யூடியூப்பில் அதிரும் பொள்ளாச்சி பாலியல் வீடியோ- சிபிசிஐடி கடிதம்.!

பொள்ளாச்சி பாலியல் வழக்கை தற்போது சிபிசிஐடி போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் தொடர்புடைய திருநாவுக்கரசு, சதீஷ், வசந்த் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

|

பொள்ளாச்சி பாலியல் வழக்கை தற்போது சிபிசிஐடி போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் தொடர்புடைய திருநாவுக்கரசு, சதீஷ், வசந்த் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

யூடியூப்பில் அதிரும்  பொள்ளாச்சி பாலியல் வீடியோ- சிபிசிஐடி கடிதம்.!

இவர்கள் மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது. இந்நிலையில் வாட்ஸ், ஆப், யூடிப்களில் இருக்கும் பாலியல் காட்சிகளை நீக்குமாறு சிபிசிஐடி போலீசார் கடிதம் எழுதியுள்ளனர்.

பொள்ளாச்சி பாலியல் சம்பவம்:

பொள்ளாச்சி பாலியல் சம்பவம்:

பொள்ளாச்சியில், பேஸ்புக் மூலம் பழகி கல்லூரி மாணவி, பேராசியர், டாக்டர், டாக்டர் மனைவி உள்ளிட்ட சுமார் 400 பெண்களை திருநாவுக்கரசு தலைமையிலான கும்பல் பாலியல் பலாத்காரம் செய்தது.

இதை வீடியோவாகவும் எடுத்து பணம் பறித்து வந்தனர். இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக அவர்கள் 4 பேர் கைது செய்யப்படனர்.

இந்த வழக்கு பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் விஸ்பரூபம் எடுத்தது. இதையடுத்து சிபிசிஐடி போலீசார் வழக்கு கைமாற்றப்பட்டது.

இளம் போட்டோ வீடியோக்கள்:

இளம் போட்டோ வீடியோக்கள்:

இதற்கிடையே பாதிக்கப்பட்ட இளம்பெண்களின் வீடியோக்கள் பேஸ்புக், வாட்ஸ்-அப், யூ-டியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பேஸ்புக், வாட்ஸ் ஆப்புக் கடிதம்:

பேஸ்புக், வாட்ஸ் ஆப்புக் கடிதம்:

இதையடுத்து சமூக வலைதளங்களில் வீடியோக்கள் பரவுவதை தடுக்க வேண்டும் என சி.பி.சி.ஐ.டி. போலீசார் யூ-டியூப், பேஸ்புக், வாட்ஸ் -அப் நிறுவனங்களுக்கு கடிதம் அனுப்பினர்.

 மீண்டும் ஒரு ஆடியோ:

மீண்டும் ஒரு ஆடியோ:

இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு யூ-டியூப்பில் மீண்டும் ஒரு ஆடியோ பரவியது. அதில் பொள்ளாச்சி கும்பலால் பாதிக்கப்பட்டவர் என கூறி ஒரு இளம்பெண் பேசினார்.

திருநாவுகரசு வீட்டில் சிறுமி சடலம்:

திருநாவுகரசு வீட்டில் சிறுமி சடலம்:

அதில், பொள்ளாச்சி கும்பல் ஒரு சிறுமியை விடிய, விடிய பாலியல் பலாத்காரம் செய்ததில் சிறுமி இறந்து விட்டதாகவும், சிறுமியின் உடலை திருநாவுக்கரசு வீட்டின் பின்புறம் புதைத்து விட்டதாகவும் கூறி இருந்தார். இது இவ்வழக்கில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியது.

டியூப்புக்கு  கடிதம்:

டியூப்புக்கு கடிதம்:

இந்த ஆடியோவின் உண்மை தன்மை குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதுதொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் யூ-டியூப் நிறுவனத்துக்கு மீண்டும் ஒரு கடிதம் அனுப்பி உள்ளனர். அதில், வழக்கில் சம்பந்தப்பட்ட ஆடியோவை யூ-டியூப்பில் பதிவு செய்தவர் பற்றிய தகவலை தெரிவிக்குமாறு கேட்டுள்ளனர்.

90 சதவீத வீடியோ நிறுத்தம்:

90 சதவீத வீடியோ நிறுத்தம்:

ஏற்கனவே, பொள்ளாச்சி சம்பவம் தொடர்புள்ள வீடியோக்களை நீக்கக்கோரி கடிதம் அனுப்பியதில் 90 சதவீத வீடியோக்கள் நீக்கப்பட்டுவிட்டதாகவும், மார்பிங் செய்த ஒரு சில வீடியோக்கள் மட்டும் இருப்பதாக யூ-டியூப் நிறுவனம் சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு விளக்கம் அளித்துள்ளது.

Best Mobiles in India

English summary
Pollachi case CBCID Again letter to Youtube company : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X