பேஸ்புக்கில் 11 லட்சம் ரசிகர்களைப் பெற்ற காஜல் அகர்வால்

Posted By: Karthikeyan
பேஸ்புக்கில் 11 லட்சம் ரசிகர்களைப் பெற்ற காஜல் அகர்வால்

தென்னிந்திய சினிமாத் துறையில் தனக்கென்று ஒரு இடத்தைப் பிடிக்க நீண்ட நாள்களாக போரடிக் கொண்டிருந்த நடிகை காஜல் அகர்வாலுக்கு அவர் சமீபத்தில் விஜய்யுடன் ஜோடி போட்டு நடித்து தீவாளிக்கு வெளியான துப்பாக்கி படம் அவரை தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இடத்திற்கு அவரை அழைத்துச் சென்றிருக்கிறது.

ஆம், துப்பாக்கி படம் சூப்பர் ஹிட் ஆனதால் விரைவில் தமிழ் சினிமாவின் நம்பர் 1 கதாநாயகியாவும் ஆகலாம். ஏனெனில் துப்பாக்கி படம் தந்த புண்ணியத்தால் காஜலின் பேஸ்புக் பக்கத்தில் இதுவரை 11 லட்சம் ரசிகர்கள் இணைந்திருக்கின்றனர். இதன் மூலம் பேஸ்புக்கில் 11 லட்சம் ரசிகர்களைப் பெற்ற முதல் தென்னிந்திய நடிகை என்ற பெயரும் காஜலுக்குக் கிடைத்திருக்கிறது.

தனது 11 லட்சம் தீவரி பேஸ்புக் ரசிகர்களுக்கு தனது போட்டோக்கள், வீடியோக்கள் மற்றும் தான் நடிக்க இருக்கும் படங்களைப் பற்றியத் தகவல்கள் ஆகியவற்றை பேஸ்புக் மூலம் காஜல் பகிர்ந்து கொள்ளப் போகிறார்.

தனது ரசிகர்களோடு தொடர்பு கொள்வதற்கும் அவர்களோடு உரையாடுவதற்கும் பேஸ்புக் ஒரு சிறந்த தளமாக இருக்கிறது. மேலும் இந்த உலகத்தை மிகச் சிறிய கிராமமாக மாற்றி இருக்கிறது பேஸ்புக். அதோடு பொது வாழ்க்கையில் ஈடுபடுவோர் தங்களது எண்ணங்களை தனது ரசிகர்களோடு பகிரந்து கொள்வதற்கு பேஸ்புக் ஒரு சிறந்த தளமாக பேஸ்புக் இருக்கிறது என்று காஜல் தெரிவித்திருக்கிறார்.

அதோடு தான் நடித்த படங்கள் மற்றும் நடிப்பு, நடனம் ஆகியவற்றைப் பற்றி ஏராளமான விமர்சனங்களையும் ரசிகர்களிடமிருந்து பேஸ்புக் மூலம் தான் பெறுவதாகவும் அதை தாம் பெரிதும் விரும்புவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். மேலும் ரசிகர்கள் எழுதும் விமர்சனங்களுக்கு நேரம் கிடைத்தால் தாம் தனிப்பட்ட முறையில் பேஸ்புக்கில் பதில் அளிக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

நீங்களும் காஜல் அகர்வாலின் பேஸ்புக் பக்கத்தில் இணைய வேண்டுமா? கீழ்காணும் இணையதள முகவரிக்குச் செல்லவும். http://www.facebook.com/ImKajalAggarwal

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்