Home
Social media

ஓடும் ரயில் முன்பு டிக்டாக் வீடியோ எடுத்த 2 இளைஞர்கள் பலி.!

டிக் டாக் செயலியை இதுவரை சுமார் 50 கோடிக்கும் அதிகமானோர்பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர். தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வின் படி சென்ற ஆண்டில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட ஆப் டிக் டாக் ஆப் என்பதும் குறிப்பிடத்தக்கது.

டிக் டாக் செயலி

டிக் டாக் செயலி

பள்ளி மாணவர்கள் மட்டுமின்றி, கல்லூரி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் இந்தியாவில் டிக் டாக் செயலியைப் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் தவறான வழியில் செல்லுவதற்கு வழிவகுக்கிறது என்றும், தனிநபர் சுதந்திரம் பாதிக்கப்படுகிறது என்றும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வழக்கு தொடரப்பட்டது.

பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

இந்நிலையில் டிக் டாக் வீடியோவால் ரயலில் அடிபட்டு 2 வாலிபர்கள் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, அதன்படி கர்நாடகா மாநிலம் பெங்களூர் ஹெட்ஜ்நகரை சேர்ந்த 19 வயது அப்தாப்ஷெரீப் மற்றும் 23 வயது முகமது மாடின். இந்த இளைஞர்களுக்கும் டிக்டாக் வீடியோ மீது அளவுகடந்த மோகம்.

டிக்டாக் வீடீயா

டிக்டாக் வீடீயா

நேற்று மாலை இந்த இளைஞர்கள் அதே பகுதியை சேர்ந்த ஜபியுல்லாகான் என்ற மற்றொரு நம்பரை சந்தித்து பேசினர். பின்னர் இவர்கள் மூன்று பேரும் சேர்ந்து சன்ன சந்திரா மற்றும் யெலஹங்கா என்ற பகுதிக்கு இயையேயான தண்டவாள பகுதியில் நின்று டிக்டாக் வீடீயா ஒன்றை பதிவு செய்துள்ளனர்.

டிக்டாக் வீடியோவுக்காக நடித்துள்ளனர்

டிக்டாக் வீடியோவுக்காக நடித்துள்ளனர்

மேலும் ஜிபியுல்லா கான் தனது செல்போனில் வீடியோ மற்ற இருவரும் டிக்டாக் வீடியோவுக்காக நடித்துள்ளனர். அப்போது அந்த வழியே வந்த பயணிகள் ரயில் இவர்கள் 3பேர் மீதும் மோதியது. இதில் அப்தாப்ஷெரீப், முகமது மாடின் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

அரசு மருத்துமணை

அரசு மருத்துமணை

ஜிபியுல்லா கான் படுகாயம் அடைந்தார், பின்பு சம்பவ இடத்திற்கு வந்த போலீசர் அவரை மீட்டு அரசு மருத்துமணையில் சேர்த்தது, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்து போலீசார் தெரிவித்தது என்னவென்றால்,

 பைலட் விசில் ஊதி உள்ளார்

பைலட் விசில் ஊதி உள்ளார்

சம்பவம் நடப்பதற்கு 30நிமிடங்கள் முன்னர்தான் அவ்வழியாக ஒரு சரக்கு ரயில் சென்றுள்ளது, அதன்பின்பு பயணிகள் ரயில் வந்துள்ளது,அப்போது லோகோ பைலட் விசில் ஊதி உள்ளார்,ஆனால் அந்த இளைஞர்கள் கவனிக்காமல் டிக்டாக்-ல் மூழ்கி இருந்ததால் ரயில் மோதி இறந்துள்ளனர் என்றார்.

Best Mobiles in India

English summary
Posing for TikTok, 2 run over by train near Yelahanka: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X