சிங்கத்தை விரட்டி சண்டையிட்ட தெருநாய்.. இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ..

|

இந்திய வன சேவையைச் சேர்ந்த பர்வீன் கஸ்வான் என்பவர், காட்டில் ஒரு தெரு நாய் சிங்கத்துடன் சண்டையிடும் வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். எது சிங்கத்துடன் தெரு நாய் சண்டையா? என்று சந்தேகத்துடன் நீங்கள் மீண்டும் அந்த வரியை உற்றுப்பார்த்துப் படித்தாலும் உண்மை என்னவோ அது தான். நீங்கள் சரியாகத் தான் படித்துள்ளீர்கள்.

இது எப்படி சாத்தியம்?

இது எப்படி சாத்தியம்?

உண்மையில் இது எப்படி சாத்தியம் என்று நீங்கள் யோசிக்கலாம், தெரு நாய்க்குக் காட்டில் என்ன வேலை என்று சிலர் கேள்வி எழுப்பலாம், அதே கேள்வி தான் எங்களுக்கும் எழுந்தது. சிங்கங்கள் இருக்கும் இடத்திற்குத் தெரு நாய் எப்படிச் சென்றது என்று சரியாகத் தெரியவில்லை.

சிங்கத்துடன் சரிக்கு சமமாக சண்டையிட்ட தெரு நாய்

சிங்கத்துடன் சரிக்கு சமமாக சண்டையிட்ட தெரு நாய்

ஆனால், சிங்கத்துடன் சரிக்கு சமமாக எதிர்த்து நின்று தெரு நாய் சண்டையிட்டு, சிங்கத்தைக் கதறவிட்டுப் பின்வாங்க வைத்துள்ள காட்சி இணையத்தில் இப்போது வைரல் ஆகியுள்ளது.

பர்வீன் கஸ்வான் என்ற இந்திய வன சேவை அதிகாரி தனது டிவிட்டர் பக்கத்தில் நம்பமுடியாத ஒரு இரண்டு நிமிட வீடியோ கிளிப்பை பதிவிட்டுப் பகிர்ந்துள்ளார்.

கடைசி தேதி பிப்ரவரி 8: 'இதை' செய்யலான உங்கள் அக்கவுண்ட்க்கு நாங்க பொறுப்பில்லை: வாட்ஸ்அப் அதிரடி.!

ஆக்ரோஷமான குரலுடன் அடுத்த ரவுண்ட் சண்டைக்கு ரெடியான நாய்

ஆக்ரோஷமான குரலுடன் அடுத்த ரவுண்ட் சண்டைக்கு ரெடியான நாய்

இந்த வீடியோவில் ஒரு பெண் சிங்கம் முதலில் ஒரு தெரு நாயை விரட்டி வருவது பதிவாகியுள்ளது. வனவிலங்கைப் பார்வையிட வந்த சுற்றுலாப் பயணிகள் சஃபாரி ஜீப்பில் இருந்தபடி இதை நேரடியாக பார்த்து, கேமராவில் படம்பிடிப்பதும் பதிவாகியுள்ளது.

சிங்கம் விரட்டி வந்து கீழே தடுமாறி விழுந்த நாய், எழுந்து ஆக்ரோஷமான குரலுடன் குறைத்துக்கொண்டே அடுத்த ரவுண்ட் சண்டைக்குத் தயாராகிறது.

அலறி கத்தி பின்வாங்கிய சிங்கம்

குறைத்த நாயை நோக்கி சிங்கம் வந்ததும், தெரு நாய் ஆக்ரோஷமாக முன்னேறி சிங்கத்தைத் தாக்கச் செல்கிறது. சிங்கத்திடம் அடி வாங்கியும், தெரு நாய் மனம் தளராமல் மீண்டும் சிங்கத்தைத் தாக்கச் செல்கிறது. இம்முறை, சிங்கத்தை நாய் கிட்டத்தட்ட கடிக்கவே சென்றுவிட்டது. இப்போது சிங்கமே அரண்டு அலறி கத்தி சத்தமிட்டுப் பின்வாங்கிவிடுகிறது.

சும்மா இருந்த சங்க ஊதி கெடுத்தான் 'வாட்ஸ்அப்'.. கடுப்பான பயனர்கள் கொடுத்த பதிலடி.. Signal-ஐ மொய்க்கும் உலகம்..

''உருவம் பெரிதில்லை, நம்பிக்கை தான் பலம்''

''உருவம் பெரிதில்லை, நம்பிக்கை தான் பலம்''

சிங்கத்தைப் பின்வாங்க வைத்து ஓடவிட்ட தெரு நாயின் தைரியத்தைப் பாராட்டி இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ளது. 'உருவம் பெரிதில்லை, நம்பிக்கை தான் பலம்' என்ற கருத்துடன் பதிவிடப்பட்ட இந்த வீடியோவை ஒரு மணி நேரத்திற்குள் சுமார் 20,000 க்கும் மேற்பட்ட பயனர்கள் லைக் செய்து ஷேர் செய்துள்ளனர். நெட்டிசன்ஸ்களும் இந்த வீடியோவை பார்த்து அவர்களின் கருத்தைப் பதிவு செய்து வருகின்றனர்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Stray dog fights fearlessly with a lioness video went viral on the internet : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X