பேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூகவலைதளங்களில் தலைவர்கள், பிரபலங்கள் கருணாநிதிக்கு இரங்கல்: தொகுப்பு.!
என்னுடைய கலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள். என்று திரு.ரஜினிகாந்த அவர்கள் தெரிவித்துள்ளார்.
உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை காலமானார். அவரது உடல் தற்சமயம் பொது மக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பல்வேறு பிரபலங்கள், மற்றும் அரசியல் தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

குறிப்பாக பேஸ்புக், டிவிட்டர், வாட்ஸ்ஆப் போன்ற பல்வேற சமூகவலைதங்களில் இந்தியா மற்றும் பல்வேறு நாட்டு மக்கள் தங்களது இரங்கலை தெரிவித்த வண்ணம் உள்ளனர். மேலும் இப்போது பேஸ்புக்,டிவிட்டர் போன்ற சமூகவலைதளங்களில் தலைவர்கள், பிரபலங்கள் கருணாநிதிக்கு இரங்கல் தெரிவித்த தொகுப்பை பார்க்கலாம்.

பிரதமர் மோடி:
இந்தியாவின் மிக மூத்த தலைவர்களுள் ஒருவர் அவர். ஒரு ஆழமான வேரூன்றிய வெகுஜன மக்களின் தலைவர். செழிப்பான சிந்தனையாளர், திறமையான எழுத்தாளர் மற்றும் தனது வாழ்வின் பெரும்பாதியை முழுமையாக ஏழைகளுக்காகவும் பிற்படுத்தப்படுத்தப்பட்டோருக்காகவும் அர்பணித்த பெருந் தலைவரை நாம் இழந்துவிட்டோம், என்று மோடி அவர்கள் தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி :
ராகுல் காந்தி அவர்கள் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார், பின்பு டிவிட்டர் பக்கத்தில் ஜெயலலிதாவை போலவே, கருணாநிதியும் தமிழக மக்களின் குரலாக இருந்தார். அவருக்கு மெரினா கடற்கரையில் இடம் தர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த்:
என்னுடைய கலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள். என்று திரு.ரஜினிகாந்த் அவர்கள் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் வீரர் அஸ்வின்:
இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் டாக்டர் எம்.கருணாநிதியின் இறந்ததைப் பற்றி கேட்க துக்கமாக இருக்கிறது என்றும், பின்பு அவருடைய குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

நடிகர் மம்மூட்டி:
நடிகர் மம்மூட்டி தெரிவித்தது ஒரு மாற்ற முடியாத இழப்பு. மற்றும் ஒரு பெரிய சகாப்தத்தின் முடிவு என்றும் தெரிவித்துள்ளார். மேலும் கலைஞர் மக்கள் மீது மிகவும் அன்பு கொண்டவர் என்றும் பின்பு அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

நடிகை திரிஷா
நடிகை திரிஷா மற்றொரு சகாப்தம் முடிந்தது என்று கூறி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

ஜி.வி பிரகாஷ் குமார்:
நடிகர் மற்றும் பிரபல இசையமைப்பளார் ஜி.வி பிரகாஷ் குமார் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின்:
இதுபோன்ற பல்வேறு தலைவர்கள் மற்றும் திரை பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் தங்களது ஆழ்ந்த இரங்களை தற்சமயம்
சமூக வலைதளங்களில் தெரிவித்த வண்ணம் உள்ளனர். மேலும் ஸ்டாலின் அவர்கள் இது வரை தனது அப்பாவை தலைவரே என்று அழைத்து வந்த மு.க.ஸ்டாலின் இப்போதாவது அப்பா என்று அழைத்துக்கொள்ளட்டுமா? என்று கண்ணீருடன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்இ அந்த கடிதம் இப்போது அனைத்து வலைதளங்களிலும் பகிரப்பட்டு வருகிறது.

நடிகை குஷ்புசுந்தர்:
நடிகை குஷ்புசுந்தர் அவர்கள் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications