Home
Social media

இலங்கை குண்டு வெடிப்பு 290 பேர் பலி- 6 தீவிரவாதிகளின் பெயர் சமூக இணையதளத்தில் வெளியீடு.!

இலங்கை நடந்த குண்டு வெடிப்பில், இதுவரை சுமார் 260 பேர் பலியாகியுள்ளனர். மேலும், 500 பேர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக 24 கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 6 தீவிரவாதிகளின் பெயர்களும் வெ

இலங்கை நடந்த குண்டு வெடிப்பில், இதுவரை சுமார் 260 பேர் பலியாகியுள்ளனர். மேலும், 500 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக 24 கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 6 தீவிரவாதிகளின் பெயர்களும் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கை குண்டு வெடிப்பு 290பேர் பலி- 6தீவிரவாதிகளின் பெயர் வெளியீடு.!

இந்த சம்பவத்துக்கு அடிப்படை மதவாத அமைப்பும் காரணம் என்று தெரியவந்துள்ளது. ஈஸ்டர் திருநாள் பண்டிகை திருநாள் இலங்கையை மட்டும் அல்லாமல் உலகையும் கதிகலங்க வைத்துள்ளது.

ஈஸ்டர் திருநாளில் சோகம்:

ஈஸ்டர் திருநாளில் சோகம்:

இலங்கையில் நேற்று தேவாலயங்கள் உட்பட 8 இடங்களில் அடுத்தடுத்து நடந்த கொடூர குண்டுவெடிப்புகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 290 ஆக உயர்ந்துள்ளது. 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். குண்டுவெடிப்பு தொடர்பாக 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நட்சத்திர ஓட்டல்களில் குண்டு வெடிப்பு:

நட்சத்திர ஓட்டல்களில் குண்டு வெடிப்பு:

இந்த குண்டுவெடிப்பு நடந்த சற்று நேரத்தில் கொழும்பு நகரில் உள்ள முக்கிய நட்சத்திர ஓட்டல்களை குறி வைத்து குண்டுவெடிப்புகள் நடந்தன. இதனைத் தொடர்ந்து நீர்கொழும்புவில் பகுதியில் உள்ள புனித செபாஸ்டியன் தேவாலயத்திலும் குண்டுவெடித்தது. பின்னர் தமிழர்கள் அதிகம் வசிக்கும் மட்டக்களப்பு நகரில் உள்ள சியான் தேவாலயத்திலும் பயங்கர தாக்குதல் நடந்தது.

உலக தலைவர்கள் கண்டனம்:

உலக தலைவர்கள் கண்டனம்:

இந்தியா பிரதமர் மோடி, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், அமெரிக்க அதிபர் டிரம்ப், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் ஆழ்ந்த இரங்களை பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக செல்போன், வலைதளம் உள்ளிட்டவைகளையும் அடிப்படையாக கொண்டு விசாரணையும் முடுக்கி விடப்பட்டுள்ளது.

அறிக்கை வெளியானது :

அறிக்கை வெளியானது :

கொழும்பு, கட்டுவாப்பிட்டிய மற்றும் மட்டக்களப்பு பிரதேசத்தில் நடந்த குண்டு வெடிப்பு தாக்குதல் தொடர்பாக ஏற்கனவே அரசு புலனாய்வு பிரிவுகளுக்கு வழங்கப்பட்ட அறிக்கை குறித்து முழுமையான தகவல்கள் வெளியாகியுள்ளது.

 மதவாத அமைப்பு மீது குற்றச்சாட்டு :

மதவாத அமைப்பு மீது குற்றச்சாட்டு :

தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பு தலைவர் மொஹமட் சஹானினால் தற்கொலை கொண்டு தாக்குதல் மேற்கொள்ளவதற்கு திட்டமிட்டப்பட்டதாக வெளிநாட்டு புலனாய்வு பிரிவினால், இலங்கை புலனாய்வு பிரிவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தகவல்கள் அரசு புலனாய்வு பிரிவால் முழுமையாக முன் வைக்கப்பட்டுள்ளது.

6பேர் பட்டியில் வெளியீடு :

6பேர் பட்டியில் வெளியீடு :

இந்த தாக்குதலுக்கு 6 பேர் சந்தேக நபர்கள் தொடர்பிலும் அவர்களின் மேற்கொள்ள ஆயத்ததாக இருந்த தாக்குதல் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.


அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டுள்ள பெயர்கள், சஹாரன் ஹாஷீம், ஜால் அல் குய்தால், ரில்வன், சஜிட் மவ்லவி, ஷாஹிட், மில்ஹான் இவர்களின் ஆதரவாளர்கள் இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச ஊடங்கள் சுட்டி காட்டு வருகின்றன.

மதவாத அமைப்புக்கு முற்றிலும் தடை:

மதவாத அமைப்புக்கு முற்றிலும் தடை:

கொழும்பு ஷங்கிரிலா ஹோட்டல் வளாகத்தில் நடந்த தற்கொலை குண்டு தாக்குதல் எனவும் ,இதை சஹாரன் ஹாஷிம் என்பனால் இது நடத்தப்பட்டுள்ளது என்று சர்வதேச ஊடங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

நாட்டில் மதவாத அமைப்புகளை முற்றிலும் தடை செய்யப்போவதாக பாதுகாப்பு துறை அமைச்சர் ருவன் விஜயவர்த்தன் தெரிவித்தார்.

நன்றி வீடியோ: ஐபிசி தமிழ்

வெளியான சிசிடிவி காட்சி:

மட்டக்களப்பு தேவாலயத்தின் மீது மனித வெடி குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அப்போது அருகே இருந்த சிசிடிவி காட்சியில் பதிவான தீவிரவாதியின் காணொளி காட்சிகள்.

Best Mobiles in India

English summary
290 people were killed in Sri Lanka bombing. 6 release of names of terrorists : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X