மனிதனை கொன்றதற்கு சமம்., நீதி மேலோங்க வேண்டும்: ரத்தன் டாடா ஆவேசம்!

|

கேரளாவில் யானை கொலை செய்த சம்பவம் குறித்து தொழிலதிபர் ரத்தன் டாடா, இது மனிதனை கொன்றதற்கு சமம், நீதி மேலோங்க வேண்டும் என தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.

கடவுளின் தேசம் என போற்றப்படும் கேரளா

கடவுளின் தேசம் என போற்றப்படும் கேரளா

கடவுளின் தேசம் என்று போற்றப்படும் கேரளாவின் பெயர் சொன்னதும் நினைவுக்கு வருவது யானைகள். உலகப் புகழ் பூரம் திருவிழாவில் பிரதானப்படுத்தி வீட்டில் வளர்ப்பது வரை கேரளாவில் யானைக்கும் மனிதருக்குமான பாசம் காணப்படும்.

யானை ஒன்று கொடூரமாக கொள்ளப்பட்ட செய்தி

யானை ஒன்று கொடூரமாக கொள்ளப்பட்ட செய்தி

இந்த நிலையில் கேரளாவல் யானை ஒன்று கொடூரமாக கொள்ளப்பட்ட செய்தி இந்தியாவை கதிகலங்கச் செய்து வருகிறது. கடந்த வாரம் பாலக்காடு பகுதியில் வெள்ளியாற்றில் கர்ப்பிணி யானை ஒன்று கொடூரமாக கொள்ளப்பட்டது. இதற்கான காரணம் வனத்துறை அதிகாரி ஒருவரால் வெளிச்சத்துக்கு வந்தது.

அன்னாசி பழத்துக்குள் வெடி மருந்து

அன்னாசி பழத்துக்குள் வெடி மருந்து

இதுகுறித்து வனத்துறை அதிகாரி தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தது, காட்டு யானை ஒன்று ஊரக்குள் உணவு தேடி வந்ததாகவும் அப்போது யாரோ அன்னாசி பழத்துக்குள் வெடி மருந்து வைத்து கொடுத்துள்ளார். அந்த யானை அன்னாசி பழத்தை வாயுக்குள் வைத்து உண்ணும் போது வெடி மருந்து வெடித்தது இதில் அதன் வாய் மற்றும் நாக்கு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.

தீராத வலியுடன் ஊருக்குள் சுற்றிய யானை

தீராத வலியுடன் ஊருக்குள் சுற்றிய யானை

தீராத வலியுடன் ஊருக்குள் சுற்றிய யானை, அந்த வலியில் கூட ஊர் மக்களை தாக்கவில்லை பொது பொருட்களை சேதப்படுத்தவில்லை. உணவு பொருட்கள் வாய் நாக்கு என அனைத்திலும் பலத்த காயம் இருந்ததால் அதனால் அடுத்த உணவு உண்ண முடியவில்லை.

வயிற்றுக்குள் 18 - 20 மாத குட்டி

வயிற்றுக்குள் 18 - 20 மாத குட்டி

இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால் அந்த யானை வயிற்றுக்குள் 18 - 20 மாத குட்டி ஒன்று இருந்துள்ளது. காயத்தின் வலி தாங்காமல் பூச்சிகள் ஏதும் வராமல் இருக்க யானை ஆற்றில் இறங்கி தண்ணீரை வாயில் தெளித்துக் கொண்டே இருந்துள்ளது.

கர்ப்பிணி யானையை மீட்கும் பணி

கர்ப்பிணி யானையை மீட்கும் பணி

இதுகுறித்த தகவல் அறிந்த வனத்துறை அதிகாரிகள் இரண்டு கும்கி யானைகளோடு அந்த பகுதிக்கு சென்று கர்ப்பிணி யானையை மீட்கும் பணியில் ஈடுபட்டிருக்கின்றனர். ஆனால் யானை வலி தாங்காமல் இறந்த நிலையில் இருந்துள்ளது.

யானையை சடலமாக மீட்ட அதிகாரிகள்

யானையை சடலமாக மீட்ட அதிகாரிகள்

இதையடுத்து யானையை சடலமாக மீட்ட அதிகாரிகள் இறுதிச் சடங்கு செய்து எரியூட்டினர். இந்த முழுத் தகவல் குறித்தும் வனத்துறை அதிகாரி பேஸ்புக்கில் பதிவு செய்தார். இந்த பதிவு வைரலானது, இந்த மீட்பு வீடியோ காட்சி பார்ப்போரை கண் கலங்கச் செய்தது. இதுகுறித்து தொழிலதிபர்கள் சினிமாத்துறை, விளையாட்டுத்துறை, அரசியல் பிரபலங்கள் என பல தரப்பினரும் தங்களது கண்டனத்தையும், துக்கத்தையும் தெரிவித்து வருகின்றனர். யானை கொன்றது தொடர்பாக தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தொழிலதிபர் ரத்தன் டாடா

இதுதொடர்பாக தொழிலதிபர் ரத்தன் டாடா தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதில் கர்ப்பிணி யானை கொல்லப்பட்டது துக்கத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதுபோல் அப்பாவி விலங்கினங்களை கொல்வது மனிதர்களையே கொல்வதற்கு சமமானது, நீதி மேலோங்க வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளார்.

Best Mobiles in India

English summary
Ratan tata condemns about killing of elephant in kerala

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X