Just In
- 7 min ago
230 சீன ஆப்ஸ்களுக்கு ஆப்பு! இதுவரை இல்லாத உற்சாகத்தில் இந்தியர்கள்! ஏன் தெரியுமா?
- 30 min ago
இதுவரை பூமியில் 3,00,000 ஏலியன் நிகழ்வுகள் நடந்துள்ளதா? ஷாக்கிங் Alien ரிப்போர்ட் நெட்டில் லீக்.!
- 2 hrs ago
டிஜிட்டல் கேமராக்களுக்கு வேலை இருக்காது போலயே: சோனி கேமராவுடன் அறிமுகமான 2 புதிய Vivo போன்கள்.!
- 2 hrs ago
iPhone எதுக்கு? அதைவிட கம்மி விலைக்கு இந்த பிரீமியம் போனை தர்றோம்.. Apple க்கு Samsung வைத்த வேட்டு!
Don't Miss
- News
நாங்க யாருக்கும் அடிமைகள் இல்லை.. இன்னும் பலருக்கு கடிதங்கள் போகவில்லை.. ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி
- Automobiles
இன்னும் 5-6 வருஷம் ஆகும்னு நினைச்சுட்டு இருந்தோம்... இவ்ளோ சீக்கிரமே ராயல் என்பீல்டுல இ-பைக் அறிமுகமாக போகுதா!
- Finance
தங்கம் விலை மீண்டும் ரூ.58,000 தொடலாம்.. வெள்ளி விலை எப்படியிருக்கும் தெரியுமா.. ரெடியா இருங்க!
- Movies
பாரதி கண்ணம்மாவின் அடுத்த அத்தியாயம்.. கலக்கல் காம்போவுடன் களமிறங்கும் டீம்!
- Lifestyle
இந்த சக்திவாய்ந்த மூலிகைகளில் ஒன்றை எடுத்துக்கொண்டாலும் நீங்கள் நிம்மதியான தூக்கத்தைப் பெறலாமாம்...!
- Sports
தரமான செய்கை இருக்கு.. ஹர்பஜனின் முக்கிய சாதனையை உடைக்கும் அஸ்வின்.. ஆஸி, தொடரில் பெரும் வாய்ப்பு!
- Travel
சென்னை to டெல்லி விமான பயணமா - டிக்கெட்டுகளின் விலை உயர்த்தப்பட்டது பற்றி உங்களுக்கு தெரியுமா?
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ஒருபக்கத்த மட்டும் தானே பார்த்தீங்க.? மறுபக்கத்தையும் கொஞ்சம் பார்த்துடுங்க.!
எல்லா ப்ரொபைல் பிக்சர்களையும் பார்த்த பின்பு - டே.. என்னடா ஒரே பொண்ணுங்க போட்டாவா இருக்கு.. பொண்ணுங்க மட்டும்தான் பேஸ்புக்ல க்ராப் பண்ணி, எடிட் பண்ணி, டபுள் ட்ரிபிள் பில்டர்ஸ் போட்டு ஏமாத்துறாங்களா.? பசங்களாம் என்ன பொறப்புலேயே சூர்யா-ஆர்யாவா.? என்று கேட்கலாம்

உண்மையா சொல்லணும்னா... ஏமாத்தணும்னு நினைக்கிற பசங்க எங்கமா அவன் அவன் போட்டோவா போடுறான்.? நமீதா, நயந்தாரா போட்டாவை போட்டா பேக் ஐடினு ஈஸியா மாட்டிப்போம்னு தெளிவா யோசிச்சு.. ஏதோவொரு பொண்ணு போட்டோவதான் - ப்ரொபைல் பிக்சரா வைக்குறான்
(இந்த இடத்தில் பெணகள் தங்களது புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யும்போது கடுமையான தனியுரிமை செட்டிங்ஸ்களை கையாளுமாறு கேட்டுக்கொள்கிறேன்).!

