100 ஆண்டுகளுக்கு பிறகு உண்மையான பிளாக் பாந்தர் காணப்பட்டுள்ளது.!வைரல் செய்தி.! வைரல் புகைப்படம்.
பர்ராட்-லூகாஸ் என்ற பிரிட்டிஷ் வனவிலங்கு புகைப்படக் கலைஞர், மத்திய கென்யா வனப்பகுதிக்குள் உண்மையான பிளாக் பாந்தர் சிறுத்தையின் புகைப்படத்தை 100 வருடங்களுக்கு பிறகு கிளிக் செய்துள்ளார்.
பர்ராட்-லூகாஸ் என்ற பிரிட்டிஷ் வனவிலங்கு புகைப்படக் கலைஞர், மத்திய கென்யா வனப்பகுதிக்குள் உண்மையான பிளாக் பாந்தர் சிறுத்தையின் புகைப்படத்தை கிளிக் செய்துள்ளார். முற்றிலும் அழிந்து போனதாக கூறப்படும் பிளாக் பாந்தர் இனத்தில் ஒரு சிறுத்தையை 100 ஆண்டுகளுக்குப் பிறகு ஆதாரத்துடன் நேரில் பார்த்திருக்கிறார் பர்ராட்-லூகாஸ்.

100 ஆண்டுகளுக்குப் பிறகு பிளாக் பாந்தர்
100 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டறியப்பட்டுள்ள இந்த பிளாக் பாந்தர் சிறுத்தை பற்றிய செய்திகள் சமூக ஊடகங்கள், உலக தொலைக்காட்சி சேனல்கள், சமூக வலைத்தளமான பேஸ்புக் மற்றும் டிவிட்டரில் அதிகம் பேசப்பட்டு வைரல் ஆகி வருகிறது.

லோய்ஸபா கன்சர்வன்ஸி பகுதியில் பிளேக் பாந்தர்
2018 ஆண்டின் துவக்கத்தில் லோய்ஸபா கன்சர்வன்ஸி பகுதியில் பல இடங்களில் கேமெராக்களை தனது ஆராய்ச்சிக்காகப் பொருத்தியுள்ளார் பர்ராட்-லூகாஸ், அவர் தேடி வந்தது ஒன்று ஆனால் அவருக்குக் கிடைத்ததோ வேறொன்று என்பது போல இந்த பிளேக் பாந்தர் அவரின் கேமராவில் சிக்கியுள்ளது.

பிளாக் பாந்தர்
பர்ராட்-லூகாஸ் பொருத்தி இருந்த அணைத்து கேமராக்களின் புகைப்படங்களைச் சோதிக்கும் பொழுது, இறுதி கேமராவில் இந்த பிளாக் பாந்தரின் புகைப்படம் சிக்கியுள்ளது கண்டு அதிர்ந்து போனதாக அவர் தெரிவித்துள்ளார். ஆப்பிரிக்கா வனப்பகுதியில் காணப்படும் சாதாரண சிறுத்தை வகை சிரத்தையுடன் இந்த பிளாக் பாந்தர் அந்தப் புகைப்படத்தில் சிக்கியுள்ளது.

1909 ஆம் ஆண்டில் பிளாக் பாந்தர்
100 வருடங்களுக்குப் பிறகு ஆதாரத்துடன் பிளாக் பாந்தரின் புகைப்படத்தை கிளிக் செய்துள்ள பெருமையை பர்ராட்-லூகாஸ் பெற்றிருக்கிறார். இதற்கு முன்பு 1909 ஆம் ஆண்டில், அடிஸ் அபாபா என்கிற புகைப்பட கலைஞர் பிளாக் பாந்தரின் புகைப்படத்தை எத்தியோப்பியா வனப்பகுதியில் கிளிக் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்குப் பிறகு தற்பொழுது பர்ராட்-லூகாஸ் இந்தப் பெருமையை 100 வருடங்களுக்குப் பிறகு பெறுகிறார்.

வைரல் புகைப்படம் மற்றும் செய்தி
மிகவும் அரிதான இந்த பிளாக் பாந்தர் சிறுத்தை வகையை ஆப்பிரிக்கா காட்டிற்குள் 100 வருடங்களுக்குப் பிறகு காணப்பட்டுள்ளது அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தியுள்ளது. தற்பொழுது இந்தச் செய்தி சமூக வலைத்தளம் மற்றும் அணைத்து ஊடகங்களிலும் வைரல் ஆகி அதிகம் பகிரப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications