ராகுல் காந்தியை கொல்ல சதி: 7 முறை லேசர் ஒளியில் குறி.!
அமோதி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்ய சென்ற ராகுல் செய்தியாளர்களிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவரது தலையில் 7 முறை சேலர் ஒளி மூலம் குறிவைக்கப்பட்டுள்ளது.
அமோதி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்ய சென்ற ராகுல் செய்தியாளர்களிடம் பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது அவரது தலையில் 7 முறை சேலர் ஒளி மூலம் குறிவைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து காங்கிரஸ் குற்றம்சாட்டியதாக தெரிகின்றது. மேலும், மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு காங்கிரஸ் கட்சி கடிதம் எழுதியிருப்பதாக கூறப்படுகின்றது.

கொல்லப்பட்ட காங்கிரஸ் தலைவர்கள்:
காங்கிரஸ் கட்சியின் தலைவர்களாகவும் பிரதமராக இருந்த போது இந்திராகாந்தி, ராஜீவ் காந்தி ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர். இதை காரணம் காட்டியும் காங்கிரஸ் கட்சி ராகுல் காந்தி பாதுகாப்பில் குறைபாடுகள் என்று எடுத்துரைத்துள்ளது.
கடிதத்தில் கையெழுத்து:
மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு எழுத்தப்பட்ட கடிதத்தில் காங்கிரஸ் கட்சி தலைவர்களாக அஹ்மத் பட்டேல், ஜெய்ராம் ரமேஷ், ரன்தீப் சுர்ஜீவாலா ஆகியோர் கையெடுத்துட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

காங்கிரஸ் மறுப்பு:
இந்நிலையில் பாதுகாப்பு குறைபடு மற்றும் சேலர் ஒளி தொடர்பாக வந்த செய்தகிள் குறித்து தாங்கள் உள்துறை அமைச்சகத்துக்கு எந்த கடிதம் எழுதவில்லை என்று காங்கிரஸ் கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது.

அபிஷேக் சிங்வி கூற்று:
உள்துறை அமைச்சகத்துக்கு காங்கிரஸ் எந்த கடிதமும் எழுதவில்லை. இதுகுறித்து உள்துறை அமைச்சகமும் விளக்கமளித்துள்ளது என்றுகாங்கிரஸ் கட்சி தலைவர் அபிஷேக் சிங்வி கூறினார்.
உள்துறை அமைச்சகத்தின் கடிதம்:
மேலும் மத்திய உள்துறை அமைச்சகம் காங்கிரஸ் கட்சிக்கு கடிதம் எழுதியிருந்தது. அதில், சேலர் ஒளி மூலம் ராகுலின் தலைக்கு குறி வைக்கப்பட்டதாக வந்த செய்திகள் குறித்து விசாரணை நடத்த தங்கள் உத்தரவிட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.
மேலும் சிறப்பு பாதுகாப்பு குழு விசாரணை செய்ய உத்தரவிட்டுள்ளது.

கேமரா ஒளி:
சிறப்பு பாதுகாப்பு குழுவின் தலைவர் ராகுலின் தலையில்பட்ட பச்சை நிற ஒளி ராகுலின் உரையை படம் பிடித்த ஒரு புகைப்பட நிபுணரின் கேமராவில் இருந்து வெளியிப்பட்டதாக கண்டறிந்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம்:
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியிடம் இருந்து இதுவரை எந்த கடிதமும் பெறப்படவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.


Click it and Unblock the Notifications