ஸ்கைப் கால்களுக்கு ஆப்பு நவம்பர் முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

Posted By:

இணையதளத்தை சேர்ந்த தொலைதொடர்பு நிறுவனமான ஸ்கைப் இந்தியாவில் லேன்ட்லைன் மற்றும் மொபைல் போன்களுக்கு கால் டெய்யும் வசதி நவம்பர் 10 ஆம் தேதி முதல் ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான காரனங்களை தெரிவிக்க மைக்ரோசாப்ட் நிறுவனம் மறுத்துவிட்டது.செம காமெடி படங்கள்

ஸ்கைப் கால்களுக்கு ஆப்பு நவம்பர் முதல் அமலுக்கு வருகிறது

இது குறித்து அறிவிப்பில் ஸ்கைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் ஸ்கைப் மூலம் இனி இந்தியாவில் யாருக்கும் கால் செய்ய முடியாது என்றும் வெளிநாடுகளுக்கு தொடர்ந்து அழைப்புகளை மேற்கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு அழைக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு மூலம் பாதிக்கப்படும் வாடிக்கையாளர்களுக்கு ஸ்கைப் நிறுவனம் சார்பில் அறிக்கை மூலம் வருத்தம் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்டோஸ் 10 டவுன்லோடு

ஸ்கைப் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் கைப்பேசியில் இருக்கும் இணையவசதியை கொண்டு அழைப்புகளை மேற்கொள்ள முடியும். ஸ்கைப் நிறுவனத்தின் இந்த திடீர் அறிவிப்பை தொடர்ந்து மற்றொரு இணைய நிறுவனமான வைபரும் இது போன்ற அறிவிப்பை வெளியிடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே வாட்ஸ் அப் நிறுவனமும் வாய்ஸ் கால் ஆப்ஷனை வழங்கும் என்று அறிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

English summary
Skype to Block calls from November 10. Here are some reasons why to block voice calls from November 10.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot