பாயசத்தில் சாம்பாரைக் கலந்த சுந்தர் பிச்சை ஏன் தெரியுமா? சுந்தர் பிச்சை பற்றிய வினோதமான உண்மைகள்!
கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கும் சுந்தர் பிச்சை பற்றிப் பல உண்மைகள் மற்றும் தகவல்கள் வலைத்தளங்களில் பரவி வருகிறது. இதில் குறிப்பாக இவர் ஒரு தமிழர் என்பது அனைத்து ஊடகங்களிலும் ஒரு முறையாவது கூறப்பட்டிருக்கும்.

உலகறிந்த தமிழன் சுந்தர் பிச்சை
உலகறிந்த இந்த தமிழனைப் பற்றி சுவாரசியமான விஷயங்கள் பல இதுவரை வெளிவந்துள்ளது. இருப்பினும் பிளா வினோதமான உண்மைகளை நீங்கள் இதுவரை கேட்டிருக்க வாய்ப்பில்லை.

சுந்தர் பிச்சையின் இயல்பு வாழ்க்கை எப்படியானது தெரியுமா?
கூகுள் என்ற மிகப் பெரிய நிறுவனத்தை தனது தலைமை கட்டுப்பாட்டில் வைத்துள்ள சுந்தர் பிச்சை செய்த பல்வேறு புதுமை முயற்சிகளை தான் நாம் இப்பொழுது பயன்படுத்தி வருகிறோம். பயனர்களுக்குச் சிறந்த பயன்பாட்டை வழங்குவதற்கு, பல்வேறு புதுமைகளைப் புகுத்துவதில் தொடர்ந்து ஆர்வம் காட்டி வரும் இவரின் இயல்பு வாழ்க்கை எப்படியானது என்று உங்களுக்குத் தெரியுமா?

நான் 'டே பெர்சன்(Day Person)' கிடையாது
சுந்தர் பிச்சாயின் வாழ்க்கை முறையை ஒரே வார்த்தையில் விவரிக்க வென்றும் என்றால், அதற்கு இந்த ஒரு வார்த்தை தான் சரியானது. சுந்தர் பிச்சை 'டே பெர்சன்(Day Person)' கிடையாது. டே பெர்சன் என்பதற்கான பொருள், இந்த வகை மனிதர்களின் பழக்கவழக்கங்கள் பகல் நேரத்தில் சுறுசுறுப்பாகவும் இரவில் மந்தமாகவும் இருப்பார்கள். ஆனால் சுந்தர் பிச்சை அப்படியான நபர் இல்லை என்பது தான் உண்மை.

டீ மேல் அதீத காதல்
பகல் நேரத்தில் இவர் கொஞ்சம் மந்தமாகத் தான் இருப்பார் என்று அவரே கூறியுள்ளார். காலை 6:30 அல்லது 7:00 மணிக்குள் தினமும் கண்விழித்துவிடுவாராம், ஆனாலும் அவரின் படுக்கையைவிட்டு சாமானியமாக இறங்குவதில்லை என்றும், டீ மேல் அதீத காதல் கொண்டவர் என்றும், 2016ம் ஆண்டில் ஒரு தொலைக்காட்சி பேட்டியில் அவர் கூறியுள்ளார். குறிப்பாக நான் டே பெர்சன் டைப் இல்லை என்று தெளிவாகக் கூறியுள்ளார்.

சுந்தர் பிச்சை ஒரே ஒரு மேட்டரில் வீக்
உலக மக்கள் பலரும் பார்த்து வியந்து போகும் சுந்தர் பிச்சை, பல முக்கியமான விஷயங்களுக்கு முக்கிய எடுத்துகாட்டக இருக்கிறார். ஆனால் இவரை இந்த விஷயத்தில் மட்டும் எடுத்துக்காட்டாக எடுத்துக்கொள்ளாதீர்கள் என்று கூறும்படி சுந்தர் பிச்சை ஒரு மேட்டரில் வீக், அது என்னவென்று கேட்குறீங்களா?

