நெஞ்சைப் பதறவைக்கும் ரஷ்யா விமான விபத்தின் வீடியோ ஆதாரம்!
ரஷ்யாவில் உள்ள சைபீரியா பகுதில் உள்ள நிஸ்னியாங்கார்க் நகரில் அமைந்திருக்கும் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானம், இயந்திரக்கோளாறு காரணமாக விபத்துக்களாகியுள்ளது.
பயணிகளை காப்பாற்ற முயற்சித்த இரண்டு விமானிகளும் உயிரிழந்துள்ளனர்.

ரஷ்யா போலீசார் வெளியிட்ட வீடியோ பதிவு
ஓடுபாதையில் சென்று கொண்டிருநந்த விமானம் எப்படி விபத்துக்குள்ளானது என்ற வீடியோ ஆதாரத்தை தற்பொழுது ரஷ்யா போலீசார் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ பதிவு தற்பொழுது அனைத்து சமூக வலைத்தளங்களிலும் வைரல் ஆகிவருகிறது.

வேகத்தைக் கட்டுப்படுத்தும் கண்ட்ரோலர்
விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளது. விமானிகள் இருவரும் பயணிகளை காப்பாற்ற வேண்டும் என்பதனால் உடனே தரை இறக்க முயன்றுள்ளனர். வேகத்தைக் கட்டுப்படுத்தும் கண்ட்ரோலர் வேலை செய்யாததினால் விமானம் அதிக வேகத்துடன் விமானம் தரையிறக்கப்பட்டுள்ளது.

தடுமாறிய விமானம்
குறிப்பிட்ட வேகத்தில் தரையிறக்கப் பட வேண்டிய விமானம், அதிக வேகத்துடன் தரையிறக்கப்பட்டதினால் ஓடுபாதையிலிருந்து வெளியே சென்று தடுமாறி விபத்துக்குள்ளாகியுள்ளது. தடுமாறிய விமானத்தின் சக்கரங்கள் உடைத்து நிலைகுலைந்து அருகிலிருந்த வீட்டில் மோதி தீப்பிடித்து விபத்துக்குள்ளாக்கியது.

பயணிகளை காப்பாற்றிய விமானிகள்
இந்த விபத்தில் விமானத்தின் முன் பக்கம் தீப்பிடித்துள்ளது, விமானத்தைத் தரையிறக்கிய விமானிகள் இருவர் மட்டும் உயிரிழந்துள்ளனர். விமானத்தில் பயணம் செய்த பயணிகளுக்கு எந்த உயிர்ச் சேதமும் இல்லாமல், விமானிகள் அவர்களின் உயிரைப் பணயம் வைத்து பயணிகளைக் காப்பாற்றியுள்ளனர்.

வருத்தங்கள் நமது நெஞ்சை வாட்டுகிறது
விமான பயணிகளைக் காப்பாற்றிய இரண்டு விமானிகளை அனைவரும் பாராட்டி வருகின்றனர். இருப்பினும் வருத்தங்கள் நமது நெஞ்சை வாட்டுகிறது. ரஷ்யா போலீசார் வெளியிட்ட இந்த வீடியோ பதிவு தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகிவருகிறது.


Click it and Unblock the Notifications