கிளுகிளுப்பில் ரஷ்ய அதிபர் புதின்: தனிமையில் தவிக்கும் டிரம்ப்.!
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப் கிறிஸ்துமஸ் விழாவை கூட கொண்டாடமல் அமெரிக்காவில் உள்ள வெள்ளை மாளிகையில் தனிமையில் தவிக்கின்றேன் என்று சொல்லி இருக்கின்றார். கல்யாணந்தா கட்டிக் கிட்டு ஓட
உலகில் இரண்டு விஷயங்கள் பரவலாக பேசப்படுகின்றது. ஒன்று ரஷ்ய அதிபர் தனது நீண்ட நாள் காதலியை கரம் பிடிக்க இருக்கின்றார். இதனால் அவர் கல்யாண குஷியில் கனவுகளோடு வலம் வருகின்றார்.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப் கிறிஸ்துமஸ் விழாவை கூட கொண்டாடமல் அமெரிக்காவில் உள்ள வெள்ளை மாளிகையில் தனிமையில் தவிக்கின்றேன் என்று சொல்லி இருக்கின்றார்.

கல்யாணந்தா கட்டிக் கிட்டு ஓடிப்போலமா என்று ரஷ்ய அதிபர் புடின் காதலியோடு குதுகலமாக இருக்கின்றார். நியூயார்க் நகரமும் நான்கு கண்ணாடி சுவர்களும் நானும் மெழுகுவர்த்தியும் தனிமை தனிமையே என்று வெள்ளை மாளிகையில் தவிக்கின்றார் டிரம்ப்.
தற்போது, அமெரிக்கா- ரஷ்யா இரண்டு நாடுகளும் பரம்பரை எதிரியாக இருந்தாலும், அதிபர்களின் வாழ்கையிலும் நேர் கோட்டில் விதியும் விளையாடுகின்றது என்பது தான் சிறப்பு.

ரஷ்யா-அமெரிக்கா எதிரி:
இரண்டு நாடுகளும் பரம்பரை எதிரி போல இருக்கின்றன. மேலும், அணு ஆயுதங்கள் தயாரிப்பு முதல் விண்வெளி ஆராய்ச்சி வரை பல்வேறு போட்டிகளையும் அமெரிக்காவும், ரஷ்யாவும் சந்தித்து வருகின்றனர்.

ஆதரவு தெரிவிப்பது:
அமெரிக்கா எதிர்க்கும் நாட்டுக்கு ரஷ்யா ஆதரவு தெரிவிப்பதும், ரஷ்யா எதிர்க்கும் நாட்டு அமெரிக்கா ஆதரவு தெரிவிப்பதும் என்று எதிரி நிலைபாட்டை கொண்டுள்ளது இரு நாடுகளும். பொருளாதார நிலையிலும் இரு நாடுகளும் வெவ்வேறு சிந்தனைகள் கொண்டுள்ளன.

டாம் அன்டு ஜெர்லி:
டாம் அன்டு ஜெர்லி கார்டூன் மூவி போல இரண்டு நாடுகளும் மோதிக் கொள்ளும். இந்தநிலையை காணும் போது நமக்கும் சிரிப்பு வரும். ரஷ்யாவும்- அமெரிக்காவும் இரு நாடுகளும் சலிக்காமல் முரண்பாடு சிந்தனைகளும் நிலவும்.
திருமணம் செய்கிறார்:
மீண்டும் தாம் திருமண பந்தத்தில் இணைய இருப்பதாக, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் சூசகமாக தெரிவித்திருக்கிறார். தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற வருடாந்திர செய்தியாளர்கள் கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர் சிறப்பானதொரு தருணத்தில், திருமணம் செய்தாக வேண்டும் என்று குறிப்பிட்டார்.

விவகாரத்து செய்தார்:
1983ஆம் ஆண்டு லுட்மிலா புடினா என்ற பெண்ணை மணந்த விளாடிமிர் புதின், சரியாக 30 ஆண்டுகளுக்கு பிறகு, 2013ஆம் ஆண்டு, அவரை விவகாரத்து செய்தார்.

காதலி:
ரஷ்யாவின் சார்பாக ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொண்ட ஜிம்னாஸ்டிக் வீராங்கனை அலீனா கபாயீவாவுடன் புதின் நெருக்கமாக இருப்பதாக ஊடகங்களில் தகவல் வெளியாகின. இதனை பல வருடங்களாக மறுத்து வந்த புதின், தற்பொழுது நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் விரைவில் திருமணம் செய்துகொள்ளப்போவதாக அறிவித்துள்ளார்.
2007 ல் விளையாட்டு துறையிலிருந்து ஓய்வுபெற்ற 35 வயதான அலீனா ஒலிம்பிக் போட்டியில் பல பதக்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தனிமையில் டிரம்ப்:
கிறிஸ்துமஸ் பண்டிகை, அதைக்கூட கொண்டாட செல்லாமல், அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் தங்கி உள்ளார். இதுக்குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "வெள்ளை மாளிகையில் நான் தனியாக இருக்கிறேன். அமெரிக்க ஷட்டவுனை முடிவுக்குக் கொண்டுவரவும், அவசரமாக தேவைப்படும் எல்லை பாதுகாப்புக்கு ஒரு ஒப்பந்தம் செய்யவும் உழைத்துக் கொண்டிருக்கிறேன். ஜனநாயக கட்சி எம்.பி.க்கள் திரும்பி வந்து அமெரிக்க - மெக்சிகோ எல்லையில் பாதுகாப்பு ஒப்பந்தத்துக்கு அனுமதி அளிக்க வேண்டும். அதற்காக காத்திருக்கிறேன்.
ஏழை போல உணர்வு:
ஆனால் ஜனநாயக கட்சி எம்.பி.க்கள் நாட்டை பற்றி கவலைப்படாமல் கிறிஸ்துமஸ் கொண்டாடி வருகின்றனர். அவர்கள் நாட்டைப் பற்றி பேசுகிறார்கள். வேடிக்கையாக இருக்கிறது. ஆனால், நான் வெள்ளை மாளிகையில் ஒரு ஏழை போல உணர்வுடன் தனியாக இருக்கிறேன்.

கிளுகிளுப்பில் புதின்:
கல்யாணம் தான கட்டி கிட்டு ஓடிப்போலாமா இல்ல ஓடிப்போயி கல்யாணம் தான கட்டிகிலாமா அதிபர் புதின் சாமி படத்தில் வரும் காட்சியை போல கொஞ்சி காதலியை கொஞ்சி மகிழ்கின்றார்.

தனிமையில் டிரம்ப்:
நியூயார்க் நகரமும், நான்கு கண்ணாடி சுவரும் நானும் மெழுவர்த்தியும் தனிமை தனி தனிமையே வெள்ளை மாளிகையில், அதிபர் டிரம்ப் தவிக்கின்றார்.


Click it and Unblock the Notifications