அந்த வீக்-கான மேட்டர் இதுதான்
சுந்தர் பிச்சை உடற்பயிற்சி செய்ய விரும்புவதில்லையாம் அதிலும் காலை நேரங்களில் அவர் ஜிம் வாசல் மிதிப்பதேயில்லை, மாலை நேரத்தில் எப்பொழுதாவது அவருக்கா தோன்றினால் மட்டுமே ஜிம் பக்கம் போகிறாராம். அந்த வீக்-கான மேட்டர் இதுதான்.

நடக்க பிடிக்கும்
உடற்பயிற்சி தான் அவர் செய்வதில்லை, ஆனால் இதற்குப் பதிலாக இவர் எப்பொழுதும் நடந்து கொண்டே இருக்கும் நடை பழக்கத்தை தன்னுடன் வைத்துள்ளார். அவ்வளவு பெரிய அலுவலகத்தில் எங்குச் சென்றாலும், எந்த பிரிவிற்குச் சென்றாலும் இவர் நடந்து தான் செல்கிறாராம். அருகில் உள்ள இடங்களுக்கு செல்ல வாகனங்களை பயன்படுத்துவதில்லை.

தலைகீழாகத் தான் யோசிப்பேன்
இவர் செய்யும் இன்னொரு வினோதமான செயல் என்னவென்றால், பல மீட்டிங்கில் இவருடைய சிந்தனைகள் பெரும்பாலும் மற்றவர்கள் போல் இல்லாமல் தலைகீழாகத் தான் இருக்கிறது. சிந்தனையாளர்கள் தங்களின் சிந்தனைகளை ஆரம்பம் முதல் முடிவு நோக்கி நகர்த்தினாள், சுந்தர் பிச்சை மட்டும் முடிவிலிருந்து தொடங்கி ஆரம்பம் நோக்கி நகர்கிறார். இது அவருக்குச் சிந்திக்க உதவுகிறது என்று கூறியுள்ளார்.

20 முதல் 30 ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தும் சுந்தர பிச்சை
சுந்தர் பிச்சை தனது வீட்டில் சுமார் 20 முதல் 30 ஸ்மார்ட்போன்களை பயன்படுத்திவருகிறார். இவை அனைத்தும் பல்வேறு தொழில்நுட்ப சோதனைகளுக்காக இவர் சோதனை செய்துவரும் ஸ்மார்ட்போன்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் முதல் முதலில் 2006ம் ஆண்டு மொபைல் போன் வாங்கியுள்ளார். இவரின் முதல் மொபைல் போன் மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோரோலா ஸ்டார்டாக் (Motorola Startac)என்பது குறிப்பிடத்தக்கது.

பாயசத்தில் சாம்பாரா? இது ரொம்பவே வினோதம் பா...
சொத்தைப் பல் இல்லாத சுந்தர் பிச்சை, இதற்குக் காரணம் இவருக்கு இனிப்பு வகை உணவுகள் மேல் அவ்வளவு ஆர்வம் கிடையாது. இனிப்பு வகை உணவுகள் அவ்வளவாக பிடிக்காது. குறிப்பாக இவர் தனது சிறு வயதில் செய்த காரியத்தை, இவரின் பெற்றோர் அடிக்கடி இவரிடம் சொல்லி கேலி செய்வதுண்டாம். பாயசத்தில் சாம்பார் அல்லது காரமான குளம்பு வகைகளைக் கலந்து தான் சாப்பிடுவாராம். பாயசத்தில் சாம்பாரா? இது ரொம்பவே வினோதம் பா...

சுந்தர் பிச்சைக்கு மனைவி அஞ்சலி கூறிய அறிவுரை
பெரிய தொழில் வல்லுநர்களைப் போலவே, சுந்தர் பிச்சைக்கும் பல முன்னணி நிறுவனங்களிலிருந்து பல தொழில் சார்த்த வாய்ப்புகளும் சலுகைகளும் கிடைத்தது. இருப்பினும் அவரை கூகுள் நிறுவனத்தை விட்டு வெளியேற வேண்டாம் என்று சுந்தர் பிச்சையின் மனைவி அஞ்சலி தான் அறிவுரைத்துள்ளார், இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு காவ்யா மற்றும் கிரண் என்று இரண்டு குழந்தைகள் உள்ளனர்.


Click it and Unblock the Notifications








