"கீக்கி சேலன்ஜ்" தொடர்ந்து "பப்ஜி டிராக்டர் சேலன்ஜ்".! டிவிட்டர் & பேஸ்புக் வைரல்.!
கீக்கி சேலன்ஜ் போன்று தற்பொழுது இந்த பப்ஜி டிராக்டர் சேலன்ஜ் சமூகவலைத்தளங்கள் முழுதும் பரவ துவங்கியுள்ளது.
இந்தியாவில் பரவலாக விளையாடப்படும் கேம்களின் ஒன்று தான் பப்ஜி கேம். நாள் ஒன்றுக்கு 10 மில்லியன் நபர்கள் இணையம் மூலம் இந்த பப்ஜி கேம் ஐ விளையாடுகின்றனர்.
இந்த ஆண்டில் அதிகம் டவுன்லோட் செய்யப்பட்ட கேம்களின் பட்டியலில் பப்ஜிக்கே முதல் இடம் என்றே சொல்லலாம். ஆண் மற்றும் பெண் என இருபாலருக்கும் பிடித்திருக்கும் இந்த கேம் பற்றி நிறையச் சுவாரசிய தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது.
பப்ஜி பிளேயர்களின் கீக்கி சேலன்ஜ்
அனைவரும் கீக்கி சேலன்ஜ் வந்த நேரத்தில் பப்ஜி பிளேயர்கள், பப்ஜி கேம் இல் கீக்கி சேலன்ஜ் செய்து வீடியோவை வலைத்தளத்தில் பரவவிட்டனர். அதைத் தொடர்ந்து பலரும் அதைச் செய்ய துவங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பப்ஜி காதல் திருமணம்
சென்ற வாரம் பப்ஜி விளையாட்டு வீரர்கள் இருவர் காதலித்து திருமணம் செய்து கொண்ட புகைப்படம் வலைத்தளங்களில் வைரல் ஆகியது. இன்னும் சிலர் அதைத் தொடர்ந்து திருமணம் செய்து புகைப்படங்களை டிவிட்டர் மற்றும் பேஸ்புக் இல் பதிவு செய்தனர்.

மகேந்திர நிறுவனத்தின் டிராக்டர்
அதனைத் தொடர்ந்து தற்பொழுது இன்னொரு புதிய பப்ஜி வைரல் நியூஸ் கிடைத்துள்ளது. இந்த பாப்ஜி கேம் இல் இந்திய நிறுவனமான மகேந்திர நிறுவனத்தின் டிராக்டர் இடம்பெற்றுள்ளதாக பேஸ்புக் மற்றும் டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் அதன் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.

2 மில்லியன் பப்ஜி பிளேயர்கள்
இந்த மகேந்திர டிராக்டர் 265 DI முதன் முதலில் யூடுப் நபர் சோக்கோடோகா என்ற நபரால் பப்ஜி கேம் இல் கண்டுபிடிக்கப்பட்டது. இவர் முதலில் இந்த டிராக்டர் ஐ பார்த்தவுடன் படம் பிடித்து டிவிட்டர் இல் டிவீட் செய்துவிட்டார்.இதைத் தொடர்ந்து கிட்டத் தட்ட நாள் ஒன்றிற்கு 2 மில்லியன் பப்ஜி பயனாளர்கள் இந்த டிராக்டர் ஐ தேடி பப்ஜி காலத்திற்குள் சுத்தி திரிவதாக செய்திகள் வந்துள்ளது.

பப்ஜி டிராக்டர் சேலன்ஜ்
கீக்கி சேலன்ஜ் போன்று தற்பொழுது இந்த பப்ஜி டிராக்டர் சேலன்ஜ் சமூகவலைத்தளங்கள் முழுதும் பரவ துவங்கியுள்ளது. முக்கியமா இந்திய பப்ஜி கேம் பிளேயர்கள் இதை மும்முரமாகத் தேடி வருகின்றனர். முக்கியமாக இந்த டிராக்டர் கேம் இல் ஒரு கட்சி பொருளாக மட்டுமே வைக்கப்பட்டுள்ளது, இதைப் பயனர்கள் டிரைவ் செய்ய முடியாது என்பதையும் தெளிவாக சொல்லிக்கொள்கிறோம்.

சேலன்ஜ் ஸ்டார்ட்ஸ்
இந்த டிராக்டர் எங்கு இருக்கிறது என்ற தகவல் கூட நம்மிடம் இருக்கிறது. ஆனால் சேலன்ஜ் என்று ஆகிவிட்ட பின்னால் அதைச் சொல்லிவிட்டால் என்ன சுவாரசியம் இருக்கப் போகிறது. அடுத்த சேலன்ஜ் என்னவாக இருக்குமென்பது தான் பலரது எதிர்பார்ப்பாக இருக்கிறது.
"பப்ஜி டிராக்டர் சேலன்ஜ் ஸ்டார்ட்ஸ்"


Click it and Unblock the Notifications