உலகையே மிரள வைத்த அம்பானி வீட்டு திருமணம்.! செலவு எவ்வளவு?
உலகில் அதிக பணம் செலவு செய்து திருமணம் நடத்தியவர் என்ற பெருமையும் முகேஷ் அம்பானிக் கிடைத்துள்ளது. மேலும், ரூ.450 கோடியில் தம்பதிக்கு சொகுசு பங்களாவை அஜய் பிரமால் கொடுத்துள்ளார்.
உலக கோட்டீஸ்வரர்களின் ஒருவரான முகேஷ் அம்பானியின் மகள் இஷாஅம்பானிக்கும் வைர தொழில் அதிபர் ஆனந்த் பிரமாலுக்கும் இன்று உதய்ப்பூரில் திருமணம் நடந்தது.
இந்த திருமணத்திற்கு செலவு எவ்வளவு என்று கேட்டால் நாமே மயங்கி விடுவோம். ஊரை கூட்டி தேர் இழுக்கலாம். ஆனால் உலகத்தை கூட்டி திருமணம் நடத்தலாம் என்றால் அது அம்பானியால் தான் முடியும். இது புது மொழியாகவும் உருவெடுத்துள்ளது.
உலகில் அதிக பணம் செலவு செய்து திருமணம் நடத்தியவர் என்ற பெருமையும் முகேஷ் அம்பானிக் கிடைத்துள்ளது. மேலும், ரூ.450 கோடியில் தம்பதிக்கு சொகுசு பங்களாவை அஜய் பிரமால் கொடுத்துள்ளார்.

காதலே காதலே:
ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானி மகள் இஷாவுக்கும், கட்டுமான நிறுவ அதிபர் அஜய் பிரமாலின் மகன் ஆனந்த் பிரமாலுக்கும் காதல் மலர்ந்தது. இதையடுத்து அவர்களது காதல் இரு வீட்டாருக்கும் தெரியவந்தது.

முகேஷ்-நீட்டா பச்சை கொடி:
இதையடுத்து இஷா-ஆனந்த் காதலுக்கு முதல் ஆளாக முகேஷ்-நீட்டா அம்பானி ஆகியோர் பச்சை கொடிகாட்டினர். பிறகு, இரு வீட்டாரும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தனர்.

நிச்சயதார்த்தம்:
பிறகு, இஷா-ஆனந்த் பிரமாலுக்கு இத்தாலியில் பிரபலமான ஹோட்டல் ஒன்றில் நிச்சயதார்த்த விழா 3 நாள் நடந்தது. இதற்கும் தராளமாக செலவு செய்யப்பட்டது. இதில் ஏராளமான பிரபலங்கள் பங்கேற்றனர்.

திருமண பத்திரிக்கை:
திருமணத்திற்கு பத்திரிக்கை அடிக்கப்பட்டது. ஒரு பத்திரிக்கைக்கு மட்டும் ரூ.3 லட்சம் செலவு ஆனது.
கலை கட்டிய உதய்ப்பூர்:
கடந்த சில வாரங்களாக ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூர் நகரமே திருவிழாவை போல கலை கட்டியது.
திருமண விழாவுக்கு வரும் விருந்தினர்களுக்காக முகேஷ் அம்பானி குடும்பத்தினர் உதய்பூரில் அனைத்து நட்சத்திர ஓட்டல்களையும் வாடகைக்கு எடுத்து இருந்தனர்.

விழாவில் பங்கேற்ற பிரபலங்கள்:
சிறப்பு விருந்தினர்களாக அமெரிக்கா முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் மனைவி ஹிலாரி கிளிண்டன், தொழில் அதிபர்கள் ரத்தன் டாடா, குமாரமங்கலம் பிர்லா, மராட்டி முதல்-அமைச்சர் தேவேந்திர பட்டாவிஸ், அகிலேஷ் யாதவ், நடிகர்கள், ஷாருக்கான், சல்மான்கள், அமீர்கான் உள்ளிட்ட திரை நட்சத்திரங்களும், தோனி போன்ற விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

50 தனி விமானம், 1500 கார்கள்:
விருந்தினர்களை அழைத்து செல்ல 50 தனி விமானங்கள், 1500க்கும் மேற்பட்ட கார்கள் வாடைக்கு எடுத்து அசத்தினார் முகேஷ் அம்பானி. கடந்த சில நாட்களாகவே திருமண நிகழ்ச்சிகள் கலை கட்டின.

பாப் டாகி:
முக்கிய நிகழ்வாக பிரபல பாப் பாடகி பியான்சேவின் இசை நிகழ்ச்சி நடந்தது. இதுவரை அவர் எந்த திருமண நிகழ்ச்சியிலும் பாடல் பாடியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

27 மாடியுடைய வீட்டில் திருமணம்:
இஷா அம்பானி- ஆனந்த் பிராமல் திருமணம் இன்று (புதன்கிழமை) மும்பையில் முகேஷ் அம்பானியின் 27 மாடிகளை கொண்ட அன்டிலா வீட்டில் நடந்தது. இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டும் அழைப்பு இருந்தது.

திருமண செலவு:
37 வருடத்திற்கு முன்பு இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்- டயானா தம்பதியரின் திருமணம் ஆடம்பரமாக அதிக செலவில் நடந்தது. அதன்பிறகு உலக அளவில் அதிக செலவில் முகேஷ் அம்பானியின் மகள் திருமணம் ரூ.722 கோடியில் நடப்பதாக கூறப்படுகிறது.

வீடு கிப்ட்:
திருமண தம்பதிக்கு அஜய் பிரமால் ரூ.450 கோடியில் கட்டிய பங்களா வீட்டில் குடியேறுகிறார்கள். வைரத்தால் ஜொலிக்கும் அறை, கோவில், நீச்சல் குளம், வாகன பார்க்கிங் செய்ய மட்டும் 3 தளங்கள் என மிக பிரமாண்டமாக இந்த பங்களா கட்டப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications