குண்டுவெடிப்பு: சிம்கார்டு, ரோடுமேப்: 9 தீவிரவாதிகள் படம் வைரல் வீடியோ!

|

இலங்கையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில், 359 பேர் பலியாகியுள்ளனர். மேலும், 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த குண்வெடிப்புக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பு ஏற்றுள்ளது.

அந்நாட்டை சேர்ந்த இஸ்லாமியை அமைப்பை சேர்ந்த தேசிய தவ்ஹூத் ஜமாத் மீது தொடர்பு இருப்பதாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குண்டுவெடிப்பு: சிம்கார்டு,ரோடுமேப்:9 தீவிரவாதிகள் படம் வைரல்வீடியோ.!

மேலும், இந்த குண்டு வெடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட 4 சிம் கார்டுகள், ரோடு மேப், 200 டெட்டனேட்டர்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

3 பெண்கள் உட்பட 9 தீவிரவாதிகளின் புகைப்படமும் இணையதளங்களிலும் வெளியாகியுள்ளது.

 359 பேர் பலி:

359 பேர் பலி:

ஈஸ்டர் கொண்டாட்டத்தின் போது தேவாலயம், நட்சத்திர விடுதிகள் என 9 இடங்களில் தொடர் வெடிகுண்டு தாக்கல் நடத்தப்பட்டது. இதில் 359 பேர் பலியாகினர். இவர்களில் 36 பேர் வெளிநாட்டினர். 14 வெளிநாட்டவர்களை பற்றிய விவரம் தெரியவரவில்லை.

செல்போன்கள் பயன்படுத்தல்:

செல்போன்கள் பயன்படுத்தல்:

இந்த தாக்குதலுக்கு செல்போன் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், இலங்கை நாடாளுமன்றம் அருகே 4 சிம்கார்டுகள், ரோடு மேப்பும் கிடைத்துள்ளது.

டெட்டனேட்டர்கள் பறிமுதல்:

டெட்டனேட்டர்கள் பறிமுதல்:

இலங்கை நுவரெலியா மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் 200 டெட்டனேட்டர்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே கொழும்பு நீதிமன்றம் பின்புறத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேனில், வெடி குண்டு வெடித்தது.

இதில் எந்த உயிரிழப்பும், பொருள் சேதமும் ஏற்படவில்லை.

பல்வேறு இடங்களில் வெடி குண்டுகள்:

பல்வேறு இடங்களில் வெடி குண்டுகள்:

இலங்கையில் பல்வேறு இடங்களில் வெடிகுண்டுகள் இருப்பதாக கூறப்படுகின்றது. மேலும் மெட்டல் டிடெக்டர் கொண்டு சிறிய வெடிக்குண்டுகளையும் தேடும் பணி நடக்கின்றது. இதில் மனித வெடி குண்டு தாக்குதல்களும் நடந்துள்ளது.

21 கையெறி குண்டுகள் பறிமுதல்:

21 கையெறி குண்டுகள் பறிமுதல்:

இதனியே கொழும்பு கடற்கரை முகத்துவாரம் அருகே உள்நாட்டு தயாரிப்பில் 21 கையெறி குண்டுகள் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த குண்டு வெடிப்பு சம்பவங்கள் கடற்கரையை ஒட்டியுள்ள 8 இடங்களில் நடந்துள்ளது. மேலும் தற்கொலை படை தாக்குதல் நடத்த இந்த இடத்திற்கு கப்பல் மூலம் வந்துள்ளனர் என்று கணித்துள்ளனர்.

72 பேர் மொத்தம் கைது:

72 பேர் மொத்தம் கைது:

இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு சமந்தமாக 72 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்படுகின்றது. இங்கிலாந்து ஸ்காட்லாந்த் யார்டு, எப்பிஐ உள்ளிட்ட 6 நாடுகளை சேர்ந்த அமைப்புகளும் விசாரணையை துவங்கியுள்ளது.

புர்காவுக்கும் தடை:

புர்காவுக்கும் தடை:

முகமூடி துணி மற்றும் இஸ்லாமிய பெண்கள் அணியும் புர்காவையும் பயன்படுத்தி இதற்கு முன்பும் இதுபோன்ற தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால், புர்கா உள்ளிட்ட ஆடைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கையும் எழுந்துள்ளது.

இந்த தாக்குதலுக்கு தொடர்புடைய தீவிரவாதிகள் என 3 பெண்கள் உட்பட 9 பேரின் புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளது. இவர்கள் மீதும் பெரும் சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

நன்றி: வீடியோ பிரஸ் டிவி

6300 ராணுவத்தினர் குவிப்பு:

இதனிடையே இலங்கையில் 6300 ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். விமானப்படை, தரைப்படை, கப்பல் படை முழுமையாக ராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது. மேலும், இலங்கையில் உள்ள அனைத்து தேவாலயங்களும் மூடப்பட்டுள்ளது.

ராணுவத்தின் அறிவிப்புக்கு பிறகே தேவாலாயங்கள் திறக்கப்படும் என்று தெரிகின்றது.

இதனிடையே மோட்டர் சைக்களில் இருந்த வெடி குண்டையும் செயலிக்க செய்யப்பட்டுள்ளது. இதை அனைவரும் செல்போன்களில் வீடியோவாக பதிவு செய்து கொண்டனர்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
srilanka bomb blast sim card roadmap recovered terrorists photos out : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X