அடிமேல் அடி.. ஒருபக்கம் மாநில அரசு குனிய வச்சு குத்துது, மறுபக்கம் மத்திய அரசு தூக்கி போட்டு நெஞ்சு மேலயே மிதிக்குது. பஸ்ல போக முடியல, ரயில்ல நிக்க கூட இடமில்ல - மிடில் கிளாஸ் மாதவன்கள் தொடங்கி மாச சம்பள ஷண்முகிகள் வரைக்கும் எல்லாருக்குமே மென்டல் பிரஷர் - அதை கொஞ்சம் குறைச்சுக்கலாம் வாங்க. இதோ உங்களின் பார்வைக்கு பேஸ்புக் ப்ரொபைல் பிக்சர் vs அவர்களை போட்டுக்கொடுத்த பிக்சர்.!

பொய்யும் மெய்யும் #01
ப்ரொபைல் பிக்சரில் 'டாப் ஆங்கிள்' வைத்து கோல்மால் பண்ண தெரிஞ்ச இந்த ஆண்ட்டிக்கு. மிர்ரர் செல்பீய அப்லோட் பண்ணகூடாதுனு தெரியாம போயிடுச்சு.! சோ சாட்.!

பொய்யும் மெய்யும் #02
க்ராப் பண்ணுறதுல பிஎச்டி முடிச்சு இருப்பாங்க போல.. ஜோடியா இருக்கும்போதே இவ்ளோ பித்தலாட்டம் னா.?? அப்போ.!!x

பொய்யும் மெய்யும் #03
'டக்'னு செல்பீ கேமராவை ஓப்பன் பண்ணினா எல்லாருடைய மூஞ்சும் இப்படி தான் இருக்கும் - அது சகஜம். ஆனா இந்தப்பக்கம் இருக்குற ஒரு மூஞ்சு "இப்படி" இருக்குறது - சத்திய சோதனை.!

பொய்யும் மெய்யும் #04
பார்த்ததுமே.. அம்மாவும் பொண்ணும்னு நினைச்சுட்டேன். அப்புறம் தான் ஒரு உண்மை தெரிஞ்சுது. பேஸ்புக்ல இருக்குற பாவப்பட்ட பசங்கள நினைச்சதும் - ஒரு நிமிஷம் தல சுத்திடுச்சு.!

பொய்யும் மெய்யும் #05
அக்காவோட நேர்மையை நாம பாராட்டியே ஆகணும். கொஞ்சம் கலர் கரெக்ஷன் அப்புறம் போட்டோ போஸில் கொஞ்சம் மாற்றம் - அவ்ளோதான். இதுக்கே 7 வித்தியாசம் கண்டுபிடிக்கலாம் போலயயே என்று கேட்டால் அதுக்கு அந்த அக்கா தான் பதில் சொல்லணும்.

பொய்யும் மெய்யும் #06
இந்த கண்ணு இருக்கே கண்ணு.! அடப்போ கண்ணு.! ஒன்னும் சொல்றதுக்கு இல்ல கண்ணு.!

பொய்யும் மெய்யும் #07
ப்ரொபைல் பிக்சர்ல ஒரு இன்ச் அளவில் க்ராப்பிங் மிஸ் ஆகியிருந்தா கூட இந்த உண்மைய நாம முன்னாடியே கண்டுப்புடிச்சிருக்கலாம். க்ராப்பிங் டூல் கண்டுபிடிச்சவனின் ஆத்மா சாந்தியடையுமாறு அனைவரும் ஒரு நிமிடம் கண்களை மூடி பிராத்திப்போமாக.!

பொய்யும் மெய்யும் #08
ஷாப்பிங் மால் மற்றும் சினிமா ஹாலிற்கும் - வீட்டு பாத்ரூம் மற்றும் பெட்ரூமிற்கும் உள்ள வித்தியாசத்தை இவ்ளோ அழகா.. அற்புதமா.. யாராலயும் காட்சிப்படுத்த முடியாது மா.! பிண்ணிடீங்க மா.!

