மூன்று கிரீடங்கள் காணாமல் போன சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகிவருகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Swami crowns theft in tirupati Police started investigating CCTV videos : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X