பும்ராவின் பவுலிங் பின்னால் உள்ள ராக்கெட் சயின்ஸ்.!

ஐஐடி கான்பூரை சேர்ந்த சஞ்சய் மிட்டல் என்ற பேராசிரியர் பும்ராவின் பவுலிங் பின்னால் ராக்கெட் சயின்ஸ் ஒளிந்திருப்பதாகவும், அந்த சயின்ஸின் விளக்கத்தையும் சிறு தினங்களுக்கு முன் வெளியிட்டார்.

|

ஐஐடி கான்பூரை சேர்ந்த சஞ்சய் மிட்டல் என்ற பேராசிரியர் பும்ராவின் பவுலிங் பின்னால் ராக்கெட் சயின்ஸ் ஒளிந்திருப்பதாகவும், அந்த சயின்ஸின் விளக்கத்தையும் சிறு தினங்களுக்கு முன் வெளியிட்டார். தற்பொழுது இந்த பதிவு சமூக வலைத்தளம் முழுதும் வைரல் ஆகிவருகிறது. இவர் வெளியிட்டுள்ள பதிவினால் உலக கோப்பையை இந்தியா கைப்பற்றுவதில் சிரமம் ஏற்படுமா என்ற கருத்தும் பரவி வருகிறது.

பும்ரா பவுலிங்

பும்ரா பவுலிங் "ரிவர்ஸ் மேக்னஸ்" எஃபக்ட்

பும்ரா பவுலிங் செய்யும்பொழுது அவர் வீசும் பந்தின் போஷிஷன் மற்றும் பந்து சுழற்றுவது 1000 ஆர்பிஎம் ஆக இருக்கும் பட்சத்தில், அந்த சுழற்சி பந்தில் 0.1 ஸ்பின் ரேசியோவை உருவாக்குகிறது. இதனால் "ரிவர்ஸ் மேக்னஸ்" எஃபக்ட் என்று அழைக்கப்படும் எபெக்ட் உருவாகுகிறது.

அதிகப்படியான சுழற்சி

அதிகப்படியான சுழற்சி

இந்த ரிவர்ஸ் மேக்னஸ் எஃபக்ட் உடன் பும்ரா பந்தைக் கீழ் நோக்கி வீசும் போது, அந்த பந்தை பேட்ஸ்மேன் அட்டன் செய்வது சிரமமாகிறது. பும்ராவின் பவுலிங் பின்னால் உள்ள இந்த ரிவர்ஸ் மேக்னஸ் எஃபக்ட் காரணமாகப் பந்து அதிகப்படியான சுழற்சியுடன் பேட்ஸ்மேன் நோக்கிச் செல்கிறது.

சிறந்த பௌலர் பட்டியலில் முதல் இடம்

சிறந்த பௌலர் பட்டியலில் முதல் இடம்

இந்த காரணத்தினால் தான் பும்ரா இளம் வயதிலேயே உலகின் சிறந்த பௌலர் பட்டியலில் முதல் நபராக இடம் பிடித்துள்ளார் என்றும் ராக்கெட் சயின்ஸ் விளக்கத்துடன் சஞ்சய் மிட்டல் விளக்கியுள்ளார்.

உலகக் கோப்பை காய் நழுவுமா? நெட்டிசன்ஸ்கள் கவலை

உலகக் கோப்பை காய் நழுவுமா? நெட்டிசன்ஸ்கள் கவலை

ஆனால் தற்பொழுது சஞ்சய் அளித்துள்ள இந்த விளக்கம் எதிர் அணிகளுக்கும் கிடைக்கும் பட்சத்தில் பும்ராவின் பௌலிங்கை சமாளிக்க எதிரணிகளும் ஏதேனும் சயின்ஸ் நுணுக்கங்களைத் தேர்வு செய்ய நேரிடும், இதனால் உலகக் கோப்பை கையை விட்டு நழுவவும் வாய்ப்புள்ளது என்று நெட்டிசன்ஸ்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Best Mobiles in India

English summary
rocket science behind jasprit bumrah art : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X