பாகிஸ்தான் F-16விமானத்தை வீழ்த்திய அபிந்தன்-போலி டுவிட்டர் உலா.!

அபிந்தனின் போலி டுவிட்டர்: இந்திய விமானப் படையின் போர் விமானி அபிநந்தனின் டிவிட்டர் கணக்கு என போலிகள் உருவாவதால் அதை நம்பவேண்டாம் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.

|

புல்வாமா தாக்குதலால் சுமார் 44 சிஆர்பிஎப் வீரர்கள் பலியாகினர். இதற்கு ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு பொற்றுள்ளது. இது பாகிஸ்தானை சேந்த தீவிரவாத அமைப்பாகும். இந்த அமைப்பு பாகிஸ்தானில் இருந்து செயல்படுகின்றது.
இந்நிலையில், இதற்கு பலிவாங்கும் விதமாக இந்தியா கடந்த வாரம் பாகிஸ்தானில் அதிகாலையில் சென்று தாக்குதல் நடத்தியது. இதில் தீவிர வாதிகள் சுமார் 350 கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலுக்கு மிராஜ் 2000 போர் விமானத்தை பயன்படுத்தியிருந்தது. இந்நிலையில், இது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பாகிஸ்தான் F-16விமானத்தை வீழ்த்திய அபிந்தன்-போலி டுவிட்டர் உலா.!

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானை சேர்ந்த விமானங்கள் இந்திய வான் எல்லையில் நுழையந்தன. இந்திய விமாப்படையை சேர்ந்த விமானி அபிநந்தன் மிக் 21 விமானத்தில் சென்று பாகிஸ்தான் விமானத்தை வீழ்த்தினார்.

இதில், பிறகு இவரும் பாகிஸ்தான் எல்லைக்குள் சென்றதால், பாகிஸ்தான் படையின் சுட்டு வீழ்த்தினர். பிறகு, பாராசூட் உதவியுடன் கீழே குதித்தார். பாகிஸ்தான் ராணுவத்தினர். அவரை சிறைபிடித்தனர்.

இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் அழுத்தம் கொடுத்ததால் 3 நாட்களில் அவர் விடுக்கப்பட்டார். தற்போது உலகம் முழுக்கவும் அபிநந்தன் பிரபலமாகியுள்ளார்.

அபிந்தனின் போலி டுவிட்டர்:

இந்திய விமானப் படையின் போர் விமானி அபிநந்தனின் டிவிட்டர் கணக்கு என போலிகள் உருவாவதால் அதை நம்பவேண்டாம் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.

அபிநந்தன் பெயரில் ஹேஸ் டேக்:

பாகிஸ்தான் வசமிருந்து விடுவிக்கப்பட்ட இந்திய போர் விமானி அபிநந்தனை வரவேற்று #WelcomeHomeAbhinandan என்ற ஹேஸ் டேக் உலக அளவில் டிவிட்டரில் முதலாவதாக டிரெண்ட் ஆனது.

 நிர்மலா சீத்தாராமன் சந்திப்பு:

நிர்மலா சீத்தாராமன் சந்திப்பு:

அவரை பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்து பேசியதைத் தொடர்ந்து அதுகுறித்த புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் உலவின.

உலா வரும் போலி கணக்கு:

இந்நிலையில், விங் கமாண்டர் அபிநந்தனின் பெயரில் சிலர் போலியாக டிவிட்டர் கணக்கை உருவாக்கி கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். இது அபிநந்தனின் உண்மையான டிவிட்டர் கணக்கு என நம்பிய ஆயிரக்கணக்கானோர் அதைப் பின் தொடர்கின்றனர்.

மத்திய அரசு எச்சரிக்கை:

விஷமிகள் அதை தவறாகப் பயன்படுத்தக் கூடும் எனக் கருதி, அது போலி ட்விட்டர் கணக்கு என மத்திய அரசு எச்சரித்துள்ளது. மேலும், அந்த கணக்கும் டிவிட்டரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Probe begins into Abhinandan's 'fake' Twitter handle : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X