அமெரிக்கர்களை அன்பால் அடித்த சீக்கியர்கள்; "சிங் இஸ் கிங்" என்பதை நிரூபித்தனர்.!

வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் மீது, அவ்வப்போது நடக்கும் தாக்குதல்கள் பற்றி நாம் அறிந்திருக்க வாய்ப்புள்ளது.

|

வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் மீது, அவ்வப்போது நடக்கும் தாக்குதல்கள் பற்றி நாம் அறிந்திருக்க வாய்ப்புள்ளது. ஆனால் அமெரிக்காவில் வாழும் சீக்கியர்கள் மீதும், அவர்களின் பாரம்பரியமான டர்பன் (தலைப்பாகை) மீதும் ஒரு மோசமான பார்வை நிலவுகிறது என்பதை நம்மில் எத்தனை பேர் அறிவோம்.?

அமெரிக்கர்களை அன்பால் அடித்த சீக்கியர்கள்; சிங் இஸ் கிங்.!

இந்த பிரச்சனையை உலகிற்கு தெரியப்படுத்தும் நோக்கத்தின் கீழும், அமெரிக்கர்களின் மத்தியில் சீக்கியர்கள் மற்றும் அவர்களுக்கே உரிய டர்பன் மீதான ஒரு நேர்மறை எண்ணத்தை உண்டாக்க வேண்டும் என்கிற முயற்சியின் கீழும், ஒரு அன்பான மற்றும் அமைதியான புரட்சி வெடித்தது.

மிகவும் கௌரவமான சமூக ஊடக விருது.!

மிகவும் கௌரவமான சமூக ஊடக விருது.!

சீக்கியர்கள் மற்றும் டர்பன் மீதான விழிப்புணர்வை ஏற்படுத்தும் முனைப்பின் கீழ், "வி ஆர் சீக்ஸ்" (We are Sikhs) என்கிறவொரு சமூக ஊடக பிரச்சாரம் கிளம்பியது. மிகப்பெரிய வரவேற்ப்பை பெற்ற இந்த பிரச்சாரம் ஆனது, 'பன்முக கலாச்சார சமூக ஈடுபாடு' மற்றும் 'சமூக செயல்பாடு' பிரிவுகளின் கீழ் அமெரிக்காவின் மிகவும் கௌரவமான சமூக ஊடக விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு, அதை வென்றும் உள்ளது.

ஷார்ட்டி விருது.!

ஷார்ட்டி விருது.!

அதாவது, பேஸ்புக், யூட்யூப், டம்ளர், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட் மற்றும் பிற சமூக மீடியா தளங்களில் இடம்பெற்றுள்ள சிறந்த உள்ளடக்க படைப்பாளர்களையும், தயாரிப்பாளர்களையும் பாராட்டி, கௌரவிக்கும் "ஷார்ட்டி விருதை", நாங்கள் சீக்கியர்கள் என்கிற சமூக ஊடக பிரச்சாரம் வென்றுள்ளது.

நாடெங்கிலும் உள்ள அமெரிக்கர்களின் இதயத்திற்கு.!

நாடெங்கிலும் உள்ள அமெரிக்கர்களின் இதயத்திற்கு.!

சீக்கியர்களின் கலாச்சாரம், அவர்களுக்கான சமத்துவம், சுதந்திரம் மற்றும் சமூக சேவை ஆகியவற்றை, நாடெங்கிலும் உள்ள அமெரிக்கர்களின் இதயத்திற்கு, புரிந்துகொள்ள கூடிய வகையில் கொண்டு செல்வதே எங்களின் நோக்கம். உடன் சீக்கிய மதத்தைச் சுற்றியுள்ள புதைகுழிகளை அகற்றுவதற்காகவும், சீக்கிய அமெரிக்கர்களின் சீர்குலைவுகளை அகற்றுவதற்காகவும் கூட இந்த பிரச்சாரம் பயன்படும்" என ராஜ்வந்த் சிங், என்எஸ்சி-ன் (National Sikh Campaign) இணை நிறுவனர் தெரிவித்துள்ளார்.

Instagram Simple Tips and Tricks (TAMIL)
சிறந்த 2018 பிஆர்வீக் யூஎஸ் விருது.!

சிறந்த 2018 பிஆர்வீக் யூஎஸ் விருது.!

இதற்கு முன்னதாக, 2018 ஆம் ஆண்டில் 'We are Sikhs' என்கிற பிரச்சாரமானது. பப்ளிக் காஸ் (பொதுவான காரணம்) பிரிவின்கீழ் சிறந்த 2018 பிஆர்வீக் யூஎஸ் விருதை வாங்கியதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Sikh campaign finalist for social media awards in US. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X