சிக்னல் மீறலுக்கு அபராதம் இல்லை-விக்ரம் லேண்டருக்கு போலீசார் டுவீட்.!
சிக்னலை மீறியத்திற்காக உனக்கு அபராதம் விதிக்கப்படாது டியர் விக்ரம் லேண்டர் தயவு செய்து பதில் கூறு என்று போலீசார் நகைச்சுவையாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளனர். இது சமூக வலைத்தளத்தில் உள்ளவர்களையும் ஒரு கணம் சிந்திக்கவும் சிரிக்கவும் வைத்துள்ளது இந்த பதிவு. இதுகுறித்து நாம் காணலாம்.

விக்ரம் லேண்டர் குறித்து உலகமே கடந்த 2 நாட்களாக பரபரப்பாக பேசப்பட்டது. மேலும், விக்ரம் லேண்டர் ஒரு புரியாத புதிராகவும் இருந்து வந்தது.
மேலும், சந்திராயன்-2 திட்டத்தில், தரையறங்கும் முன் நிலவின் 2.1 கி.மீ முன்பாக சிக்னல் துண்டிக்கப்பட்டு மாயமாகியது.

நிலவின் சுற்றுவட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட்ட சந்திராயன்-2 ஆர்பிட்டர் மூலம் விக்ரம் லேண்டர் இருப்பிடிம் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், நிலவின் தென் துருவத்தில் சரியாக தரையிறங்க வேண்டிய இடத்தில் தரையிறங்கியது. மேலும், அது வேமாக தரையிறங்கினாலும் அது சேதமடையவில்லை.

இந்நிலையில் விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவருடன் விடுபட்ட சிக்னலை பெற இஸ்ரோ முயற்சி செய்து வருகின்றது. இஸ்ரோவின் முயற்சியை பல்வேறு நாடுகளும் பாராட்டி வருகின்றனர் .

இந்நிலையில், நாக்பூர் நகர காவல் துறையினர் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் லேண்டர் குறித்து ஒரு நகைச்சுவை டுவீட்டை பதிவிட்டு அசத்தியுள்ளனர்.

டியர் விக்ரம் தயது செய்து பதில் கூறு, சிக்னலை மீறி விட்டத்தகாக நாங்கள் என் மீது அபராத் விதிக்க போவதில்லை என்றும் பதிவிட்டுள்ளனர்.
செப்டம்பர் 1ம் தேதயிலிருந்து நாடு முழுவதும் புதிய மோட்டார் வாகன சட்டத்தின் படி பத்து மடங்கு அதிகமாக அபராதத் தொகை விதிக்கப்பட்டு வருகின்றது.

இதற்கு பதிலளிக்கும் வகையில், பெங்களூர் நெட்டிசன்கள் நிலா உங்கள் எல்லை பகுதி கிடையாது. அது பெங்களூரில் எல்லை பகுதியில் வருகின்றது. விக்ரமிடம் இன்ஸ்சூரன்ஸ் இல்லை. அதனால் ரூ.2000 ரூபாய்காகக பயப்படுகின்றான் என்றும் பதிவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications