வைஃபை, ஹோம் தியேட்டர் வசதி கூட இருக்கு., வாலிபர் உருவாக்கிய ரகசிய குகை.! காரணம் என்ன தெரியுமா?
பெற்றோர்களுடன் சண்டையிடும் இளைஞர்கள் ஒரு சில நாட்கள் பேசாமல் இருப்பார்கள் அல்லது நண்பர்கள், உறவினர்கள் வீடுகளுக்கு சென்று சிறிது காலம் தங்கிவிடுவார்கள். ஆனால் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த இளைஞர் ஒருவர் பெற்றோர்களுடன் சண்டை போட்டுவிட்டு செய்த சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது என்றுதான் கூறவேண்டும்.

பொதுவாக குடும்பங்களில் நடைபெறும் சிறுசிறு சண்டைகள் சாதாரணமாண விஷயம் தான், ஆனால் இதற்கு அந்த இளைஞர் செய்த செயல் தான் அவரின் பெற்றோரையே வியக்க வைத்துள்ளது.

அதாவது ஸ்பெயின் நாட்டை சேர்ந்த Andres Canto என்ற 20 வயதான இளைஞர் தங்கள் வீட்டில் யாருக்கும் தெரியாமல் ஒருகுகையையே உருவாக்கியுள்ளார். சிறுவயதில் இருந்தே இவருக்கும் இவரின் பெற்றோருக்கும் அடிக்கடி சிறுசிறு சண்டைகள் ஏற்படும்என்று கூறப்படுகிறது.

சில வருடங்களுக்கு முன்பு ஒரு நாள் பெற்றோர்கள் ட்ராக் சூட் அணிந்து வீட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது என்று அவரிடம் கூறியுள்ளனர். அப்போது கடும் வாக்கு வாதம் ஏற்பட்டதாக கூறினார் Andres Canto.

எனவே பெற்றோருடன் சண்டை போடும் நேரங்களில் ஒளிந்து கொள்வதற்காக வீட்டிற்கு பின்னால் சுமார் 3 மீட்டர் ஆழத்தில்குகை ஒன்றை தோண்டியுள்ளார் Andres Canto. சரியாக 6 வருடங்களுக்கு முன்பு உருவாக்கிய என்னுடைய குகையில்தற்போது கழிவறை, வைஃபை, ஹோம் தியேட்டர் உள்ளிட்ட பல வசதிகள் இருப்பதாக கூறியுள்ளார் அந்த இளைஞர்.

குறிப்பாக இந்த இளைஞரின் செயல் அவரின் பெற்றோர்கள் மற்றும் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது என்று தான்கூறப்படுகிறது. பின்பு இவரின் குகை தொடர்பான புகைப்படங்கள் இணையதளத்தில் அதிக வைரலாகி உள்ளது.

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளத்தில் பதிவிடும் பதிவுகளில் எந்த ஒரு பதிவு திடீரென வைரல் ஆகும் என்று யாருக்கும் தெரியாது. எப்போது வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் நடக்கும் என்பதற்கு ஏற்றார் போல், சமூக வலைத்தளத்தில் பதிவிடும் பதிவுகளும் காரணம் இல்லாமல் சில நேரங்களில் வைரல் ஆகிவிடுகிறது. அதேபோல் இவரின் இந்த குகை தொடர்பான புகைப்படங்கள் தற்சமயம் இணையதளத்தில் வைரலாகி உள்ளது என்றுதான் கூறவேண்டும்.
News Soure: dailymail


Click it and Unblock the Notifications