காற்றில் மிதக்கும் கப்பல்- அதிர்ந்து போன சமூகவலைதள பயனர்கள்: உண்மை என்ன தெரியுமா?

|

பேஸ்புக்கில் வெளியிடப்பட்ட ஒரு படகின் புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அது ஒளியியல் மாயை காரணமாக ஒரு கப்பல் காற்றில் மதிப்பது போல் தோன்றுகிறது.

வைரலாகும் புகைப்படம்

வைரலாகும் புகைப்படம்

பேஸ்புக்கில் வெளியிடப்பட்ட ஒரு படகின் புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அது ஒளியியல் மாயை காரணமாக ஒரு கப்பல் காற்றில் மதிப்பது போல் தோன்றுகிறது. கப்பல் வானத்தில் மதிக்கிறதா? என கேள்விகளோடு சமூகவலைதளங்களில் இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

கொலின் மெக்கலம் பகிர்ந்த புகைப்படம்

கொலின் மெக்கலம் பகிர்ந்த புகைப்படம்

கொலின் மெக்கலம் பேஸ்புக்கில் இந்த படத்தை பகிர்ந்ததையடுத்து சமூகவலைதளங்களில் மிதக்கும் கப்பலை காண்பிக்கும் ஆப்டிக்கல் மாயை என வைரலானது. தனது நிஜ வாழ்க்கையில் ஆப்டிகல் மாயையைப் பார்த்தேன் என கொலி மெக்கலம் அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

சில அங்குலத்துக்கு மேல் மிதக்கும் கப்பல்

சில அங்குலத்துக்கு மேல் மிதக்கும் கப்பல்

இந்த புகைப்படத்தில் சிவப்பு நிற கப்பல் தூரத்தில் காற்றில் மிதப்பது போல் இருக்கிறது. நீல நிறக் கடலின் சில அங்குலத்துக்கு மேல் ஒரு கப்பல் மிதப்பது போல் காட்சியளிக்கிறது. பொதுவாகவே கடலில் நீரின் முடிவை பார்க்க முடியாது. நீரும் வானமும் இணைந்தபடி காட்சியளிக்கும். புகைப்படத்தை உற்று பார்த்தால் மேகங்களின் விளைவால் ஆப்டிகல் மாயை காரணமாக கப்பல் மதிப்பது போல் காட்சியளிக்கிறது.

வைரல் புகைப்படம்

சமூகவலைதள பயனர்கள் இந்த புகைப்படத்தை வெவ்வேறு கருத்துகளோடு பகிர்ந்து வருகின்றனர். இந்த படத்துக்கு ஏணைய லைக்குகள் குவிந்து வருவதோடு வைரலாகி வருகிறது. இங்கிலாந்து கரையில் கார்ன்வால் வட்டாரத்தில் டேவிட் மோரிஸ் என்பவர் நடந்து சென்றபோது இந்த புகைப்படத்தை எடுத்துள்ளார். சுற்றுச்சூழல் நிலைகளின் காரணமாக இதுபோன்ற தோற்ற மாயங்கள் ஏற்படும் என தெரிவிக்கப்படுகிறது.

கொலின் மெக்கலம் கருத்து

இதுகுறித்து டெய்லி மெயில் தளத்துடன் பேசிய கொலின் மெக்கலம், நான் முதலில் இந்த படகை பார்த்தப்போது இது உண்மையாகவே மிதக்கிறது என்று நினைத்தேன். பின் சற்று உற்றுநோக்கி ஆய்வு செய்தபோது இதில் உள்ள குறிப்பிடத்தக்க ஒளியியல் மாயை விஷயத்தை கவனித்தேன் என கூறினார்.

கரைக்கு நெருக்கமான மேகம்

கரைக்கு நெருக்கமாக மேகம் உருவான காரணத்தால் நிலத்தின் நீரின் நிறத்தை மாற்றியது எனவும் வானம் கடலை பிரதிபலித்தால் படகு மிதப்பது போல் இருக்கிறது என கொலின் கூறினார். வெப்பமான காற்றைவிட குளிர்காற்று அடர்த்தியானதால் ஒளி வளைந்து தூரத்தில் இருக்கும் பொருள் வேறு மாதிரியாக காட்சியளிக்கும் என கூறப்படுகிறது.

Pic Courtesy: Social Media

Most Read Articles
Best Mobiles in India

English summary
Ship Appears to Float through Sky: Optical Illusion image Posted in Social Media

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X