வைரல் வீடியோ: தமிழ்நாட்டில் சேலை கட்டிய அழகிய ரோபோட்! இது சாதாரண ரோபோட் இல்லை!

|

மாடர்ன் காலத்தில் தமிழர் கலாச்சாரம் இன்னும் அழியவில்லை என்பதற்கு எடுத்துக்காட்டாக, சமூக வலைத்தளங்களில் இப்பொழுது வைரல் ஆகிவரும் சேலை கட்டிய அழகிய ரோபோட்டை பார்த்தால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள். தமிழ்நாட்டில் சேலை கட்டிய இந்த ரோபோட் தான் இன்றைக்கு டாப் ட்ரெண்டிங்கில் உள்ளது. இந்த ரோபோட் பற்றிய கூடுதல் விபரத்தைப் பார்க்கலாம்.

சிங்கார சென்னையில் ரோபோ

கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில், மனித தொடர்பைக் குறைக்க பல்வேறு இடங்களில் பல ரோபோட்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சிங்கப்பூரில் மனித இடைவேளையைப் பின்பற்ற ரோபோ நாய் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல், கொரோனா தொற்றின் ஹாட் ஸ்பாட்டாக இருக்கும் நமது சிங்கார சென்னையில் மனித இடைவெளி மற்றும் பாதுகாப்பு எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்து, இங்கும் பல இடங்களில் பலவிதமான அதிநவீன சாதனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

புதிய வகை ரோபோட்

அந்த வரிசையில் தான் தற்பொழுது சென்னையில் இந்த புதிய வகை ரோபோட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சமூக ஊடக பயனர்கள் கடந்த சில மாதங்களில் பல தனிப்பட்ட இயந்திரங்களைப் பார்த்திருக்கிறார்கள். இருப்பினும், இந்த சேலை அணிந்த ரோபோ நீங்கள் முன்பு பார்த்த எதையும் போலல்லாமல் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த ரோபோட் கடைக்குள் அறிவாகவும் அழகாகவும் செயல்படுகிறது.

இறப்பதற்கு 10 நாட்களுக்கு முன்னர், ஸ்டீபன் ஹாக்கிங் இறுதியாக சமர்ப்பித்த இறப்பதற்கு 10 நாட்களுக்கு முன்னர், ஸ்டீபன் ஹாக்கிங் இறுதியாக சமர்ப்பித்த "மர்மம்" அவிழ்க்கப்பட்டது.!

அசால்ட்டாக நினைக்காதீர்கள்

முன்பு கடையின் வாசலில் வணக்கம் சொல்லி மக்களை வரவேற்கும் சில வரவேற்பு பொம்மைகளை நாம் நிச்சயம் பார்த்திருப்போம். அதேபோன்று தான் இந்த சேலை கட்டிய ரோபோட்டும் என்று அசால்ட்டாக நினைக்காதீர்கள், இது அதற்கும் மேலான பல விஷயங்களைச் செய்கிறது. சிவப்பு மற்றும் பச்சை நிற பட்டுடுத்திய இந்த ரோபோட், கடைக்குள் இருக்கும் வாடிக்கையாளர்களை நோக்கி சேனிடைசர் பாட்டிலுடன் ஒய்யாரமாய் சென்று அணுகுகிறது.

கடைக்கு வரும் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பிற்காக இந்த ரோபோட் சென்னையில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆட்டோமேட்டிக் மூவ்மெண்ட் கொண்ட இந்த ரோபோட் வாடிக்கையாளர் இருக்கும் இடத்தை அறிந்து தானாகவே அவர்களிடம் சென்று சேனிடைசரை விநியோகம் செய்கிறது. இந்த ரோபோட் வாடிக்கையாளர்களை அணுகும் ஒரு சிறிய வீடியோ கிளிப் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகிவருகிறது.

வைரல் வீடியோ

இந்த தனித்துவமான, சானிடிசர் வழங்கும் ரோபோவின் வீடியோ காட்சிகள் மைக்ரோ பிளாக்கிங் மேடையில் இந்திய வன சேவை அதிகாரி சுதா ராமன் மற்றும் தொழிலதிபர் ஹர்ஷ் கோயங்கா உள்ளிட்டோர் பகிர்ந்துள்ளனர்.

BSNL: தினமும் 3ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்பு கிடைக்கும் சிறந்த 4ஜி ப்ரீபெய்ட் திட்டங்கள்!BSNL: தினமும் 3ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்பு கிடைக்கும் சிறந்த 4ஜி ப்ரீபெய்ட் திட்டங்கள்!

நல்ல மார்க்கெட்டிங் ஐடியா

இந்த ரோபோட் ஒரே நேரத்தில் இரண்டு வேலையைச் செய்கிறது, கடைக்குள் வரும் வாடிக்கையாளர்களுக்கு சேனிடைசர் வழங்குவதுடன், கடையில் உள்ள சேலைக்கு மாடலாகவும் செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. உண்மையில் இது ஒரு நல்ல மார்க்கெட்டிங் ஐடியா.

Best Mobiles in India

English summary
Saree-Clad Robot Provides Sanitizer At Tamil Nadu Showroom Went Viral On Internet : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X