பொய்யும் மெய்யும் #09
பேய் படங்களில் கொடூரமான முறையில் சித்தரிக்கப்படும் பெண்கள் எல்லோருமே ஒரு அழகான தேவதைகள் என்பதை நான் ரிவர்ஸ் கியர் போட்டு ஏற்றுக்கொள்கிறேன்.

பொய்யும் மெய்யும் #10
இனிமே எவனாச்சும்/ எவளாச்சும் கண்ணாடி போட்ட பொண்ணுங்கலாம் "டபுள் க்யூட்"னு வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ் வச்சா.. இந்த போட்டவா ரிப்ளையா அனுப்புங்க.. பாத்துட்டு சாவட்டும்.!

பொய்யும் மெய்யும் #11
டக் பேஸ் செல்பீ VS டான்கி பேஸ் செல்பீ - வெளியில இருந்து ஒருத்தன் வந்து நம்மள கலாய்ச்சா அது நமக்கு தானே அசிங்கம். - அதான் செல்ப் ட்ரோலிங்.!

பொய்யும் மெய்யும் #12
என் கூட படிச்சா நாய் ஒருத்தன் பொண்ணு போட்டோவ பேஸ்புக்ல போட்டு என்னை ஆறு மாசமா ஏமாத்தினான். அப்போ கூட வராத கோபம் இந்த கிழவி ப்ரொபைல் பிக்சரை பார்த்தான் அடுத்த நொடியே வந்துடுச்சு.!

பொய்யும் மெய்யும் #13
கேமராவை முன்னால வச்சி வாய அப்டி க்யூட்டா வச்சா - அது அழகான செல்பீ, அந்த வாயடோ பொஷிஷனை மாற்றாம.. அப்டியே கேமராவை கீழ கொண்டு போய் வச்சா - அது அகோர செல்பீ.!

பொய்யும் மெய்யும் #14
குயிலப்புடுச்சு கூண்டில் அடைச்சு...கூவ சொல்லுகிற உலகம். மேக் அப் போட்டு போட்டோ எடுத்து லைக்ஸ் வாங்குகிற உலகம். அது எப்படி பாடுமைய்யா.. இது என்ன நியாமைய்யா.! ஓஓஓஓ.. ஓஒ.!!

பொய்யும் மெய்யும் #15
யக்கோ.. இது கல்லாட்டம்.. பார்த்தாலே தெரியுது.. வேணும்னே உங்கள நீங்களே காமெடியா போட்டோ எடுத்து இருக்கீங்கனு.. நோ கமெண்ட்ஸ்.!

பொய்யும் மெய்யும் #16
ஆயிரம் திரைகள் போட்டாலும் உண்மையை மறைக்க முடியாதுனு சொல்வாங்க.. நீங்க என்னனா ஒரே ஒரு முகமூடியை போட்டு உண்மையா வெளிப்படுத்திட்டீங்களே.! ஐ யம் சோ சாட் ஆப் யூ.!

பொய்யும் மெய்யும் #17
முடிஞ்ச அளவு நல்லா கலாய்ச்சுட்டு.. க்ளைமேக்ஸ்ல ஒரு சோஷியல் மெஸேஜ் சொல்லுற தமிழ் சினிமா பாணியில் நானும் ஒரு தத்துவம் சொல்லிட்றேன்: ஒருவரின் இயல்பையும், இயற்கையையும் ரசிக்கவும், மதிக்கவும் கற்றுக்கொண்டால், இவ்வகையான 'க்ராப்'களுக்கு வேலையே இருக்காது. ஓட்டுப்போட்ட நம்ம மேல தான் தப்பு என்பதைப்போல இதற்கும் நாம் தான் காரணம்.!
புகைப்படங்கள் : பிரைட்சைட்
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470